17 வது ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி இருந்த நிலையில் இந்த போட்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக குவாலிஃபயர் 1-ல் இரு அணிகளும் மோதி இருந்த நிலையில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி இருந்த கொல்கத்தா அணி 160 ரன்கள் என்ற இலக்கை 14 வது ஓவரிலேயே எட்டிப் பிடித்து சாதனை புரிந்திருந்தது. ஐபிஎல் தொடரில் நான்காவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த கொல்கத்தா அணி, இந்த சீசனில் அதிக பலத்துடனும் திகழ்ந்ததால் அவர்கள் மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்வார்கள் என்று தான் பலரும் கணித்து வந்தனர். அது கடைசியில் நிஜமானதுடன் மட்டுமில்லாமல் இப்படி ஒரு இறுதிப் போட்டியாக இருக்கும் என்று கூட நிச்சயம் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியதுடன் மட்டுமில்லாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்ததால் கொல்கத்தா அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு எதிராக ஹைதராபாத்தின் அதிரடி பேட்டிங் பதில் சொல்லும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகி இருந்தது. ஆனால் குவாலிஃபயர் 1 போலத்தான் இந்த போட்டியும் கொல்கத்தா அணியின் கட்டுப்பாட்டில் இருக்க, முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 100 ரன்களை கடக்கவே பெரும்பாடுபட்டது. 113 ரன்களில் ஆல் அவுட்டாக, இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, 11 வது ஓவரிலேயே போட்டியை முடித்து 3 வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று பட்டையை கிளப்பி உள்ளது.ஹைதராபாத் இந்த அளவுக்கு எளிதாக தோல்வியடையும் என யாருமே எதிர்பார்க்காத ஒரு சூழலில், மறுபுறம் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இதனிடையே இந்த போட்டிக்கு நடுவே ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் செய்த விஷயம் தற்போது அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவர்கள் 6 ஓவர்களில் 60 ரன்கள் கடந்த சமயத்தில் காவ்யா மாறன் அனைவரிடமும் டாட்டா காட்டிவிட்டு எங்கோ கிளம்பி சென்றதாக செய்தி வெளியானது. பல போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோற்றாலும் சோகத்துடன் இருக்கும் காவ்யா மாறன், வெற்றி பெறும் போதெல்லாம் துள்ளி குதித்து உற்சாகமாக கொண்டாடியும் வந்தார். அப்படி இருக்கும்போது போட்டியில் தோல்வி அடைய போகிறோம் என்பதை அறிந்து நடுவே இப்படி கிளம்பலாமா என்ற கேள்விகளும் எழுந்து இருந்தது. ஆனால், போட்டி முடியும் போது அங்கேயே இருந்ததாக தெரியும் சூழலில், ஹைதராபாத் அணி தோல்வி அடைந்த பின்னர் கண்ணீர் விட்டு கலங்கவும் செய்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Related Post
ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
#IPL2025 #RCBForever #IPLFinals #KrunalPandya #ViratKohli #ShashankSingh #PunjabKings #EeSalaCupNamdu #ShreyasIyer#rcb #iplfinal2025 #viratkohli2025 பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி முதன்முறை…
ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா? ஃபைனலில் நுழைந்த பாக்., – ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறை..
ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும்…
மிரட்டிய ஷர்தூல்.. சுழலில் அசத்திய வருண்.. பெங்களூருவை பந்தாடிய கொல்கத்தா
IPL 2023 : பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில்…
ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. சூப்பர் ஓவர் த்ரில்.. ஸ்டார்க்கால் டெல்லி அபார வெற்றி
ராஜஸ்தான் – டெல்லி அணி ஆடிய போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்ற நிலையில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில்…
பலம், பலவீனம் என்ன?உலகக்கோப்பை யாருக்கு?
இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் தொடங்கி அரையிறுதி வரை, வெற்றியை மட்டுமே வசப்படுத்திய சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும், இன்று…
Categories
- Sports (86)
- TN Political Zone (361)
- Trending Tamil (716)
- Uncategorized (1)
- Viral Social (18)
- அரசியல் (279)
- இந்தியா (483)
- உலகம் (176)
- சினிமா (863)
- தமிழ்நாடு (1,204)
Recent Posts
- CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை – நிர்மல்குமார்

- Anbil Mahesh Arrest: ரூ.100 கோடி லஞ்சம்: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!

- DMK:அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! – எதற்காக தெரியுமா?

- தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்? – பேரதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

- TN Weather News: விடாது கொட்டும் மழை – 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் – சென்னை? தமிழக வானிலை அறிக்கை
