ஜெயலலிதாவின் விசுவாசி.. பால் பிசினஸில் கொடி கட்டி பறந்த நயினார்.. யார் இந்த திருநெல்வேலிக்காரர்? Nainar Nagenthran to be 13th Tamil Nadu BJP president….

322 0

அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற எட்டே ஆண்டுகளில் அதன் மாநில தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட உள்ளது. ஒரு காலத்தில் பால் தொழிலில் கொடி கட்டி பறந்த நயினார் நாகேந்திரன், அதிமுக ஆட்சி காலத்தில் பவர்ஃபுல் துறைகளை தன் வசம் வைத்திருந்தார்.

எம்.ஜி.ஆரின் ரசிகர், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி என அறியப்பட்டு வந்த நயினார் நாகேந்திரன், தமிழக பாஜகவின் தலைவராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற எட்டே ஆண்டுகளில் அதன் மாநில தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட உள்ளது. ஒரு காலத்தில் பால் தொழிலில் கொடி கட்டி பறந்த நயினார் நாகேந்திரன், அதிமுக ஆட்சி காலத்தில் பவர்ஃபுல் துறைகளை தன் வசம் வைத்திருந்தார். தமிழக பாஜக தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.

புதிய தலைவருடன் தேர்தலை எதிர்கொள்ளும் பாஜக: 

திமுக தொடங்கி பாமக வரை, பாஜக தொடங்கி விசிக வரை அனைத்து கட்சிகளும், அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. கூட்டணி, வியூகம் என அனைத்து விதத்திலும் திமுக தயாராகி உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன.

இந்த நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிப்படுத்துவதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அதிமுகவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து தூக்க பாஜக மேலிடம் முடிவு செய்தது.

இருப்பினும், பாஜகவின் அடுத்த மாநில தலைவர் யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. தற்போது, அதற்கு விடை கிடைத்துவிட்டது. பாஜக மாநில தலைவர் பதவிக்கான ரேஸ் தொடங்கியதில் இருந்தே ஒரு பெயர் மட்டும் தொடர்ந்து அடிபட்டுவந்தது.

யார் இந்த நயினார் நாகேந்திரன்?

அதுதான், நயினார் நாகேந்திரன். தற்போது, தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை தாக்கல் செய்ததன் மூலம் அவரே அடுத்த தலைவர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கடும் போட்டிக்கு மத்தியில் அவரை தேர்வு செய்ய காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

நாகர்கோவிலில் உள்ள வைதீஸ்வரம் கிராமத்தை சேர்ந்த நயினார் நாகேந்திரன், ஒரு காலத்தில் பால் தொழிலில் கொடி கட்டி பறந்து வந்தவர். இவரது அரசியல் பயணம், 1980களில் தொடங்கியது. எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதால் அதிமுகவில் இணைந்தார். கட்சி இரண்டாக உடைந்தபோது, ஜெயலலிதா அணியில் இணைந்தார்.

முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த இவர், அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த கருப்பசாமி பாண்டியனின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். பின்னர், 1991ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நெல்லை சட்டமன்ற தொகுதியில் வெற்றி வாகை சூடினார்.

சாதி கடந்த ஆதரவு:

கடந்த 2001ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்த உடன், யாரும் எதிர்பார்க்காத வகையில் நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக உருவெடுத்த அவர், மின்சாரம், தொழில்துறை மற்றும் போக்குவரத்துத்துறை என முக்கிய துறைகளை கவனித்து வந்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு, 606 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு, மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்றபோதிலும், எந்த ஜெயலலிதாவால் அரசியலில் உச்சம் தொட்டாரோ அதே ஜெயலலிதாவால் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார்.

அதற்கு முக்கிய காரணம், உள்ளூரில் திமுக நிர்வாகிகளுடன் இணக்கமாகவே செய்லபட்டுவந்தார். என்னதான், அரசியலில் உச்சம் தொட்டாலும், தனது தொழிலை விட்டுவிடவில்லை. திமுக தலைவர்கள் உடனான இணக்கம் காரணமாக ஹோட்டல் தொழில், சுற்றுலாத் தொழில் என தொடர்ந்து தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார். இதன் காரணமாகவே, நயினாருக்கு கொடுத்த வந்த முக்கியத்துவத்தை ஜெயலலிதா குறைக்க தொடங்கினார்.

பின்னர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, பாஜகவில் இணைந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தாலும், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து, பாஜக சட்டமன்ற குழு தலைவராக செயல்பட்டு வந்தார். தொகுதியில் மக்கள் உடனான இணக்கம் காரணமாக செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வந்த அவருக்கு தற்போது பாஜக மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சாதி கடந்து அனைத்து சமுதாய மக்களாலும் ஏற்று கொள்பவராக

Related Post

ஆட்டோ, கால் டாக்சிகளின் அதிக கட்டண வசூல் – பொங்கலுக்கு ஊர் சென்று சென்னை திரும்பியவர்கள் அவதி

Posted by - ஜனவரி 19, 2024 0
சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று சென்னை திரும்பினர். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் நகர எல்லையை அடைந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.…

சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்… புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு…

Posted by - பிப்ரவரி 19, 2024 0
Tamil Nadu Budget 2024: மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பின் கீழ் ஏழு தலைப்புகளில் முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும்: தமிழக அரசு…

பொது மாறுதல்களுக்கான ஆசிரியர் கலந்தாய்வு மே 15-ந்தேதி தொடங்குகிறது …..

Posted by - மே 12, 2023 0
திடீரென நிர்வாக காரணங்களுக்காக கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை கலந்தாய்வு நடைபெறும். சென்னை: தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள்…

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Posted by - மே 8, 2023 0
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவுசெய்த…
health 3

சர்க்கரை நோயாளிகள்.. பேரீச்சம் பழம் சாப்பிடலாமா.. பேரீச்சம்பழம் சாப்பிட்டால் என்னாகும்? அட ஆச்சரியம்

Posted by - டிசம்பர் 5, 2023 0
சென்னை: சர்க்கரை நோயாளிகள் இனிப்பு நிறைந்த பேரீச்சம் பழம் சாப்பிடலாமா? இந்த பழத்தை சாப்பிட்டால் என்னாகும்? தித்திப்பு நிறைந்த பழம் என்பதால், நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம் பழம்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன