ttv aiadmk

TTV Dhinakaran : அதிமுக-வில் நடப்பது என்ன ?

127 0

’அதிமுகவை மீட்க தான் அமமுக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்று முழங்கிய டிடிவி தினகரன், அதற்கான வாய்ப்புகள் கைகூடும் நிலையில் அமைதியாக இருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது’

சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததில் இருந்தே அதிமுக பிளவை நோக்கிச் செல்லத் தொடங்கியது.  எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முக உள்ளிட்டோர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அதிலும் அதிமுகவின் முகங்களாக இருந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தவெக-வில் சென்று இணைந்தனர். இதனால், அதிமுக திக்கு தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் இறங்கிவராத குணத்திற்கு எதிராக அந்த கட்சியில் பல நிர்வாகிகள் வெடித்தெழுந்தனர். இன்னமும் அதிமுகவில் எஞ்சியிருக்கும் முக்கிய நிர்வாகிகள், இங்கேயே தொடரலாமா? அல்லது வேறு கட்சிக்கு செல்லலாமா என்ற மனக்குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

அதிமுகவை மாற்ற தலைமையில் மாற்ற வேண்டும்

இப்படியான சூழலில்தான் கட்சியை காப்பாற்ற வேண்டுமென்றால், தலைமை மாற வேண்டும் என்ற எண்ணம் அடிமட்ட அதிமுக தொண்டர்கள் வரை ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அதற்கு கட்சி மீண்டும் டிடிவி தினகரனின் கைகளுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், அதிமுகவை மீட்பதற்காகவே அமமமுகவை தொடங்கியதாக சொல்லியிருந்த டிடிவி தினகரன், அவருக்கான வாய்ப்புகள் தேடி வரும் சூழலில், அமைதியான நிலையில் இருந்து, எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து வருவது பலருக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

அதிமுக-வை கைப்பற்றும் படலம் தொடக்கம்

அவர் வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாகவும், அதிமுகவுடனே தான் இருப்பதாகவும் கூறினாலும், மறைமுகமாக அதிமுகவை கைப்பற்றும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதிமுகவும் அமமுகவும் வெவ்வெறு இல்லை இரண்டும் ஒன்றுதான் என்று சமீபத்தில் பேட்டி அளித்திருந்ததும் இதை குறிப்பிட்டுதான்.

ஆனால், அவர் அதிமுகவை கைப்பற்றுவதற்கு பதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை இன்னொரு அதிமுக-வாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதற்காக அதிமுக நிர்வாகிகளிடம் டிடிவி தினகரனுக்கு நெருக்கமான டீம் பேசிவருவதாகவும், விரைவில் பெரிய தலைகள் அமமுகவை நோக்கி நகரும் சூழல் வரும் என்றும் தெரிவிக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அமமமுகவை நோக்கி அதிமுக நிர்வாகிகள் செல்லத் தொடங்கிய பின்னரே, அதிமுகவை ஒட்டுமொத்தமாக கைப்பற்றும் அவரது திட்டத்தை டிடிவி தினகரன் செயல்படுத்தத் தொடங்கவுள்ளார் என்பது விவரம் அறிந்தவர்களின் தகவலாக இருக்கிறது.

முதலில் குறி வைக்கப்படும் ஏரியாக்கள்

இதற்காக முதலில் டெல்டா மாவட்டம், தென் மாவட்டங்களில் உள்ள அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் தனித் தனியாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் கூட டிடிவி தினகரனிடம் கட்சி சென்றால் பாதுகாப்பாக இருக்கும் என்றும், கட்சியை தோல்வியில் இருந்து மீட்டெடுக்கும் தேவதூதராக டிடிவி தினகரனே இருப்பார் எனவும் அவர்கள் நம்பத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கான மெனக்கெடல்களும் திரைமறைவில் நடைபெற்று வருகிறது. அதனால்தான், அதிமுக அடித்தளமே ஆட்டம் கண்டிருக்கும் நிலையில், அந்த கட்சிக்கு எதிராகவும், பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு எதிராகவும் கருத்துச் சொல்லாமல், ஆதரவு நிலைப்பாடு எடுத்து நிதான அரசியல் செய்து வருகிறார் டிடிவி தினகரன்.

சட்டமன்றம் முடிந்த பின்னர் அதிமுகவில் அடுத்த பூகம்பம் எழத் தொடங்கும். அதில், டிடிவி தினகரனின் பங்கு பெரிதாக இருக்கும்

Related Post

Resigns e1781605664644

C Vijayabaskar: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்! அதிமுக-வில் இன்னொரு விக்கெட்!

Posted by - ஜூன் 16, 2026 0
C Vijayabaskar Resigns: முன்னாள் அமைச்சரும், அதிமுக-வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான விஜயபாஸ்கர் தனது விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். C Vijayabaskar Resigns: அதிமுக-வின்…
Breaking News Conference Graphic 1

LocalBody Election: உள்ளாட்சி தேர்தலுக்கு நோ..! அதிகாரிகளை கொண்டு வேலையை முடிக்க அரசு திட்டம் -என்ன ஆச்சு?

Posted by - அக்டோபர் 21, 2026 0
LocalBody Election: உள்ளாட்சியில் அடுத்த 6 மாதங்களுக்கு தேர்தல் நடத்த முடியாத வகையில் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. LocalBody Election: உள்ளாட்சி நிர்வாகத்தை அடுத்த…

தவெக-வுடன் கூட்டணியா? தயக்கம் காட்டும் அரசியல் கட்சிகள் – என்ன செய்யப்போகிறார் விஜய்?

Posted by - ஜூலை 28, 2025 0
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், விஜய்யுடன் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டி வருவதால் தவெக என்ன செய்யப்போகிறது? என்ற…
Generated Image November 27 2025 10 14AM

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!

Posted by - நவம்பர் 27, 2025 0
எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். அதிமுகவில் இருந்த எம்ஜிஆர் காலத்து…
Gemini Generated Image atwh1eatwh1eatwh

புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்: காவல்துறை கெடுபிடி! தவெக வியூகம் மாற்றம்? பரபரப்பு தகவல்!

Posted by - ஏப்ரல் 1, 2026 0
புதுச்சேரியில் விஜய்க்கு ‘செக்’ வைத்த காவல்துறை? 19 இடங்களுக்கு அனுமதி மறுப்பு! புதுச்சேரி: தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலிலும் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன