stalindmktvk

RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி

106 0

தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது தொடர்பாக ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

தவெகவில் இணையும் அதிமுக எம்எல்ஏக்கள்

தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்றுள்ள நிலைலில், அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருகிறார்கள். இதில் அதிமுக எம்எல்ஏக்கள் குதிரை பேரம் மூலம் தவெக அரசு இழுத்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அந்த வகையில் கடந்த வாரம் தவெகவில் இணைந்த கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறும்போது தங்களை தவெகவில் இணையுமாறு தன்னை அணுகியதாகவும், இதனையடுத்தே தவெகவில் இணைந்துள்ளதாக கூறினார்.

இந்த பேச்சு குதிரை பேரமாக இருப்பதாக எதிர்கட்சிகள் சார்பாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆதாரத்தோடு தமிழக ஆளுநரை திமுக நிர்வாகிகள் சந்தித்து புகார் அளித்தனர். இதனையடுத்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,

விஜய் மீது குதிரை பேர புகார்

குதிரை பேரத்தில் முதலமைச்சர் விஜய் ஈடுபட்டார் என்பதற்கு கடந்த 4ஆம் தேதி ஆளுநரை சந்தித்து புகார் கொடுத்தோம். அந்த புகாரில் வைகோவின் பேச்சை வைத்து புகார் கொடுத்துள்ளோம். அதேபோல், தற்போது எம் ஆர் விஜய்பாஸ்கர்  வெளிப்படையாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருக்கிறார். இவையெல்லாம் குதிரை பேர ஊழலுக்கு தகுந்த ஆதாரங்கள் என சுட்டிக்காட்டும் வகையில் திமுக சார்பில் ஆளுநர் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

குதிரை பேர விவகாரத்தில் தமிழக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு உண்மைக்கு மாறாகவும் கரூர் வழக்கை பாதிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது என்பதை தெளிவாக சிபிஐயிடமும், கருர் வழக்கை கண்காணிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி இடமும் மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் உண்மைக்கு மாறாகத்தான் பேசி வருகிறார். கொளத்தூரில் கொத்து பரோட்டா என விஜய் கீழ்த்தரமாக பேசியுள்ளார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக பதில் சொல்லி இருக்கிறார். நாங்கள் சாப்பிட்டு போட்டு எச்சை இலை என பேசி இருக்கிறார்.

கரு நாகத்தை விட்டு விட்டோம்

விஜய் கீழ்த்தரமாக பேசினால், இனி நாங்களும் இப்படி பேச வேண்டி வரும். இனிமேல்  கூட்டணியில் இருந்த கட்சி தலைவர்கள் குறித்து பேச வேண்டாம். இதற்கு பதில் சொல்லும்போது முக்கியமான பிரச்சனைகள் பேசப்படாமல், திசை திரும்பி விடுகிறது. இப்படித்தான் கடந்த தேர்தலின் போது செத்த பாம்பை அடித்து விட்டு, கரு நாகத்தை விட்டு விட்டோம். அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

Related Post

“கட்சிக்காக பேசினேன்.. நீக்குவார்கள் என எதிர்ப்பார்க்கல!” செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

Posted by - செப்டம்பர் 6, 2025 0
மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில்  நேற்று வெளிப்படையாக தெரிவித்தேன், கட்சியிலிருந்து நீக்குவதற்கு முன் ஜனநாயக அடிப்படையில் கட்சியிலிருந்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும் என்றார். கட்சி பொறுப்பில் இருந்து…
election e1773643444860

இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் – டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு?

Posted by - மார்ச் 16, 2026 0
TVK Vijay: டெல்லியில் சிபிஐ விசாரணையின் மூன்றாவது கட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பியுள்ளார். TVK Vijay: கரூர் துயரம் தொடர்பாக சிபிஐ…

TVK Vijay: ‘உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு’ .. விஜய் ஆதரவாக இளையராஜா.. மாறும் களம்!

Posted by - மே 1, 2026 0
விஜய்க்கு சினிமாத்துறையில் இருந்து ஆதரவுக்குரல் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கொடுக்கப்படுகிறது. சின்னத்திரை, பெரியதிரை பல பிரபலங்கள் அவருக்காக வீதிதோறும் பரப்பு மேற்கொண்டனர். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா…

2018ல் அரசியல் எண்ட்ரி.. 2022ல் அமைச்சர்.. உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணம்!

Posted by - டிசம்பர் 13, 2022 0
Udhayanidhi : அண்மையில், திமுக இளைஞரணி செயலாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாகவும், அவருக்கு சிறப்பு திட்ட…
vvv

ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!

Posted by - மார்ச் 16, 2026 0
கேரளா, பாண்டிச்சேரி மற்றும் அசாம் ஆகிய 3 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாததால் அங்குள்ள அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக களப்பணியைத்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன