”உதயநிதியும் அவரது தாயும் தான் முதலமைச்சர்கள்”- செல்லூர் ராஜு விமர்சனம்

308 0
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகபோகிறார் என்ற தகவல்,  பெரிய விசயம் இல்லை என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்..

திமுக அமைச்சரவையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகபோகிறார் என்ற தகவல்  பெரிய விசயம் இல்லை என்றும் தற்போதே,  தமிழக முதல்வர் போல் உதயநிதி ஸ்டாலின், அவரது தாய், மருமகன் செயல்படுகின்றனர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.

திமுக அரசை கண்டித்து, மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், வருகிற 13 ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதற்கான கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. அப்போது, முன்னாள்அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அதிமுகவுக்கு  கூடும் கூட்டத்தை தமிழக உளவுத்துறை முதல்வரிடம் எடுத்து கூறியிருக்கும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரிந்து சென்ற நாளை அமைதி பேரணி நடத்தி மதுரையில் அவரை நினைவு கூர்ந்தோம். அதிமுகவின் தொடர் போராட்டம் வெற்றி பெறுவதை, திமுக அமைச்சர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அதிமுகவை உட்கட்சி பூசல் என குற்றம் சாட்டி திசை திருப்புகின்றனர்.

திமுக அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு அதிமுகவினர் யாரும் பொருட்படுத்த மாட்டோம். அதிமுகவின் நோக்கம் தெளிவானது. எங்களின்  எண்ணம் உயர்வானது. திமுக மக்களுக்கு விடியலை தருவோம் என கூறி தற்போது விடியாத அரசாக உள்ளது. அதிமுகவை குறைத்து மதிப்பிடுபவர்களுக்கு சரியான சவுக்கடி கொடுக்கும் வகையில் போராட்டம் நடைபெறும்.

அதிமுக ஒன்றுபட்ட இயக்கம். அதிமுகவில் இருந்து ஒரு சிலர் போயிருக்கலாம். அதைப்பற்றி  நாங்கள்  பொருட்படுத்தவில்லை. திமுக அமைச்சர்கள் கலெக்க்ஷன், கரெப்ஷன் என உள்ளனர். அவர்களின் ஊழலை மறைக்க எங்களை குற்றம் சாட்டுகின்றனர். அதிமுக எதிர்காலத்தை கருதி போராட்டங்களை நடத்தவில்லை. தேர்தலை நோக்கி அதிமுக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தவில்லை.

தேர்தல் வரும் போகும், நாங்கள் மக்கள் நலனுக்காகத்தான் போராடி வருகிறோம். பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தது திமுக. தற்போது தமிழகத்தில் லஞ்ச, லாவண்யம் ஆறாக பெருகி உள்ளது. நாளைய தேர்தலை எண்ணி அதிமுக போராடவில்லை. அதிமுக செல்வாக்கை நிருபிக்க போராட்டம் நடத்த வேண்டியது இல்லை” என தெரிவித்தார்.

மேலும், உதயநிதி அமைச்சராக நியமணம் செய்ய உள்ளதாக வரும் செய்திகள் குறித்த கேள்விக்கு, “திமுக சட்டசபையில் பெருபான்மையாக உள்ளதால், யாரையும் அமைச்சராக்கும் பொறுப்பு முதல்வருக்கு உள்ளது. திமுக ஒரு கம்பெனி தான். குடும்பம் தான் கழகம். குடும்பத்தினர் தான் தலைவர். திமுக அமைச்சரவையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகபோகிறார் என்ற தகவல், பெரிய விசயம் இல்லை. தற்போதே, தமிழக முதல்வர் போல் உதயநிதி ஸ்டாலின், அவரது தாய், மருமகன் செயல்படுகின்றனர்

வெளிநாட்டு அதிபர்கள் தான் சொகுசு ரெயிலில் போயுள்ளனர். பல லட்சத்தை கொடுத்து சொகுசு ரயிலை முதல்வருக்கு புக் செய்துள்ளனர். மக்களின் வரிப்பணம் வீணாகி உள்ளது. முதவர் எந்த வண்டியிலும் போகலாம் வரலாம். திமுகவினர் கூச்சப்படமாட்டார்கள். எந்த அமைச்சரும் மக்களுக்கு பயப்பட மாட்டார்கள்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “திராவிட மாடல் முதல்வர், சென்னை மேயரை காரில் தொத்தி கொண்டு ஏற விட்டுள்ளார். கொடுமையிலும் கொடுமை பெருங்கொடுமை மூத்த IAS அதிகாரி ஓடி வந்து காரில் தொற்றி கொண்டு வருகிறார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இதுபோன்ற செயல்ககளில் ஈடுபடமாட்டார்கள். பெண்களுக்கு சம உரிமை என கூறுவர். ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர். இதுபோன்ற செயல்களால் தான் அரசியல்வாதியை வெறுத்து ஒதுக்குகின்றனர்.

மேயருக்கு உரிய அரியாசனம் கொடுத்திருக்க வேண்டும். திமுக மாற வேண்டும். முதல்வரின் மனைவியை காக்கா பிடிக்க வேண்டும் என நினைப்பதற்கு இடம் கொடுக்கக்கூடாது. அரசு நிர்வாகம் சீர்கெட்டு போயுள்ளது” இவ்வாறு  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Related Post

dmk mk stalin

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

Posted by - ஏப்ரல் 20, 2026 0
தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கரூரில் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய…
TVK vs DMK 2

TVK vs DMK: “பதறல் நிதி.. கதறல் நிதி.. ஆபாசநிதி..” உதயநிதியை தாறுமாறாக விமர்சித்த தவெக!

Posted by - செப்டம்பர் 8, 2026 0
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் மிக கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு மானியக்கோரிக்கை மீது முதலமைச்சர் விஜய் நேற்று…
tvk vijay aiamdk

AIADMK EPS: குழப்பங்களை முடித்து வைத்த எடப்பாடி… புதிய ஆட்சிக்கு வாழ்த்துக்கள்! முற்றுப்புள்ளி வைத்த அதிமுக

Posted by - மே 9, 2026 0
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை…
aiadmk eps

ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்..

Posted by - மே 22, 2026 0
எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீண்டும் அவரது அணிக்கே தாவ தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம்…
CM Vijay 4

CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!

Posted by - ஜூலை 30, 2026 0
தொடர்ச்சியாக விஜய் ஆய்வு செய்வது இணையத்தில் எதிர்கருத்துகளையும் பெற்று வருகிறது. ரீல்ஸ் போடவும், போட்டோஷூட் எடுக்கவும் அவர் இந்த ஆய்வை பயன்படுத்திக் கொள்கிறார் என சகட்டுமேனிக்கு விமர்சனத்தை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன