Monsoon Cyclone Breaking News in Tamil

TN Weather News: சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் – தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை

40 0

Tamil Nadu Weather Update (01-11-2026): மேற்கு-மத்திய வங்காள விரிகுடாப் பகுதியில் இன்று கடுமையான புயல் உருவாக அதிக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Tamil Nadu Weather Update (01-11-2026): தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது என்ற வானிலை மையத்தின் எச்சரிக்கை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

இன்று உருவாகிறது தீவிர புயல்:

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவுப்படி அட்சரேகை 10.9°N மற்றும் தீர்க்கரேகை 87.5°E அருகே மையம் கொண்டிருந்தது. இது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 830 கி.மீ., விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே 880 கி.மீ., மச்சிலிப்பட்டினத்திற்கு (ஆந்திரா) தென்கிழக்கே 900 கி.மீ., மற்றும் ஒங்கோலுக்கு (ஆந்திர்ஃஆ) கிழக்கு-தென்கிழக்கே 950 கி.மீ. தொலைவில் அமைந்திருந்தது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நண்பகலுக்குள் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையாகவும், நவம்பர் 1 ஆம் தேதி நள்ளிரவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடாப் பகுதியில் புயலாகவும், நவம்பர் 2 ஆம் தேதி மேற்கு-மத்திய வங்காள விரிகுடாப் பகுதியில் கடுமையான புயலாகவும் வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. இது நவம்பர் 3 ஆம் தேதி அதிகாலை வேளையில் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகிலுள்ள மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை அடைவதற்கும், பின்னர் நவம்பர் 3, 2026 காலைக்குள் நெல்லூர் மற்றும் நர்சாபூர் இடையே மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்துடனும், சில சமயங்களில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் திடீர் காற்று வீச்சுடனும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

அடுத்த இரண்டு நாட்களுக்கான வானிலை:

02-11-2026: நீலகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

03-11-2026: கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

01-11-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

02-11-2026 முதல் 04-11-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

சென்னை பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

01-11-2026 முதல் 03-11-2026 வரை: வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக் கடல் பகுதிகள்:

01-11-2026: தெற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடலின்
தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியமேற்கு வங்கக்கடலின் இதர தெற்கு மற்றும் பகுதிகள் தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு-தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Related Post

இவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என எந்தக் கடவுளும் சொல்லவில்லை -நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted by - ஜனவரி 25, 2023 0
2021-ஆம் ஆண்டு இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பி மலையாளத்தில் உருவான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி…
ADMK DMK

ADMK DMK: ”விஜய் ஆட்சி நம்ம கண்ட்ரோல்ல தான் இருக்கணும்” அதிமுகவிற்கு சட்ட உதவிகளை வழங்க திமுக முடிவு?

Posted by - மே 16, 2026 0
ADMK DMK: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி தனிப்பெரும்பான்மை பெறுவதை தடுக்க, அதிமுகவிற்கு சட்ட உதவிகளை வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாம். ADMK DMK: முதலமைச்சர் விஜய் தலைமையிலான…

Dengue Fever | அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு… தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

Posted by - அக்டோபர் 8, 2025 0
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏடிஸ் வகை கொசுக்களால், டெங்கு பாதிப்பு உயர்ந்துள்ளது. டெங்கு…

மிரளப் போகும் கோவை! களத்தில் இறங்கும் விஜய்! என்ன ப்ளான்? சம்பவம் லோடிங்!

Posted by - ஏப்ரல் 26, 2025 0
கோவையில் இன்றும் நாளையும் என 2 நாட்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெற உள்ளது. கோவையில் இன்றும் நாளையும் என 2 நாட்கள்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன