எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் மிக கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு மானியக்கோரிக்கை மீது முதலமைச்சர் விஜய் நேற்று பதிலளித்தார். அப்போது, கடந்த கால திமுக அரசு மீதும், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீது கடந்த காலங்களில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் சட்டசபையில் அவர் அடுக்கினார். பின்னர், தங்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறி திமுக வெளிநடப்பு செய்தது.
இந்த சூழலில், தவெக ஐடி விங் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
பதறல் நிதி:
Rowdytime Runner! “மூன்று நாட்கள் நேரமிருக்கிறது… நன்றாகத் தயார் செய்து வாருங்கள்!” என்று வசனம் பேசிய பால்வாடி பாப்பாவே! முதலமைச்சர் பேச ஆரம்பித்ததும் மூன்று நொடிகள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் பதறிய பதறல்நிதியே!
தாத்தா காலம் முதல் செய்த விஞ்ஞான ஊழல்களைப் பற்றி வெற்றித் தலைவர் விவரிக்கக் கேட்டதும், “வெளியே ஓடவும் முடியாமல்… உள்ளே ஒளியவும் முடியாமல்…” திரிசங்கு நிலையில் நின்று கதறிய கதறல்நிதியே!
ஓட்டநிதி:
ஊழல் செய்யவில்லையென்று சொல்ல டர்ரெகனா? அந்த பயம் இருக்கணும்! வெற்றித் தலைவர் பேசி முடித்ததும், “விட்டால் போதும்!” என்று சட்டப்பேரவையை விட்டே ஓட்டமெடுத்த திராணியற்ற ஓட்டநிதியே!
செய்தியாளர்களைச் சந்திக்க 30 நிமிடம் தயாராகியும், script paper-ஐ பார்த்துப் படித்த முதுகெலும்பற்ற பேப்பர்நிதியே!
“Insta-வில் reels போடுகிறார்கள்!” என்றுவிட்டு, வீட்டிற்குச் சென்று Insta-வில் story வைத்து ஒப்பாரி வைத்த ஆபாசநிதியே!
“சினிமாவில் என்னை நீங்கள் தான் அறிமுகப்படுத்த வேண்டும்” என்று யார் வீட்டு வாசலில் யார் watchman-ஆக நின்று காத்திருந்தார் என்ற அழியா வரலாற்றை மக்கள் மறக்கவில்லை, டம்மிநிதி! Prepare well next time, ஓட்டநிதி!
ஓடுவதற்கல்ல… பதறாமல், கதறாமல், உண்மைகளை நேருக்கு நேர் எதிர்கொள்வதற்கு!
இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
நேற்று முதலமைச்சரின் பதிலுரைக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தான் கேட்ட எந்த கேள்விக்கும் முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை என்று கூறினார். தவெக-வினரும், திமுக-வினரும் இணையத்தில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அழகல்ல:
தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திலே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை பதறல் நிதி, ஆபாசநிதி, ஓட்ட நிதி என்று மிக கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளனர். திமுக-வினரும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுபோன்ற கடுமையான விமர்சனங்கள் தொடர்வது ஆக்கப்பூர்வமான அரசியலுக்கு அழகல்ல என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.