%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95

தவெக மேடையில் ஆடல், பாடல்.. விஜயபாஸ்கரை விட்டு விளாசும் விர்ச்சுவல் வாரியர்ஸ்!

130 0

புதுக்கோட்டையில் தவெக 100 நாள் ஆட்சி சாதனை நிகழ்ச்சியில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதற்கு கண்டனம் குவிந்து வருகிறது.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக- அதிமுக ஆகிய பலம்பெரும் கட்சியை வீழ்த்தி தவெக ஆட்சியைப் பிடித்துள்ளது.

விஜயபாஸ்கர் மீது தொடரும் விமர்சனம்:

தவெக வெற்றி பெற்ற பிறகு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சியில் இருந்தும் பலரும் மேல்மட்டம் முதல் கீழ் மட்டம் வரை கட்சியில் இணைந்தனர். குறிப்பாக, அதிமுக-வில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர்.

அதிமுக-வினர் தொடர்ந்து தவெக-வில் இணைந்து வருவது தவெக-விற்கு பின்னடைவைாகவும் விமர்சனமாகவும் உள்ளது. குறிப்பாக, குட்கா வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கரை கட்சியில் சேர்த்தது மிகப்பெரிய விமர்சனத்தை தவெக மீது உண்டாக்கியது.  தவெக-வில் இணைந்தது முதலே தினசரி விதம், விதமான அரசியல் ஸ்டண்ட்களை விஜயபாஸ்கர் மேற்கொண்டு வருகிறார்.

ஆடல், பாடல்:

 

புதுக்கோட்டையில் நடந்த தவெக ஆட்சியின் 100 நாள் கொண்டாட்டத்தின்போது விழா மேடையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. இதற்கு தவெக-வினர், விஜய் ரசிகர்கள், தவெக-வின் பெரும்பலபமான விர்ச்சுவர் வாரியர் எனப்படும் சமூக வலைதள ஆதரவாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

திராவிட கட்சிகளில் நடத்துவது போல தவெக-விலும் செய்யலாமா? இதற்குத்தான் விஜயபாஸ்கரை கட்சியில் சேர்க்கக்கூடாது என்று கூறினோம் என்று பலரும் இணையத்தில் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்பாடுகளை தொடக்கத்திலே நிறுத்த வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோருக்கு இணையத்தின் வழியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குவியும் விமர்சனங்கள்:

 

புதுக்கோட்டையைச் சேர்ந்த அமைச்சர் முகமது பர்வேஸை ஓரங்கட்டி புதுக்கோட்டை தவெக-வில் கோலோச்ச விஜயபாஸ்கர் காய் நகர்த்தி வருவதாக ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும், விஜயபாஸ்கருடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருவதால் அமைச்சர் பர்வேஸ் மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இதனால், நடந்து முடியும் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு முகமது பர்வேஸின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்றும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.

Related Post

விஜயகாந்த் எப்போது மனம் உடைந்து போனார்? அவரது மகனே சொன்ன தகவல்

Posted by - டிசம்பர் 29, 2023 0
மறைந்த கேப்டன் விஜயகாந்த் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எப்போது மனம் உடைந்துபோனார் என்பதை அவருடைய மகன் சண்முக பாண்டியன் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.  மறைந்த கேப்டன் விஜயகாந்த்…

கனமழை எச்சரிக்கை: 10 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! வானிலை மையம் தகவல்

Posted by - செப்டம்பர் 9, 2025 0
மயிலாடுதுறை தொடங்கி தேனி வரை 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக இருக்கிறது.…

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவா இது? இந்த உடையில் அடையாளமே தெரியலையே

Posted by - ஜனவரி 7, 2023 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் மகள் ரோலில் நடித்து வருபவர் நேஹா. அவர் நடித்துவரும் இனியா ரோல் அந்த தொடரின் கதையில் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக…

மூக்கிரட்டை இலை.. சிறுநீரக நோய்களை விரட்டியடிக்கும் மூலிகை நண்பன்.. அருமையான மூக்கிரட்டை கீரை சூப்

Posted by - டிசம்பர் 11, 2023 0
சென்னை: சிறுநீரகத்தின் ஆரோக்கியம் காக்கக்கூடியது மூக்கிரட்டை கீரைகள்.. இந்த கீரையின் மற்ற பயன்கள் என்னென்ன? சத்தான மூக்கிரட்டை ரசம் எப்படி செய்வது தெரியுமா?மூக்கிரட்டையை, மூக்கரட்டை கீரை என்பார்கள்..…

முள்ளங்கி வாங்க போறீங்களா.. அப்ப அதன் கீரையை எட்ட எறியாதீர்கள்.. இதயம், சிறுநீரகத்திற்கு நல்லது!

Posted by - அக்டோபர் 17, 2023 0
சென்னை: முள்ளங்கி சாப்பிட்டிருப்பீர்கள், முள்ளங்கி கீரையை சாப்பிட்டுள்ளீர்களா? முயல்கள் விரும்பி சாப்பிடும் முள்ளங்கி கீரையின் மருத்துவ குணங்கள் என்ன? முள்ளங்கி வெள்ளை நிறத்திலும் பிங்க் நிறத்திலும் பூமிக்கு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன