தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை நீடிக்கும்

308 0

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி தொடங்கியது. தொடா்ந்து காற்று சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சிகளால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போதும் குமரிக்கடல் பகுதியில் காற்று சுழற்சியும், அரபிக்கடல் பகுதியில் சோமாலியா அருகே புயல் சின்னமும், குஜராத்தில் நிலபரப்பில் காற்று சுழற்சியும் நிலவுகிறது.

இதனால் நிலநடுக்கோட்டு பகுதியில் இருந்தும், வங்கக்கடலில் இருந்தும் மழையைத் தரும் காற்று தமிழகத்தின் ஊடாகச் செல்வதால் வட தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆங்காங்கே பலத்த மழை கொட்டியது. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 100 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

இந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்துக்கூறியபடி, தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் திங்கள்கிழமை புயல் சின்னம் உருவாகியுள்ளது. தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இருக்கும் இந்தப் புயல் சின்னம் நாளை (புதன்கிழமை) மேலும் வலுவடையும்.

அதன் பிறகு அந்த புயல் சின்னம் வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது அடுத்த 2 நாள்களில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்தப் புயலுக்கு மியான்மா் நாடு பரிந்துரை செய்த “மிச்சாங்” என்ற பெயா் சூட்டப்படும்.

இந்தப் புயல் தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு வருமா அல்லது ஆந்திரம், வங்கதேசம் நோக்கி நகருமா என்பது இன்னும் இரண்டு நாள்களில் துல்லியமாகத் தெரியவரும். இன்று (செவ்வாய்க்கிழமை) தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது.

நாளை (புதன்கிழமை) தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, ஆழ்கடலில் உள்ள மீனவா்கள் இன்றுக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் சிக்கலா…மாட்டிக்கொண்டு முழிக்கும் செந்தில் பாலாஜி…

Posted by - மே 31, 2023 0
கோவையில் கோல்டு வின்ஸ் பகுதியில் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் நடைபெற்று வந்த சோதனை காலை 8.15 மணி அளவில் நிறைவு பெற்றது.   மின்சாரம்…
SUN TV SERIAL

ஈஸ்வரிக்கு அதிரடியாக சவால் விட்ட ஜனனி.. ப்ரோமோ

Posted by - மே 21, 2026 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போது பார்கவி மற்றும் தர்ஷன் திருமண விவகாரத்தில் ஈஸ்வரி மற்றும் ஜனனி இடையே பெரிய மோதலாக மாறி இருக்கிறது. ஏற்கனவே பார்கவி திருமணம்…

முள்ளங்கி வாங்க போறீங்களா.. அப்ப அதன் கீரையை எட்ட எறியாதீர்கள்.. இதயம், சிறுநீரகத்திற்கு நல்லது!

Posted by - அக்டோபர் 17, 2023 0
சென்னை: முள்ளங்கி சாப்பிட்டிருப்பீர்கள், முள்ளங்கி கீரையை சாப்பிட்டுள்ளீர்களா? முயல்கள் விரும்பி சாப்பிடும் முள்ளங்கி கீரையின் மருத்துவ குணங்கள் என்ன? முள்ளங்கி வெள்ளை நிறத்திலும் பிங்க் நிறத்திலும் பூமிக்கு…
mdmk

MDMK: திமுக-வை கழுவி கழுவி ஊற்றிய துரை வைகோ!

Posted by - ஜூன் 24, 2026 0
திமுக ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடியதா? என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மொத்த அரசியல்…
dddd

CM Vijay:கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?

Posted by - ஆகஸ்ட் 28, 2026 0
CM Vijay PM Candidate: அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற ஆய்வில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தை பிடித்து இருப்பது கூட்டணியில் உள்ள காங்கிரசை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன