நாடு முழுவதும் வேண்டாம் மோடி முழக்கம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

353 0

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவும், மாநில அரசுகளை மதிக்கும் அரசு மத்தியில் அமையவும், தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

வேண்டாம் மோடி என்று முழக்கமே இந்தியா முழுமைக்கும் எதிரொலித்துக் கொண்டு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 ஆண்டுகளுக்கு முன்னால் பாஜக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், தற்போது மாநிலம், மாநிலமாக சென்று பிரதமர் மோடி திட்டங்களை தொடங்கி வைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமரின் அவசர கால பதற்றம், அவர் முகத்தில் இருக்கும் பயத்தை காட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில், 5 ஆவது முறையாக வெற்றிக் கூட்டணி தொடர்வதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான “இந்தியா” கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவுற்றதாக குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், அனைத்து தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் தான் வேட்பாளர் என்பதை மனதில் வைத்து தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசை அமைக்க வேண்டுமானால், 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றாக வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

tvk vs bjp

Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? – மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!

Posted by - ஆகஸ்ட் 11, 2026 0
சட்டமன்றத்தில் எனது மதம் எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது என்று நீங்கள் கூறுவது, தமிழின் மீதான தாக்குதலாகத் தான் தெரிகிறது…
tvk vijay

CPM Slams TVK: “ஆரோக்கியமான அரசியலுக்கு இது அழகல்ல..” – தவெக-வில் இணைந்த 4 அதிமுக MLA-க்கள்; சிபிஎம் கண்டனம்!

Posted by - மே 26, 2026 0
“அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெக-வில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது அல்ல” என்று சிபிஎம் த மாநில செயலாளர் பெ.சண்முகம் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக அரசியலில் தவெக…
cpimkstalin

CPM On Stalin: ”ஸ்டாலின் சொன்னது இதுதானோ.. திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” – சிபிஎம் சண்முகம் ஆவேசம்

Posted by - ஜூலை 2, 2026 0
CPM On Stalin: விரைவில் தேர்தல் வரும் என திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னதன் பொருள் இப்போது தான் புரிகிறது என, சிபிஎம் மாநில செயலாளர் பெ.…

“இது வெறும் தேர்தல் களமல்ல… அறப் போர்க்களம்!” — முதல்வர் ஸ்டாலின்

Posted by - மார்ச் 21, 2024 0
சென்னை: “இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்தும் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான தேர்தல்களாக இருந்தன. இந்த முறை யார் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதற்கான…
dmk cong

திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்

Posted by - மே 24, 2026 0
DMK Cong: மதச்சார்பற்ற கட்சி என முகமூடியை அணிந்துகொண்டு திமுக நாடகமாடுவதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் (Manickam Tagore) குற்றம்சாட்டியுள்ளார். DMK Cong: பாஜக உடன்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன