dmk tvk

TVK Vijay: ‘பொது அறிவு இருக்காது’ – தவெகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை விமர்சித்த வினோதினி!

186 0

இந்த சட்டமன்ற தேர்தலில் வினோதினி வைத்தியநாதன் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். அவர் தவெகவுக்கு வாக்களித்த பெண்களை சரமாரியாக சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் அறிவார்ந்த சமூகம் என்பதெல்லாம் முடிஞ்சு போய்விட்டதாக  என நடிகை வினோதினி வைத்தியநாதன் ஆதங்கமாக தெரிவித்துள்ளார்

வினோதினி வைத்தியநாதன் வெளியிட்டுள்ள பதிவில், “பொதுவாக 28-38 வயது தமிழ்நாட்டுப் பெண்கள் தைரியமானவங்களா இருப்பாங்க, பேசுவாங்க. நம்பிக்கையாக இருப்பாங்க. குடும்பத்துக்கு ஒண்ணுன்னா சிங்கமா, புலியா, கரடியா மாறி சண்ட போட்டு அவங்களுக்கு வேணும்கிறத வாங்கிப்பாங்க.  ஆனா, பொது அறிவுன்னு வரும்போதோ ஒரு சிலரைத் தவிர உலக விஷயங்கள தெரிஞ்சிக்குறதுலயோ பின் தங்கியே இருக்காங்க. வேலைக்குப்போகும் பெண்கள் மத்தியிலயும் இதே நிலவரம் தான். அவங்க பள்ளி ஆசிரியையா இருந்தாலும்கூட அவங்களுக்குள்ள குடும்பப்பிரச்சன வீட்டு விவகாரம்னுதான் பேசிப்பாங்க.

பராசக்தி படத்துல வர்ற பண்டரி பாய் கேரக்டர்லாம் சாதாரணமான வாழ்க்கையில பார்க்குறது அரிது. அதுல, 90’ஸ் கிட்ஸ், செல்ல இளவரசியாக வளர்ந்த பெண்கள் கல்யாணத்துக்கு எந்த பிரபலத்தை மேக்கப்புக்கு புக் பண்ணலாம், கல்யாணம் பண்ணிக்க போற ஆள எப்படி தனக்கு ஏத்த மாதிரி மாத்தலாம், ரெண்டு பேரும் சேர்ந்து என்ன மாதிரி ரீல்ஸ் போடலாம். இந்த மாதிரியான விஷயங்களைத்தான் முன்னிலைப்படுத்தறாங்க.

இதுல பலருக்கு அவங்க அமேசான்லயும் மீஷோலயும் ஆர்டர் போடுறதுக்கு ஒரு வருமானம் பத்தாம கடன் வாங்கி கடன் வாங்கி பெரும் கடன் தொல்லைல வேற இருப்பாங்க. இந்த மாதிரியான சூழல்ல திராவிடம், அண்ணா, பெரியார், அம்பேத்கர், தொகுதி மறுவரையறை, பண மதிப்பிழப்பு இதெல்லாம் அவங்களுக்கு தெரியாது. மாசா மாசம் ரூ.1,000 வருதா… நல்லது. பொங்கலுக்கு ரூ.3,000 வருதா… புருஷன் ரூ.20,000 கொண்டு வராரா… இதெல்லாம் வெச்சு தினம் தினம் நாட்கள தள்ளிட்டு இருக்காங்க. இவங்கள்ல பல பேர் லைசன்ஸே காசு குடுத்துத்தான் வாங்கியிருப்பாங்க.

இந்த மாதிரி பெண்கள் விஜய்க்கு வாக்கு அளிக்கலைன்னாதான் ஆச்சர்யம். தான் வளர்ந்து வந்த பருவத்துல பார்த்து ரசித்த, பர்ஸனல் கிரஷ்ஷா இருந்த, ஆதர்ஸ நடிகர். இன்னிக்கு எதிரிகளால சூழப்பட்டிருக்காரு. பாவமா இருக்கு பார்க்க. வலியோட இருக்காரு. எப்படியாவது அவர ஜெயிக்க வைக்கணும். அவரு வந்தா எல்லா பிரச்சனையும் தீர்த்துடுவாரு. அப்படின்னு யாரு சொன்னா? அவரே சொன்னாரே. அதுக்கும் மேல பார்க்க நல்லா இருக்காரு. அவங்க வாழ்க்கையில இல்லாத ஆணா தெரியுறாரு. இதை லாஜிக்னு சொல்றத விட மேஜிக்னு சொல்றதே சரியா இருக்கும்.

இந்த பெண்களோட கணவர்கள் என்ன ஆனாங்கன்னு பார்த்தா, அவங்களும் ஏதாவது ஒரு நடிகரோட ரசிக மனப்பான்மைல இருப்பாங்க. இல்ல, இவங்களுக்கு கம்ப்ளீட் சரண்டர் மோட்ல இருப்பாங்க. இல்ல, என்னத்தையோ பண்ணித்தொலை, என்ன போட்டு டார்ச்சர் பண்ணாம இருந்தா சரின்னு இருப்பாங்க.

இந்தப் பெண்கள் கொத்து கொத்தா போய் தவெகவுக்கு வாக்களிச்சுட்டு வந்து, வீடியோக்கள்ல யாராவது யாருக்கு வாக்களிச்சீங்கன்னு கேட்டா, தனக்கே உரித்தான ஒருவனைப்பற்றி பேசுவது போல ஒரு வெட்கம் கலந்த புன்சிரிப்போட விஜய்க்கு தான் போட்டேன்னு சொல்லுறாங்க. அவங்க தொகுதி வேட்பாளர் பெயர்கூட பலருக்குத்தெரியாது.

இதை நான் ஏன் சொல்றேன்னா… யாரையும் இழிவுப்படுத்த இல்ல.. இந்தப்பெண்களோட  பெரிய அன்பை நான் பலமுறை உணர்ந்து அனுபவித்திருக்கேன்.. இந்தப் பெண்களில் பலர் எனக்குத் தோழிகளா இருக்காங்க… ஆனா இதை நான் ஏன் சொல்றேன்னா… தமிழ்நாடு அறிவார்ந்த சமூகம்னுலாம் 70-80களோட முடிஞ்சு போச்சு. இது விஜயால் உருவான பிரச்சனையல்ல. இன்னிக்கு விஜய் இடத்துல இதே வயது எந்த மாஸ் ஹீரோ இருந்திருந்தாலும் இது இப்படித்தான் நடக்கும். இது நம்ம சமூகத்துல ஆரம்பிச்ச விஷயம்” என வினோதினி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

வினோதினி வைத்தியநாதன் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து கடந்த 2023ம் ஆண்டு விலகிய நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

Generated Image November 08 2025 10 15AM

சொந்த கட்சியினரால் அல்லது மக்களால் திமுக அழியும்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

Posted by - நவம்பர் 8, 2025 0
சென்னை: ‘சொந்த கட்​சி​யின​ரால் அல்​லது மக்​களால் திமுக அழி​யும்’ என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்​டாட்​டம்…

தவெக-வுடன் கூட்டணியா? தயக்கம் காட்டும் அரசியல் கட்சிகள் – என்ன செய்யப்போகிறார் விஜய்?

Posted by - ஜூலை 28, 2025 0
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், விஜய்யுடன் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டி வருவதால் தவெக என்ன செய்யப்போகிறது? என்ற…
fgdf

2026 தமிழ்நாடு அரசியல் ‘திக் திக்’: தவெக எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு ராஜினாமா? தளபதியை தடுக்க கைகோர்க்கும் திமுக – அதிமுக!

Posted by - மே 8, 2026 0
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழகமே பரபரப்பின் உச்சியில் இருக்கும் நிலையில், தற்போது வெளியாகி வரும் தகவல்கள் ரசிகர்களையும் மக்களையும் ஒரே நேரத்தில் குழப்பத்திலும்,…
Generated Image February 03 2026 11 32AM

யாருடன் கூட்டணி.? பிரேமலதா போடும் அரசியல் கணக்கு

Posted by - பிப்ரவரி 3, 2026 0
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், யாருடன் கூட்டணி என எந்த முடிவும் அறிவிக்காமல் தேமுதிக இழுத்தடித்து வருகிறது, எனவே இ ன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய…

விஜய்க்கு போன் போட்ட இபிஎஸ்! 30 நிமிடம் கூட்டணி பேச்சுவார்த்தை! DEAL-ஐ முடித்த பவன் கல்யாண்!

Posted by - அக்டோபர் 8, 2025 0
விஜய்-க்கு போன் போட்ட இபிஎஸ்! வாங்க தம்பி பாத்துக்கலாம் என்ற எடப்பாடி, பொங்கலுக்கு பிறகு வரேன் அண்ணா என்ற விஜய்! அதிமுக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தை பின்னணியில் பவன்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன