TNPSC Age Limit: அரசுப் பணிகளில் நேரடி நியமனத்தினற்கான வயது உச்ச வரம்பினை மேலும் 5 ஆண்டுகளுக்கு உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு
அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
போட்டித் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று வயது உச்ச வரம்பு உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ள முதல்வர், வயது உச்ச வரம்பு இன்று முதல் 5 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஏற்கெனவே உள்ள வயது சலுகையோடு கூடுதலாக அமையும் என்றும் வயது வரம்பு முடிவடையும் நிலையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான போட்டித் தேர்வர்கள் பயனடைவார்கள் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
உயத்தப்பட்ட புதிய வயது உச்சவரம்பு விவரம்
* குரூப் 1 தேர்வு எழுதும் பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 37 ஆகவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது 42 ஆகவும் மாற்றுத்திறனாளி பொதுப்பிரிவினருக்கு 47 ஆகவும் மாற்றுத்திறனாளி ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 52 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
* குரூப் 2, 2A தேர்வு எழுதும் பொதுபிரிவினருக்கான வயது வரம்பு 35 ஆகவும் மாற்றுத்திறனாளி பொதுப்பிரிவு வயது வரம்பு 45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை என்பது நீடிக்கும்.
* குரூப் 4 தேர்வை எழுதும் உயர் கல்வி தகுதி பிரிவினர் யாருக்கும் வயது உச்ச வரம்பு இல்லை.
* குரூப் 4 தேர்வை எழுதும் உயர் கல்வி தகுதி இல்லாத பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 30ல் இருந்து 35ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* குரூப் 4 தேர்வை எழுதும் உயர் கல்வி தகுதி இல்லாத இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பு 32ல் இருந்து 37ஆக உயர்த்தப்பட்டுள்ளது.