tvk vs bjp

Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? – மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!

179 0

சட்டமன்றத்தில் எனது மதம் எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது என்று நீங்கள் கூறுவது, தமிழின் மீதான தாக்குதலாகத் தான் தெரிகிறது என மரிய வில்சனை நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் தமிழ் மொழியை கிறிஸ்தவ மதத்தோடு ஒப்பிட்டு பேசியதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டென்ஷனான மரிய வில்சன்

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. இதில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது எழுந்து பேசிய கடையநல்லூர் மதிமுக எம்.எல்.ஏ., நிதியமைச்சர் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பு மற்றும் இலக்கணப் பிழைகளைக் கேலி செய்யும் வகையில் சுட்டிக்காட்டி பேசினார். இது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் இதற்கு மரிய வில்சனும் பதிலடி கொடுத்தார்.

அவர் பேசும்போது, “எனக்கு ஒரு மொழியை கிறிஸ்தவ மதம் கற்றுக் கொடுத்துள்ளது. அது அன்பு, அமைதி, இரக்கத்தின் மொழியாகும். இது எவ்வளவும் தமிழ் படித்தாலும் பாதி பேருக்கு தெரியாது. நான் பைபிளில் படித்திருக்கிறேன்” என கூறினார். பின்னர் சபாநாயகர் தலையிட்டு இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்

இந்த நிலையில் அமைச்சர் மரிய வில்சன் பேசியதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் மொழியின் ஆளுமையுடன், ஒரு மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரிதானா அமைச்சர் தி மரிய வில்சன் அவர்களே?

சட்டமன்றத்தில் உங்கள் மொழியாற்றல் மீதான விவாதத்தின் போது, எனது மதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது  என்பதோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் அது உங்களின் தனிப்பட்ட அனுபவம். ஆனால், எனது மதம் எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது என்று நீங்கள் கூறுவது, தமிழின் மீதான தாக்குதலாகத் தான் தெரிகிறது. “அன்பு” என்ற வார்த்தைக்கு பல மதங்கள் கற்பித்த பல அர்த்தங்களை, “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்ற ஒற்றை வரியில் தூக்கி சாப்பிட்ட மொழி தான் நம் தாய் மொழி தமிழ். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை விட, இரக்கத்தைப் பற்றி இவ்வுலகில் வேறு யாரால் நுட்பமாக எடுத்துரைக்க முடியும்? “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற புறநானூற்றுப் பாடலை நீங்கள் சரியாக படித்து புரிந்திருந்தாலே, “அமைதி” என்ற வார்த்தைக்கு தமிழ் மொழியில் உள்ள ஆழமான அர்த்தம் உங்களுக்கு தெரிந்திருக்கும். பிறப்பால் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  சட்ட மன்றத்தில் கூட உங்கள் கட்சி தலைமையும் அதைத் தானே சுட்டிக்காட்டினார்? அப்படியிருக்கையில் உங்கள் மதத்தை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் மொழியை நீங்கள் தாழ்த்துவதை ஒரு போதும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இன்று உணர்ச்சி மிகுதியில் தமிழ் மொழி மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Related Post

stalin

“தூய சக்தியா… அடுத்த கட்சி எம்எல்ஏக்களை ‘தூக்கும்’ சக்தியா?” – தவெக மீது ஸ்டாலின் பாய்ச்சல்

Posted by - மே 13, 2026 0
“இது தூய சக்தியா அல்லது அடுத்த கட்சி எம்எல்ஏ-க்களைத் தூக்கும் சக்தியா என தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களித்த மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிவிட்டது” என…

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டுவோம்! – இபிஎஸ் பிரகடனம் அதிமுகவுக்கு அனுகூலம் சேர்க்குமா?

Posted by - செப்டம்பர் 16, 2025 0
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அவசரகதியில் வெளியிட்டது அதிமுக அரசு. இதன் தாக்கம் தென் மாவட்டங்களில் அதிமுக-வுக்கு…
Generated Image November 08 2025 10 15AM

சொந்த கட்சியினரால் அல்லது மக்களால் திமுக அழியும்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

Posted by - நவம்பர் 8, 2025 0
சென்னை: ‘சொந்த கட்​சி​யின​ரால் அல்​லது மக்​களால் திமுக அழி​யும்’ என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்​டாட்​டம்…

மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?

Posted by - டிசம்பர் 10, 2025 0
2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூபாய் 3 ஆயிம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில்…

பாஜக கொடுத்த பொறுப்பை தூக்கி எறிந்த அண்ணாமலை.!

Posted by - பிப்ரவரி 3, 2026 0
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தமிழக பாஜக சார்பாக தொகுதி பொறுப்பாளர்கள் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட நிலையில், அதனை அவர் நிராகரித்துள்ளார். இது…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன