குடும்பத்திற்காக கபடி ஆடும் நாயகன்… பட்டத்து அரசன் பட்டையை கிளப்பினாரா?

343 0

பல படங்களில் இதுபோன்ற கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் தன் யதார்த்த நடிப்பின் மூலம் ரசிக்க வைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்

கபடி என்றால் என்னவென்றே தெரியாத நாயகன் தன் குடும்பத்திற்காகவும் தாத்தாவிற்காகவும் கபடி கற்றுக்கொண்டு, வில்லன்களை எப்படி வீழ்த்துகிறார் என்பதே பட்டத்து அரசனின் கதை.

அதர்வாவின் மிடுக்கான தோற்றமும், கட்டுமஸ்தான உடல்வாக்கும் கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்துக்கு பக்காவாக பொருந்தியிருக்கிறது. எமோஷனல் காட்சிகளில் உருக்கமும்,சண்டை காட்சிகளில் மிரட்டலும், காதல் காட்சிகளில் எதார்த்தமும் என கமர்சியல் ஹீரோவிற்கான வடிவமைப்பில் கலக்கியிருகிறார் அதர்வா.

கம்பீரமான குடும்ப தலைவனாக நெகிழவும்,கபடி வீரானாக மிரளவும் வைக்கிறது ராஜ்கிரனின் நடிப்பு. பல படங்களில் இதுபோன்ற கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் தன் யதார்த்த நடிப்பின் மூலம் ரசிக்க வைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் ராதிகாவிற்கு மற்றுமொரு நல்ல ரோல், அதை தன் சிறப்பான நடிப்பின் மூலம் திரையில் அசத்தியிருக்கிறார்.

சிங்கம்புலியின் காமெடிகள் ஓரளவிற்கு ரசிக்கவைக்கிறது. நாயகி ஆஷிக்காவிற்கு கிராமத்து கதாபாத்திரம் ஓரளவிற்கு பொருந்தியிருக்கிறது, அதில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆர்.கே.சுரேஷின் வில்லத்தனமான  நடிப்பு கதைக்கு கூடுதல் பலம். ஜிப்ரானின் பின்னணி இசை திரைக்கதையை மற்றொரு தளத்திற்கு எடுத்து செல்கிறது. பாடல்கள் அனைத்தும் அழகான கிராமத்து மண்வாசனை.

கிராமத்தின் இயற்கை அழகை பெரியதிரையில் கண்டுகளிக்க வைக்கிறது லோகநாதனின் ஒளிப்பதிவு. இயக்குனர் சற்குணத்தின் டிரேட் மார்க் ஜார்னரான கிராமத்து கமர்ஷியலிலேயே  சற்று கபடி,சண்டை,காமெடி நிறைய எமோஷனல் என குடும்ப ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இயக்குனர். கதையில் பெரிய அளவில் சுவாரசியங்கள் இல்லை என்றாலும் ஆங்காங்கே வரும் காமெடி,பாடல்கள்,சண்டைகள்,கபடி காட்சிகள் என சலிக்காத வகையில் படம் முடிகிறது.

குடும்ப ரசிகர்களுக்கும், கிராமத்து வாசிகளுக்கும் இப்படம் பிடிக்கும் என்றாலும் இன்றைய தலைமுறை ரசிகர்களை கவருமா என்பது கேள்விக்குறியே?

Related Post

அமரன் படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

Posted by - அக்டோபர் 22, 2024 0
அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்…

விஜய்யின் சாதனையை முறியடித்த ஸ்டைலிஸ் ஸ்டார்.. விஜய் 69 படம் புதிய வரலாறு படைக்குமா?

Posted by - நவம்பர் 21, 2024 0
தமிழ் சினிமாவில் விஜய் படங்களுக்குத்தான் அதிக மாஸ் உள்ளது. அவர் நடிக்கும் படங்களின் புதிய அப்டேட்டுகள், பாடல்கள், கிளிம்ஸ் வீடியோ இதெல்லாம் வெளியாகும் போது சமூக வலைதளங்களில்…
588001113 1384978140306359 8738038138229268243 n

மிடில் கிளாஸ் (Middle Class) – குடும்பப் படம்!

Posted by - நவம்பர் 22, 2025 0
குடும்பத்துடன் சென்று ரசிக்கக்கூடிய ஒரு நேர்த்தியான படைப்பு.​இன்று வெளியாகியிருக்கும் ‘மிடில் கிளாஸ்’, நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை அப்படியே திரையில் பிரதிபலிக்கிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு…

ஊரே கழுவி ஊத்தும் அனிமல் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போகும் ரஜினி பட நடிகை.. யார் தெரியுமா

Posted by - டிசம்பர் 13, 2023 0
அனிமல் சமீபத்தில் ஹிந்தியில் எடுக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிவந்த திரைப்படம் அனிமல். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா என…

தெறி பட ஸ்டைலா..? தளபதி 69 படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்.. இணையத்தில் கசிந்த தகவல்!

Posted by - அக்டோபர் 17, 2024 0
எச்.வினோத் இயக்கி வரும் விஜயின் கடைசி படமான தளபதி 69ல் விஜயின் கதாபாத்திரம் இதுதான் என்ற தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளது நடிகர் விஜய்யின் கடைசி படத்தில்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன