dmk mk stalin

சிட்டியில் DMK ஆட்டம் ஓவர்? 16 தொகுதிகளில் 14ல் சிக்கல், லட்சத்தில் காலி

94 0

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் காரணமாக, தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை இழந்த மாவட்டமாக சென்னை உருவெடுத்துள்ளது.

TN Voters List Election 2026 DMK: சென்னையில் அதிகப்படியான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது, சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு பிரச்னையாக மாறக்கூடும் என கூறப்படுகிறது.

தமிழ்நாடு வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளுக்குப் (SIR) பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, SIR-க்கு முன்பாக 6.41 கோடியாக இருந்த மாநிலத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை, தற்போது 5.67 கோடியாக குறைந்துள்ளது. சுமார் 74 லட்சம் பேரின் பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோரின் பதிவுகள் இரட்டை வாக்குரிமை, புலம்பெயர்வு மற்றும் இறப்பு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான வாக்காளர்களை இழந்த மாவட்டமாக தலைநகர் சென்னை உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சென்னையில் வாக்காளர்கள் விவரம்:

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு பிறகு, சென்னை மாவட்டத்தில் 40 லட்சத்து நான்காயிரத்து 694 ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 28 லட்சத்து 30 ஆயிரத்து 936 ஆக குறைந்தது. அதாவது சுமார் 3 பேரில் ஒருவர் என, மொத்தம் 11 லட்சத்து 73 ஆயிரத்து 758 வாக்காளர் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை இழந்த, முதன்மையான 5 சட்டமன்ற தொகுதிகளும் சென்னை மாவட்டத்திலேயே அமைந்துள்ளன. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே, சென்னையில் உள்ள பல தொகுதிகளில் வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்பட்டன. அந்த குறிப்பிட்ட தொகுதிகளில் தற்போது பல ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டது, வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கருதப்படுகிறது.

அதிக வாக்காளர்களை இழந்த தொகுதிகள்

தமிழ்நாட்டிலேயே அதிகபட்ச வாக்காளர்களை இழந்த தொகுதியாக அண்ணா நகர் உள்ளது. தேர்தல் ஆணைய தரவுகளின்படி, 99 ஆயிரத்து 20 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு முன்பு இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் இருந்து, 35 சதவிகிதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் ஆயிரம் விளக்கு, கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் தியாகராய நகர் ஆகிய தொகுதிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதேநேரம், எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் வேளச்சேரி தொகுதியில் இருந்து மட்டும், அதிகபட்சமாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 829 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

  • அண்ணா நகர் – 99,020 வாக்காளர்கள் நீக்கம்
  • ஆயிரம் விளக்கு –  84,466 வாக்காளர்கள் நீக்கம்
  • கொளத்தூர் – 83,402 வாக்காளர்கள் நீக்கம்
  • வில்லிவாக்கம் – 80,702 வாக்காளர்கள் நீக்கம்
  • தியாகராய நகர் – 80,554 வாக்காளர்கள் நீக்கம்

சென்னை – தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல்:

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் SIR-க்கு முன்பாக இருந்த வாக்காளர் விவரங்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்தவர்கள், இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் மற்றும் நீக்கப்பட்ட பதிவுகள் என ஒட்டுமொத்த எண்ணிக்கை விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதுபோக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதிகளில் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது என்பதும் விவரிக்கப்பட்டுள்ளது.

தொகுதிகள்SIR-க்கு முன்பாகவரைவு வாக்காளர் பட்டியல்இறுதி வாக்காளர் எண்ணிக்கைநீக்கப்பட்ட பதிவுகள்2021 தேர்தலில் வெற்றி வித்தியாசம்
ஆர்.கே. நகர்2,35,2721,78,3561,95,85639,41642,479 வாக்குகள்
பெரம்பூர்2,97,5262,00,1812,22,79274,73454,976 வாக்குகள்
கொளத்தூர்2,90,6531,86,8412,07,25183,40270,384 வாக்குகள்
வில்லிவாக்கம்2,40,4661,42,7061,59,76480,70237,237 வாக்குகள்
திரு.வி.க. நகர்2,23,5711,64,5281,78,79344,77855,013 வாக்குகள்
எழும்பூர்1, 97,4651,22,6071,34,87962,58638,768 வாக்குகள்
ராயபுரம்1,98,5761,46,8651,56,93141,64527,779 வாக்குகள்
துறைமுகம்1,80,3411,10,5171,16,89663,44527,274 வாக்குகள்
சேப்பாக்கம்2,40,0871,50,8461,63,88676,20169,355 வாக்குகள்
ஆயிரம் விளக்கு2,38,3741,41,3931 ,53,90884,46632,462 வாக்குகள்
அண்ணா நகர்2,80,4221,62,1351,81,40299,02027,445 வாக்குகள்
விருகம்பாக்கம்2,85,9471,75,1231,96,53689,41118,367 வாக்குகள்
சைதாப்பேட்டை2,73,7171,86,4892,00,69773,02029,408 வாக்குகள்
தி,.நகர்2,35,4971,39,4981,54,94380,554137 வாக்குகள்
மயிலாப்பூர்2,69,2601,81,5921,94,73174,52912,633 வாக்குகள்
வேளச்சேரி3,17,5201,89,9992,11,6911,05,8294,352 வாக்குகள்

சிட்டியில் திமுகவின் ஆட்டம் ஓவர்?

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுகவே நேரடியாக களம் கொண்டு, ஒட்டுமொத்த மாவட்டத்தையும் தன்வசப்படுத்தியது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோரோடு அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மா. சுப்ரமணியம் ஆகியோரும் அடங்குவர். அதேநேரம், 14 தொகுதிகளில் தற்போது நீக்கப்பட்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கையை காட்டிலும், மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தியாகராய நகரில் வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்திலும், வேளச்சேரியில் 4,352 வாக்குகள் வித்தியாசத்திலுமே திமுக வெற்றியை ஈட்டியுள்ளது. இந்நிலையில், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சென்னை மாவட்டத்தில் திமுகவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருமா? அல்லது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமையுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

ஸ்டார் தொகுதிகள்

  • முதமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியிலிருந்து 83,402 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன
  • துணை முதலமைச்சர் உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதியிலிருந்து 76,201 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன
  • அமைச்சர் மா.சுப்ரமணியனின் சைதாப்பேட்டை தொகுதியிலிருந்து 73,020 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன
  • அமைச்சர் சேகர்பாபுவின் துறைமுகம் தொகுதியிலிருந்து 63,445 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன

Related Post

ASS

ஓட்டு மிஷினில் 16வது இடம் விஜய்க்கா.? நோட்டாவிற்கா.? நடந்தது இது தான்- தேர்தல் ஆணையம் லேட்டஸ்ட் அப்டேட்

Posted by - ஏப்ரல் 19, 2026 0
பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு 16வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது ஏன் எனவும், 16வது எண் நோட்டாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.…
ops 2

திமுகவில் இணைந்த அதிமுக மாஜி முதலமைச்சர்

Posted by - பிப்ரவரி 27, 2026 0
அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் தனித்து செயல்பட்டு வந்தவர், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில்…
wert

திமுக மாணவரணி செயலாளர் மாற்றம் – காரணம் என்ன ?

Posted by - மார்ச் 15, 2026 0
நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, 2021ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக செய்தி தொடர்பு இணை…
vijay cm

TVK Vijay: எதுக்குயா தவெக? திமுக, அதிமுகவே ஆண்டுட்டு போலாமே..! தூயசக்தி பிராண்டை இழக்கும் CM விஜய்?

Posted by - மே 26, 2026 0
TVK Vijay: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசியல் நிலைப்பாடுகளை கண்டு, இதற்கு திமுக மற்றும் அதிமுகவே தமிழ்நாட்டை ஆளலாமே என நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.TVK…
aiadmkvstvk

அதிமுகவில் அடுத்த அதிர்ச்சி யார்? TVK-வில் இணைய காத்திருக்கும் MLA-க்கள் யார்? 🔥

Posted by - ஜூன் 30, 2026 0
ADMK MLA JOIN TVK : சட்டமன்ற தேர்தல் முடிவால் அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் ஒன்றன் பின் ஒன்றாக எம்எல்ஏ பதவி விலகி வரும் நிலையில்,…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன