milk

ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அலைந்த பரிதாபம்- ½ லிட்டர் பாலை 100 ரூபாய்க்கு விற்றனர்

361 0

சென்னை:

‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் 3 அடி வரை மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் வடியாத நிலையில், பல இடங்களில் போக்குவரத்து முடங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை யில் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பெரும் இன்னலை சந்தித்தனர். சென்னையில் வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் பகுதி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, அம்பத்தூர், மயிலாப்பூர் உள்பட பல்வேறு இடங்களில் ஆவின் பால் வினியோகம் பாதிக்கப்பட்டது.

ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அலைந்த பரிதாபம்- ½ லிட்டர் பாலை 100  ரூபாய்க்கு விற்றனர் | It's a pity that people wandered around without  getting milk - ½ liter of milk was sold for 100 ...
சென்னையில் ஆவின் பாலை பொருத்தவரை 14.75 லட்சம் லிட்டர் பால் தினசரி வினியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் தொடர் மழை காரணமாக, சென்னை மற்றும் புறநகரில் பெரும்பாலான இடங்களில் நேற்று காலையில் வினியோகம் மிகக் குறைவாகவே இருந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே பால் வினியோகம் செய்யப்பட்டது. இந்த பாலை வாங்க பொதுமக்கள் நெடுந்தொலைவு வரை வரிசையில் காத்திருந்தனர். ஆவின் பால் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட் வினியோகமும் பாதிக்கப்பட்டது.

இது குறித்து சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறும்போது, “ஆவின் பால் மட்டுமின்றி தனியார் பால் பாக்கெட்டும் கிடைக்கவில்லை. சில இடங்களில் அரை லிட்டர் பால் 100 ரூபாய்க்கு விற்றனர். மக்களின் தேவையை தெரிந்து கொண்டு 4 மடங்கு விலையை உயர்த்தி விற்றனர்.

எனவே, அத்தியாவசிய தேவையான பாலை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். ஆவின் பால் வினியோகம் செய்யக்கூடிய லாரி ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் வாகனங்களை நேற்று இயக்கவில்லை. இதனால் மாநகர பஸ்கள் மூலம் ஆவின் பால் மாதவரம் பகுதியில் வினியோகம் செய்யப்பட்டது. ஆவின் பால் இன்றும் பல இடங்களில் தாமதமாக சப்ளை செய்யப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் பால் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்து நின்றனர்.

இது குறித்து ஆவின் அதிகாரிகள் கூறும்போது, “அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய பால் பண்ணைகளில் மழைநீர் பாதிப்பு ஏற்பட்டது. இது தவிர மழையால், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவியது. இதனால் பால் விநியோகம் பாதித்தது. இன்று ஆவின் வினியோகம் சீராகி விடும்” என்றனர்.

ஆவின் பால் அதிக விலைக்கு விற்பது குறித்த புகாரை தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Related Post

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை தேநீர்

Posted by - டிசம்பர் 11, 2023 0
புதுணர்வு தரும் பானமான தேநீர், உலக அளவில் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படுகிறது. காலையில் எழுந்ததும் தேநீர் பருகாவிட்டால், பலருக்கும் அன்றைய நாள் முழுமை பெறாது. கலாசாரம் மற்றும்…

கோவில்:நாச்சியார்கோவில் அருள்மிகு ஆகாச மாரியம்மன் திருக்கோயில்….

Posted by - ஜூன் 5, 2024 0
திருவிழா: வைகாசி அமாவாசையைத் தொடர்ந்து நாச்சியார்கோவிலில் ஆகாச மாரியம்மனுக்குப் பதிமூன்று நாட்களுக்குத் திருவிழா நடைபெறுகிறது. தினம் தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன்  அருளாசி வழங்குகிறாள். தல சிறப்பு:…
death 1

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்

Posted by - டிசம்பர் 28, 2023 0
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில்…

புஸ்ஸி ஆனந்த் இல்ல, விஜய்க்கு அரசியல் நகர்வை வகுத்து கொடுக்கும் பெரிய புள்ளி.. யாரு சாமி இவரு?

Posted by - ஜனவரி 28, 2025 0
விஜயின் அரசியல் பயணத்தை பரந்தூருக்கு முன், பின் என பிரித்துக் கொள்ளலாம். முதல் அரசியல் மாநாடு சாதாரணமான நடிகருக்கு கூடிய கூட்டம் என சொல்லி முடித்து விட்டார்கள்.…
%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95

தவெக மேடையில் ஆடல், பாடல்.. விஜயபாஸ்கரை விட்டு விளாசும் விர்ச்சுவல் வாரியர்ஸ்!

Posted by - ஆகஸ்ட் 30, 2026 0
புதுக்கோட்டையில் தவெக 100 நாள் ஆட்சி சாதனை நிகழ்ச்சியில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதற்கு கண்டனம் குவிந்து வருகிறது. தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன