சொல்லுங்க மாமாக்குட்டி.. இந்த ஆண்டு மக்களிடையே அதிகம் டிரெண்டான டாப் 5 வசனங்கள் இதோ!

258 0

சென்னை: கதம் கதம் என பாபா முத்திரையை காட்டி ரஜினிகாந்த் சொல்லும் பஞ்ச் வசனங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேசிக் கொண்டிருந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது.

ரஜினிகாந்தே இப்போதெல்லாம் படங்களில் பஞ்ச் வசனத்தை குறைத்து விட்டார். பீஸ்ட் படத்தில் விஜய்யும் “ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா.. என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என போக்கிரி பட வசனத்தையே பேசியிருந்தார்.வலிமையில் அஜித் ஏகப்பட்ட அட்வைஸ்களாகவே சொல்லி இருந்தார். ஆனால், அதையெல்லாம் மீறி சின்ன சின்ன வசனங்கள் இந்த ஆண்டு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதில், சில வசனங்கள் கிரிஞ்சாக தெரிந்தாலும் 2கே கிட்ஸ்களின் ஃபேவரைட் வசனமாக மாறி உள்ள டாப் 5 வசனங்கள் என்ன என்ன என்பது குறித்து இங்கே பார்ப்போம்..

இதுதான் ஃபர்ஸ்ட் டைம்

இதுதான் ஃபர்ஸ்ட் டைம் தீபாவளிக்கு வெளியான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தில் காமெடி என்கிற பெயரில் ஏகப்பட்ட பாட்டில் கார்டு காமெடிகளை செய்து வெறுப்பேற்றினாலும், கடைசி கிளைமேக்ஸில் “இது போன்ற சம்பவங்கள் நிறைய நடந்திருக்கு.. ஆனால், இதுதான் ஃபர்ஸ்ட் டைம்” என வரும் வசனம் மக்களிடையே பெரிதாக வரவேற்கப்பட்டு ஏகப்பட்ட இடங்களில் பயன்படுத்தப்பட்டன.

உளவுச் செய்தி

உளவுச் செய்தி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனான சியான் விக்ரம் வந்தியத்தேவனாக நடித்த கார்த்தியிடம் வீர வாளை கொடுத்து “கடம்பூர் சம்பூவராயர் மாளிகையில் ஏதோ நடக்கவிருப்பதாக ஒரு உளவுச் செய்தி வந்துள்ளது” என சொல்லும் காட்சியை வைத்து “பக்கத்து தெருவில் தண்ணீர் வருவதாக உளவுச் செய்தி”, “ரேஷனில் அரிசி போடுவதாக உளவுச் செய்தி” என ஏகப்பட்ட டிரெண்டிங் மீம்களையே போட்டு மாஸ் காட்டினர் ரசிகர்கள்.ஆம்ஃபா.. ஆஹாம்ஃபா

ஆம்ஃபா.. ஆஹாம்ஃபா இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்திகேயன், பிரியா மோகன், சூரி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான டான் திரைப்படம் 100 கோடி வசூல் வேட்டை நடத்தியது. அந்த படத்தில் இடம்பெற்ற “ஆம்ஃபா.. ஆஹாம்ஃபா” வசன காமெடி காட்சியையும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிகம் தங்களது சமூக வலைதள போஸ்ட்டுகளில் போட்டு பயன்படுத்த ஆரம்பித்தனர்.அந்த சப்ஜெக்ட் எடுக்கும்போது

அந்த சப்ஜெக்ட் எடுக்கும்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ஏகப்பட்ட பஞ்ச் வசனங்கள் மக்கள் மத்தியில் டிரெண்டாகின. பகத் ஃபாசில் சொல்லும் “ரூல்ஸ் இருந்தால் மீறப்படும்” மற்றும் கமல் சொல்லும் “இந்த மாதிரி நேரத்துல வீரன்களாம் என்ன சொல்லுவாங்க தெரியுமா.. பார்த்துக்கலாம்” வசனங்கள் அதிக ரசிகர்களை ஈர்த்தன. அதிலும், விஜய்சேதுபதி எண்ட்ல போய் திரும்புனீங்கனா.. டாக்டர் தர்மலிங்கம்னு ஒருத்தர் இருப்பாரு என நோயாளிக்கு சொல்லும் போது.. அப்போ நீங்க டாக்டர் என கேட்க.. “அந்த சப்ஜெக்ட் எடுக்கும் போது நான் காலேஜ்க்கு போகல” என விஜய்சேதுபதி சொல்லும் வசனத்தை பல இளைஞர்களும் பல இடங்களில் பயன்படுத்தி வருகின்றனர்

.சொல்லுங்க மாமாக்குட்டி

சொல்லுங்க மாமாக்குட்டி இந்த ஆண்டின் சென்ஷேனலான வார்த்தையாகவே லவ் டுடே படத்தில் இடம்பெற்ற அந்த “சொல்லுங்க மாமாக்குட்டி” வசனம் மாறிவிட்டது. மாமாக்குட்டி என சொல்லக் கூட ஒரு பெண் தோழி இல்லையே என 90ஸ் கிட்ஸ் ஃபீல் பண்ணும் அளவுக்கு இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அப்படியொரு கேட்சியான வசனத்தை வைத்துள்ளார். “மாமாக்குட்டி.. அவன் என்ன குட்டியாவா இருக்கான்.. பார்க்க பன்னி மாதிரி இருக்கான்” என ஹீரோ கோபப்படும் காட்சிகளை கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

Related Post

4 நாட்களில் குடும்பஸ்தன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - ஜனவரி 28, 2025 0
குடும்பஸ்தன் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் குடும்பஸ்தன். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமையான நடிகர்களில் ஒருவரான மணிகண்டன் இப்படத்தில் கதாநாயகனாக…

பாலிவுட்டில் இருந்து வெளியேறியது ஏன்..? பிரியங்கா சோப்ரா சொன்ன அதிர்ச்சி தகவல்

Posted by - மார்ச் 29, 2023 0
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க…
CINEMA NEWS

அபிஷன் நடித்துள்ள வித் லவ் படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

Posted by - பிப்ரவரி 14, 2026 0
வித் லவ் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வித் லவ். டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்…

ரஜினியின் 171 படத்தை இயக்க கோடியில் சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜ்!..எவ்ளோ தெரியுமா?

Posted by - ஆகஸ்ட் 29, 2023 0
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தற்போது வரை இப்படம் ரூபாய் 575…
DC Poster ae8b1320 7566 11f1 b7d2 15aa69f23783

வசூலில் பட்டய கிளப்பும் லோகேஷ் கனகராஜின் DC திரைப்படம்… 5 நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்

Posted by - ஆகஸ்ட் 12, 2026 0
DC திரைப்படம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடிக்க கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியான திரைப்படம் DC.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன