Breaking News Reliance Starlink Partnership

Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி

54 0

Reliance Starlink: தொலைதொடர்பு சேவை பிரிவில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் உள்ளிட்ட எந்த நிறுவனம் வேண்டுமானாலும் போட்டிக்கு வரலாம் என, ரிலையன்ஸ் குழும தலைவர் அம்பானி தெரிவித்துள்ளார்.

Reliance Starlink: தொலைதொடர்பு துறைக்கு வரும் நிறுவனங்கள் எதுவானாலும், இந்திய மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி வலியுறுத்தியுள்ளார்.

போட்டிக்கு நாங்கள் தயார் – மஸ்கிற்கு ரிலையன்ஸ் பதில்

இந்திய தொலைதொடர்பு சேவைக்குள் எலான் மஸ்க் தலைமையிலான ஸ்டார்லிங்க் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனத்தின் போட்டியையும் வரவேற்கிறோம் என, ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது. அதேநேரம், அனைத்து நிறுவனங்களும் நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமம் மற்றும் இந்திய சந்தை தொடர்பான எலான் மஸ்கின் அண்மை கால கருத்து தொடர்பான இந்த அறிக்கையில், ”வகுக்கப்பட்டுள்ள சட்டவிதிகளுக்குட்பட்டு முன்னெடுக்கப்படும் முதலீடுகள் மற்றும் கண்டுபிடிப்புகள், உள்ளூர் மற்றும் வெளிநாடு என எங்கிருந்து வந்தாலும் நாங்கள் ஆதரிப்போம்” என ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

”இந்தியர்களுக்கு சேவையாற்ற வேண்டும்”

மேலும், “தொலைதொடர்பு துறைக்குள் வரும் ஜியோ உள்ளிட்ட எந்தவொரு நிறுவனமும், நாட்டின் சட்டம் மற்றும் கொள்கைகளை பின்பற்ற இந்திய மக்களுக்கு சேவையாற்றிட வேண்டும். இந்திய அரசு கூறியுள்ளபடி, இந்தியர் அல்லது வெளிநாட்டவர் என எந்தவொரு விண்ணப்பதாரருக்கும் ஒரே மாதிரியான செயல்முறையே பின்பற்றப்படுகிறது. ஜியோவின் சொந்த செயற்கைக்கோள் சேவைகளும் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. நாங்கள் போட்டிக்கு ஒருபோதும் அஞ்சியதில்லை. வாடிக்கையாளருக்கு யார் சிறந்த சேவை செய்கிறார்கள் என்பதற்கான உண்மையான சோதனையாகவே அதைக் கருதுகிறோம். ஜியோவே 2016-ல் ஒரு வாடிக்கையாளர் கூட இல்லாமல், இந்தியாவின் நெரிசல் மிகுந்த தொலைத்தொடர்பு சந்தையில் ஒரு புதிய நிறுவனமாக நுழைந்தது. வெறும் பத்து ஆண்டுகளில், 53 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது” என ரிலையன்ஸ் குழுமத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளாக முயற்சிக்கும் ஸ்டார்லிங்க்

எலான் மஸ்க் தலைமையிலான ஸ்டார்லிங்க் நிறுவனம் சர்வதேச அளவில், செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்திய சந்தையிலும் தனது சேவையை தொடங்க 5 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சித்து வருகிறது. முதற்கட்ட அனுமதிகள் கிடைத்த நிலையில் தேவையான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்திய பிறகும், இறுதிகட்ட பாதுகாப்பு ஒப்புதல் உள்ளிட்டவை மத்திய அரசு சார்பில் இதுவரை அவருக்கு கிடைக்கப்பெறவில்லை. இதனால் உள்ளூர் சந்தையில் தனது வணிக சேவையை தொடங்க முடியாத நிலையில் ஸ்டார்லிங்க் தவித்து வருகிறது.

அம்பானி மீது எலான் மஸ்க் காட்டம்

இந்நிலையில் அண்மையில் சமூக வலைதளத்தில் எலான் மஸ்க் வெளியிட்டு இருந்த ட்விட்டர் பதிவில், “பெயர் குறிப்பிடப்படாத சக்திவாய்ந்த வணிக நலன்கள் ஸ்டார்லிங்க் இந்தியாவில் நுழைவதைத் தடுக்க முயற்சிப்பதாக” குற்றம்சாட்டினார். மற்றொரு பதிவில், “கோடீஸ்வரர் முகேஷ் அம்பானிதான் இந்தியாவின் உண்மையான தலைவரா” என்று நேரடியாக கேள்வி எழுப்பினார்.  இந்த குற்றச்சாட்டுகளை நிராகைரித்த மத்திய அரசு, :தனது செயற்கைக்கோள் தகவல் தொடர்பு விதிகள் நியாயமானவை மற்றும் பாகுபாடற்றவை” என விளக்கமளித்தது. இந்தியாவின் செயற்கைக்கோள் இணையச் சந்தையில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சேவைகளைத் தொடங்கத் தயாராகி வருவதால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Related Post

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!

Posted by - ஜனவரி 20, 2025 0
சஞ்சய் ராய் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தண்டனை விவரம் இன்று (திங்கள் கிழமை) அறிவிக்கப்பட்டது. நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை…

மத்திய பிரதேசத்தில் மனைவிகளுக்கிடையே தகராறில் கணவர் மீது துப்பாக்கி சூடு

Posted by - பிப்ரவரி 20, 2023 0
போபால் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்தவர் தாகர்கான். இவருக்கு அஞ்சும், ஹூமாகான் என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி அஞ்சும் என்பவருடன்…

மேற்கு வங்கத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்… மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதால் பரபரப்பு

Posted by - ஆகஸ்ட் 28, 2024 0
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலகக்கோரி பாஜக முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பயிற்சி பெண் மருத்துவர்…

நித்தியானந்தவின் புதிய திட்டம்

Posted by - பிப்ரவரி 16, 2023 0
புதுடெல்லி: சாமியார் நித்யானந்தா சமூக வலைதளங்கள் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்களிடம் சொற்பொழிவாற்றி வருகிறார். இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்திருந்த அவர்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன