அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார்.. சவாலுக்கு சம்மதம் சொன்ன அன்புமணி!

296 0

திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

அமைச்சருடன் விவாதம் நடத்த தயார்:

தமிழ்நாட்டில் திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும்,  அவை குறித்த பட்டியலை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு வழங்குவதுடன், அவருடன் விவாதம் நடத்தவும் தயாராக இருப்பதாகவும் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறார். அவரது துணிச்சலை பாராட்டுகிறேன்; விவாதத்திற்கான அவரது அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன்.

அமைச்சர் முத்துசாமி மட்டுமல்ல  அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,  சிவசங்கர், கோவி செழியன்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட  திமுகவினர் அனைவரும் கூறுவது பொய்கள் தான் என்பதை ஒரு புள்ளி விவரத்தின் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

66 வாக்குறுதிகள்:

திமுக அளித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றப்பட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். பின்னர் 95%, 98%, 99%  என்றெல்லாம் அவர் கூறினார். இது குறித்த உண்மை நிலையை விளக்க வேண்டும் என்பதற்காகத் தான்  விடியல் எங்கே? என்ற தலைப்பில் ஆவணம் ஒன்றை நான் தயாரித்து வெளியிட்டேன். அதில் 66  வாக்குறுதிகள், அதாவது 13% மட்டுமே நிறைவேற்றப்பட்டிருப்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தேன்.

எப்படி 85 சதவீதம்?

அதன்பின் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,  சிவசங்கர், கோவி செழியன் ஆகியோர்  சென்னையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி செய்தியாளர்களை சந்திக்கும் போது, திமுகவின் 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, அவற்றில் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர்.

அதன்படி  பார்த்தால் 72%  வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அதன் பின் எந்த வாக்குறுதியில் நிறைவேற்றப்படாத நிலையில், இப்போது 85% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்க முடியும்? திமுக அரசின் முதலமைச்சராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் வாயில் வந்ததை கூறி விட்டு செல்கிறார்களே தவிர தரவுகளைத் தருவதில்லை.

எவ்வளவு நிதி?

நான் வெளியிட்ட ஆவணத்தில் நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகளையும், அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகளையும் பட்டியலிட்டிருக்கிறேன். திமுக அரசு உண்மையாகவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அவற்றின் வரிசை எண் வாரியாக எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன?  அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? அதனால்   எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? என்ற விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.  இது குறித்து அமைச்சரோ, முதல்வரோ விவாதத்திற்கு வாருங்கள் என்றும் அறைகூவல் விடுத்திருந்தேன். ஆனால், இதுவரை அதற்கு  பதில் கிடைக்கவில்லை.

மோசடிகள்:

இப்போது நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் பட்டியலைத் தருவதாகவும், விவாதத்திற்கு வருவதாகவும் அமைச்சர் முத்துசாமி  கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.  அவரை அழைப்பை  நான் ஏற்கிறேன். அவர் மூலமாகவே திமுக அரசின் மோசடிகள்  வெளிவரட்டும்.  எப்போது, எங்கு விவாதம் என்பதையும் அமைச்சர் முத்துசாமி அறிவிக்கட்டும்.  அவரை விவாத மேடையில் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Post

annamalai

Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக

Posted by - ஜூன் 6, 2026 0
தமிழ்நாட்டில் அண்ணாமலையும் புதிய கட்சி தொடங்க உள்ள நிலையில், பாஜக-வின் வளர்ச்சி கேள்விக்குறியாகி உள்ளது. இந்தியா முழுவதும் பாஜக-வின் ஆதிக்கம் இருந்தாலும் தமிழ்நாடு அவர்களுக்கு சிம்மசொப்பனமாகவே திகழ்ந்து…
TVK IT Wing

TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!

Posted by - செப்டம்பர் 26, 2026 0
தேர்தல் முடிவு வந்ததும், வாக்களித்த விரல் மை காய்வதற்குள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பலருடன் கைகோர்த்து, கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைப் பிடிக்க அலைந்ததை மக்கள் பார்த்தார்களே…
dmk mk stalin

சிட்டியில் DMK ஆட்டம் ஓவர்? 16 தொகுதிகளில் 14ல் சிக்கல், லட்சத்தில் காலி

Posted by - பிப்ரவரி 24, 2026 0
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் காரணமாக, தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை இழந்த மாவட்டமாக சென்னை உருவெடுத்துள்ளது. TN Voters List Election 2026 DMK: சென்னையில் அதிகப்படியான…

‘கீழயே நில்லுங்க – முகத்தை பார்க்க மாட்டேன்’ புஸ்ஸி ஆனந்த் மீது கடும் கோபத்தில் விஜய்..!

Posted by - ஜூலை 31, 2025 0
’விஜயை வைத்து புதுச்சேரியில் முதல்வர் ஆவதுதான் புஸ்ஸி ஆனந்தின் நீண்ட நாள் திட்டம் என்பதை விஜய் மெல்ல, மெல்ல உணரத் தொடங்கிவிட்டார்’தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி…

எல்லா பக்கமும் அணை கட்டிய ஈபிஎஸ்.. தவிக்கும் செங்கோட்டையன் – பதறியடித்து நோ சொல்ல காரணம் என்ன?

Posted by - செப்டம்பர் 26, 2025 0
அதிமுகவின் முழு அதிகாரமிக்க தலைமையாக எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து இருப்பதால், போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் செய்வதறியாமல் தவித்து வருகிறாராம். எடப்பாடி பழனிசாமியை மேலும் பகைத்துக் கொள்ள வேண்டாம்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன