Generated Image January 09 2026 10 54AM

ஜனநாயகனை விடுங்கப்பா.. அரசியலை பார்ப்போம்- விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

166 0

ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஜனநாயகனுக்கு செக் வைத்த சென்சார் டீம்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. இந்த நிலையில் தனது கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படத்தை அறிவித்த விஜய் அதன் வெளியீட்டை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தார். அந்த வகையில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் நீதிமன்றத்தில் ஜனநாயகன் படக்குழு சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தணிக்கை சான்றிதழ் வழங்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், உடனடியாக தணிக்கை துறை மேல்முறையீடு செய்தது. இதனால் ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை குழு- விஜய் அறிக்கை

இதன் காரணமாக விஜய் மட்டுமில்லாமல், அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படத்திற்காக தவெக தொண்டர்கள் காத்திருந்த நிலையில், அதனை விடுங்கப்பா, தேர்தல் பணியை பார்க்கலாம் என்ற வகையில் தேர்தல் அறிக்கை குழுவை அமைத்து தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்படுடள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு. நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது.

இதற்காகச் சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு. தமிழகம் முழுவதும் பொதுமக்கள். சிறு, குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார & தொழில் வல்லுனர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள். விவசாயச் சங்கங்கள். கல்வியாளர்கள். மருத்துவர்கள். செவிலியர்கள். மகளிர் அமைப்புகள். இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறவுள்ளது.

அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையினைத் தயார் செய்யவுள்ளது.

தேர்தல் அறிக்கைக் குழு விவரம்:

1.திரு. Dr. K.G. அருண்ராஜ்

2. . J.C.D. பிரபாகர்

3. திரு. A. ராஜ்மோகன்

4.  T.S.K. மயூரி

5. பேராசிரியர். .A. சம்பத்குமார்

6. M.அருள் பிரகாசம்

7. விஜய் R. பரணிபாலாஜி

8. . முகமது பர்வேஷ்

9. . T.K பிரபு

10. K. கிறிஸ்டி பிருத்வி

11.  M.K. தேன்மொழி பிரசன்னா

12. வழக்கறிஞர் சத்யகுமார்

மேற்கண்ட குழுவினருக்குக் கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதோடு, அந்தந்தப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சந்திக்கும் பொழுது தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக அந்த அறிவிப்பில் விஜய் குறிப்பிட்டுள்ளார்..

Related Post

’’அமித் ஷாவுடன் சந்திப்பு; கர்ச்சீப்பால் முகத்தை மறைத்தேனா? தும்மினால்கூட..’’ ஈபிஎஸ் பரபர!

Posted by - செப்டம்பர் 18, 2025 0
சந்திப்பு முடிந்ததும் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து, முகத்தை கர்ச்சீப் கொண்டு துடைத்தேன். மறைக்கவில்லை. இதை எல்லாம் அரசியல் ஆக்குகிறார்கள்- எடப்பாடி பழனிசாமி. நாம் தும்மினாலும்…
e

வரலாறு காணாத வாக்குப்பதிவு! 5 மணி நிலவரப்படி 82.24% – ஆட்சி மாற்றத்தின் அறிகுறியா?

Posted by - ஏப்ரல் 23, 2026 0
தமிழகத்தில் இந்த முறை தேர்தலில் வாக்குப்பதிவு வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து பிரபல அரசியல் விமர்சகர்கள்…
%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D

நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

Posted by - ஜூலை 23, 2026 0
திருச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் காலை எலி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.…

மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் – என்னென்ன?

Posted by - டிசம்பர் 5, 2025 0
தொகுதிப் பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தமிழக காங்கிரஸ் குழு 3 நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடக்கிறது. அதற்கான…
SSS

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – ரூ.5, 650 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

Posted by - மார்ச் 11, 2026 0
இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி, 5 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமா் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சி…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன