tamilnadu teachers census duty workload stress mobile phone issue

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியால் தமிழக ஆசிரியர்கள் கடும் மன உளைச்சல்? தனிப்பட்ட செல்போன் பயன்பாடும் புதிய சர்ச்சை!

130 0

தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்காக அரசு பள்ளி ஆசிரியர்கள் பெருமளவில் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிப் பணிகளையும், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பல ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக ஆசிரியர்கள் தரப்பில் வேதனை தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர்கள் கூறுவதாவது, தாங்கள் பணியாற்றும் பள்ளியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் அல்லது அதற்கும் அதிக தூரத்தில் உள்ள பகுதிகளுக்கு கணக்கெடுப்பு பணிக்காக அனுப்பப்படுவதாகவும்  இதனால் தினமும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதுடன், பள்ளி நேரம் முடிந்த பிறகும் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக மாணவர்களின் கல்விப் பணிகளையும் முழுமையாக கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கணக்கெடுப்புக்காக அரசால் தனி மின்னணு சாதனம் வழங்கப்படாமல், ஆசிரியர்களின் சொந்த செல்போன்களையே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கணக்கெடுப்பு செயலியில் தகவல்களை பதிவு செய்து கொண்டிருக்கும் நேரத்தில் தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்தால், பதிவு செய்யப்பட்ட தகவல்கள் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ஆசிரியர்களிடையே நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பதற்றத்துடனும், கவலையுடனும் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.Census: Self-enumeration process in Tamil Nadu to commence on July 17 - The Hindu

பள்ளி நிர்வாகப் பணிகள், மாணவர்களின் கல்வி, தேர்வு தொடர்பான பணிகள் ஆகியவற்றுடன் கூடுதலாக மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியும் வழங்கப்பட்டிருப்பதால், உடல் சோர்வுடன் மன அழுத்தமும் அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கணக்கெடுப்பு பணிக்காக போதிய வசதிகளும், தொழில்நுட்ப ஆதரவுகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பல ஆசிரியர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஆசிரியர்களின் நலனில் போதிய அக்கறை காட்டவில்லை என்றும், தங்களது கோரிக்கைகளை வலுவாக முன்வைக்கவில்லை என்றும் சில ஆசிரியர்கள் தாங்கள் சார்ந்துள்ள சில ஆசிரியர் சங்கங்கள் மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கணக்கெடுப்பு பணியால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து சில ஆசிரியர் சங்கங்க நிர்வாகிகள் இதுவரை உரிய முறையில் குரல் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

“ஆசிரியர்களின் நலனில் அக்கறை இல்லாத ஆசிரியர் சங்க நிர்வாகிகள்” என்ற விமர்சனமும் ஆசிரியர்கள் மத்தியில் உள்ளதாக தெரிவிக்கின்றன. ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான நடைமுறைகளில் மாற்றம் செய்யவும், ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கவும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Post

சென்னை மக்களை வாட்டி எடுக்கும் புதுவித வைரஸ் காய்ச்சல்

Posted by - பிப்ரவரி 22, 2023 0
சென்னை: சென்னை மக்களை வைரஸ் காய்ச்சல் ஒன்று பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. சளி மற்றும் வரட்டு இருமலில் தொடங்கும் இந்த காய்ச்சல் கடுமையான உடல் வலியையும் கூடவே…
weather

“தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!” – வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்; லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?

Posted by - மே 1, 2026 0
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில்…

இன்று வெயில் அதிகரிக்கும்… மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்… எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!

Posted by - மே 15, 2023 0
தமிழ்நாடு, புதுச்சேரியில் படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று…

வாழை இலையை வெட்டி லாபமா…எப்படி …?

Posted by - டிசம்பர் 10, 2024 0
#Banana #Leaf #Business #Plan –  பெரிய உணவகங்களில்   வாழை இலை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அந்த வகையில் முன்பெல்லாம் வாழை இலையை அப்படியே அறுத்து ஹோட்டல்களுக்கு…

பத்திரப்பதிவு அலுவலகங்களில் காலிமனை இடங்களை பதிவு செய்வதில் புதிய நடைமுறை

Posted by - ஆகஸ்ட் 11, 2023 0
சென்னை: பத்திரப்பதிவு துறை தலைவர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- காலி மனை இடங்கள் குறித்த ஆவணங்கள் சார் பதிவாளர்கள்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன