tvk cm 2

Vijay Swearing-In: ”ஜோசப் விஜய் ஆகிய நான்” முதலமைச்சர் பதவியேற்பு எப்போ? எங்கே? தேதி குறித்த தவெக!

116 0

Vijay Swearing-In Ceremony: தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் பதவியேற்பு எப்போது? எங்கே? தேதி குறித்த தவெக!

தவெக தலைவர் விஜய் நாளை  (மே 7ஆம் தேதி) முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் 234 தொகுதிகளில் 118 தொகுதிகள் தேவை என்பதால், சில கட்சிகளின் ஆதரவைக் கோரி, தவெக ஆட்சியமைக்கும் என்று தெரிகிறது.

11 உறுப்பினர்கள் ஆதரவு தேவை

குறிப்பாக, தவெக தலைவர் விஜய், 2 தொகுதிகளில் நின்று வெற்றி பெற்றதால் 107 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் 11 உறுப்பினர்களின் ஆதரவை தவெக கோர வேண்டும். இதில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 5 இடங்களிலும் விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 இடங்களிலும் என 11 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இவர்களின் ஆதரவை விஜய் கோருவாரா? அல்லது காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, அமமுக ஆதரவை விஜய் கேட்பாரா என்று மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.

சட்டப்பேரவைக் குழுத் தலைவரான விஜய்

இந்த நிலையில், பனையூரில் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி விஜயை இன்று சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்தனர். அதைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேகரிடம் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு தவெக தலைவர் விஜய் அழைப்பு கடிதம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் (மே 7) தவெக தலைவர் ஜோசப் விஜய்  தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளதாகக் குறிப்பிடத்தக்கது.

Related Post

சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் சென்னையில் போராட்டம்!

Posted by - டிசம்பர் 17, 2025 0
பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்…
%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88

Annamalai: உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி – ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”

Posted by - ஜூன் 1, 2026 0
Annamalai BJP: தமிழ்நாட்டில் அண்ணாமலையை தனது பி டீம் ஆக களமிறக்குவதில் டெல்லி பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறதாம் Annamalai BJP: ஆப்ரேஷன் ”கிறிஸ்துவ மிஷினரி” என்ற பெயரில்…

தவெக-வில் பெரும் சிக்கல்.. பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பாரா விஜய்?

Posted by - அக்டோபர் 13, 2025 0
தவெக-வில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வலுவானவர்களாகவும், நெருக்கடியை திறம்பட சமாளிப்பவர்களாக இல்லாததும் விஜய்க்கு பின்னடைவாக உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியலில்…

விசிகவை ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக.. ”முட்டு கொடுப்பதை நிறுத்திட்டு கட்சியை காப்பத்துங்க பாஸ்”

Posted by - செப்டம்பர் 22, 2025 0
 திமுக மீதான விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தந்த விசிக எம்.எல்.ஏ., ஆளுர் ஷா நவாஸை தவெகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முழு நேரமும் திமுகவிற்கு முட்டுக் கொடுப்பதை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன