இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: சென்னையில் திடீரென மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

226 0

சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் கோரி சென்​னை​யில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு நில​வியது. தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் 2009 மே 31-ம் தேதி நியமிக்​கப்​பட்ட இடைநிலை ஆசிரியர்​களுக்கு ஓர் ஊதி​ய​மும், மறு​நாள் ஜூன் 1-ல் பணி நியமனம் செய்​யப்​பட்ட ஆசிரியர்​களுக்கு வேறு ஊதி​ய​மும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

ஒரு​நாள் வித்​தி​யாசத்​தில் அடிப்​படை ஊதி​யத்​தில் ரூ.3,170 குறைந்​துள்​ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த முரண்​பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்​கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்​ட​கால​மாக போராடி வரு​கின்​றனர். ஆனால் தமிழக அரசு இந்த கோரிக்​கையை ஏற்​க​வில்​லை.

இந்​நிலை​யில் சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் கடந்த டிசம்​பர் 26-ம் தேதி​முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அவர்​கள் 4-வது நாளாக சென்னை எழில​கத்​தை​யும், நுங்​கம்​பாக்​கம் டிபிஐ வளாகத்​தை​யும் முற்​றுகை​யிட்டு நேற்று போராட்​டம் நடத்​தினர்.

டிபிஐ வளாகத்தை முற்​றுகை​யிட முயன்ற ஆசிரியர்​களை போலீ​ஸார் தடுத்து கைது செய்​தனர். அதேபோல் உழைப்​பாளர் சிலை அருகே கூடிய ஏராள​மான ஆசிரியர்கள், எழில​கம் நோக்கி பேரணி​யாக சென்​றனர். இந்த போராட்​டத்​தில் ஆசிரியர்​களின் குழந்​தைகள் உட்பட குடும்​பத்​தினரும் பங்​கேற்​றனர்.

அனு​மதி இல்​லாமல் சென்​ற​தால் போலீ​ஸார் அவர்​களை தடுத்து நிறுத்​தினர். இதனால் காம​ராஜர் சாலை​யில் அமர்ந்து போராட்​டம் நடத்​தி​ய​தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்​பின் ஆசிரியர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். அப்​போது தள்​ளு​முள்ளு ஏற்​பட்​ட​தில் சில ஆசிரியர்​களுக்கு லேசான காய​மும், மயக்​க​மும் ஏற்​பட்​டது. மயக்​க மடைந்த ஆசிரியர்கள் அரு​கில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக சேர்க்​கப்​பட்​டனர்.

மேலும் கைது நடவடிக்​கையை புகைப்​படம் எடுக்க முயன்ற ஆசிரியர்​களின் செல்​போன்​களை போலீ​ஸார் பறித்​துக் கொண்​டனர். இதுத​விர பெண்​களை, ஆண் போலீ​ஸார் கைது செய்ய முயன்​ற​தாக​வும் குற்றம் சாட்டப்பட்​டது.

இடைநிலை ஆசிரியர்கள் ஏராள​மானோர் காம​ராஜர் சாலை​யில் திடீரென போராட்​டம் நடத்​தி​ய​தால், அங்கு கடும் போக்​கு​வரத்து பாதிப்பு ஏற்​பட்​டது. இதனால் வாக​னங்​கள் மாற்​றுப்​பாதை​யில் அனுப்​பப்​பட்​டன.

இந்​நிலை​யில் தங்​கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்​டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறி​வித்​துள்​ளனர்.

இதற்​கிடையே இடைநிலை ஆசிரியர்​களின் கோரிக்​கையை தமிழக அரசு நிறைவேற்ற முன்வர வேண்​டுமென இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் உள்​ளிட்ட கட்சிகள் அறிக்கை வெளி​யிட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Related Post

கண்டுகொள்ளாத தமிழக அரசு:சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - டிசம்பர் 28, 2022 0
சென்னை: ஊதிய முரண்பாட்டை களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி…

பெட்ரோலுடன் கலந்த தண்ணீர்.. வாகனங்கள் பழுதானதால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..

Posted by - ஆகஸ்ட் 27, 2024 0
நீண்ட காலமாகவே பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுகிறது, தரமான பெட்ரோல் வழங்கப்படுவதில்லை என்ற புகார் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் வாகனங்கள் எளிதில் பழுதாகி விடுவதாக தெரிவிக்கின்றனர்.…

உங்க வங்கி கணக்குக்கு 1 ரூபாய் வந்துச்சா…. அப்போ நீங்க செலக்ட்

Posted by - செப்டம்பர் 13, 2023 0
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6…

ஆட்டம் காணும் திமுக? அமைச்சர் கே.என். நேரு, மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – நெருங்கும் தேர்தல்

Posted by - ஏப்ரல் 7, 2025 0
தமிழக அமைச்சர் கே.என். நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கே.என். நேரு…
tamilnadu teachers census duty workload stress mobile phone issue

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியால் தமிழக ஆசிரியர்கள் கடும் மன உளைச்சல்? தனிப்பட்ட செல்போன் பயன்பாடும் புதிய சர்ச்சை!

Posted by - ஆகஸ்ட் 4, 2026 0
தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்காக அரசு பள்ளி ஆசிரியர்கள் பெருமளவில் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிப் பணிகளையும், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளையும் ஒரே…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன