“பதிலடி கொடுத்தே ஆகணும்“ ட்ரம்பிடம் கூறிய புதின் – ரஷ்யாவின் அடியை தாங்குமா உக்ரைன்.?!

180 0

ரஷ்யாவிற்குள் வெகு தூரம் ஊடுருவி ட்ரோன் தாக்குதலை நடத்திய உக்ரைனுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் தெரிவித்துள்ளார். தாங்குமா உக்ரைன்.?

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரஷ்யாவிற்கு சில ஆயிரம் கிலோ மீட்டர்கள் தூரம் வரை ரகசியமாக ஊடுருவி, விமானப் படைத்தளங்கள் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியது உக்ரைன். உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்த இந்த நிகழ்விற்கு, பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் உறுதியாக கூறியுள்ளதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் கூறியது என்ன.? பார்க்கலாம்.

ட்ரம்ப்பிடம் ரஷ்ய அதிபர் புதின் பேசியது என்ன.?

ரஷ்யா – உக்ரைன் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினிடம் தொலைபேசி வாயிலாக, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசியதாக தெரிவித்துள்ளார். அப்போது, ரஷ்ய விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல் குறித்தும், இரு தரப்பினரும் நடத்திவரும் தாக்குதல்கள் குறித்தும் பேசியதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

 

மேலும், இருவரும் நன்றாகத் தான் பேசியதாகவும், ஆனால் உடனடியாக அமைதி ஏற்பட அது வழிவகுக்காது என்றும் கூறியுள்ள ட்ரம்ப், உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்று ரஷ்ய அதிபர் உறுதிபட தெரிவித்ததாக கூறியுள்ளார்.

ரஷ்யாவிற்குள் ஊடுருவி 2 முறை தாக்குதல் நடத்திய உக்ரைன்

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, ரஷ்யாவின் எல்லைக்குள் மிக ஆழமாக புகுந்து ட்ரோன் தாக்குதல் நடத்தி, 41 போர் விமானங்களை சேதப்படுத்தியது உக்ரைன். ரஷ்யாவின் 5 ராணுவ விமான தளங்கள் அடுத்தடுத்து தாக்கப்பட்டன. இதில், உக்ரைன் மீது நீண்ட தூர ஏவுகணைகளை ஏவ மாஸ்கோ பயன்படுத்திய Tu-95 மற்றும் Tu-22 போன்ற  குண்டுவீச்சு விமானங்கள், A-50 ராடார் மற்றும் கட்டளை விமானம் ஆகியவை தாக்கப்பட்டவற்றில் அடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை ரஷ்யாவும் உறுதிப்படுத்தியது.

ஆபரேஷன் ‘Spider’s Web‘

உக்ரைனிலிருந்து பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரஷ்யாவின் முக்கிய விமானப்படை தளங்கள் மீது நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதல், ஆபரேஷன் ‘Spider’s Web‘ என்ற பெயரில், உக்ரைனால் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த தாக்குதலுக்காக ஒன்றரை வருடங்கள் திட்டமிடப்பட்டதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். இந்த பிரமாண்ட தாக்குதலுக்காக 117 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவை திட்டமிடப்பட்ட நிலைகளில் இருந்த கப்பலில் இருந்து ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்கக்கூடிய ரஷ்யாவின் விமானங்களில் 34 சதவீத விமானங்களை அழித்ததாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்த ட்ரேன்கள், மரத்தாலான மேற்கூரைகளைக் கொண்ட ட்ரக்குகளில் வைக்கப்பட்டு, முன்கூட்டியே ரஷ்யாவிற்குள் ரகசியமாக, ரஷ்ய விமானப்படைத் தளங்களுக்கு அருகே எடுத்துச் செல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. தாக்குதலின்போது, ரிமோட் மூலம் மர மேற்கூரைகள் திறக்கப்பட்டு, ட்ரோன்கள் பறக்க விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிரிமியா பாலத்தை சிதைத்த உக்ரைன்

இந்த நிலையில், அடுத்த நாளே மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தி ரஷ்யாவில் இருந்து கிரிமியா செல்லும் பாலத்தை வெடி மருந்துகள் மூலம் தகர்த்துள்ளதாக உக்ரைன் தெரிவித்தது. தண்ணீருக்கு அடியில் செல்லும் ரோபோக்கள் மூலமாக 1100 கிலோ வெடிபொருட்கள் பாலத்தின் தூண்களில் பொருத்தப்பட்டதாகவும், பின்னர், அவை வெடிக்க வைக்கப்பட்டதாகவும் உக்ரைன் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இந்த பாலம், ரஷ்யாவில் இருந்து கிரிமியா தீபகற்பத்தை இணைக்கும் முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக உள்ளது. பாலத்தின் சில பகுதிகள் சேதமடைந்ததால், ரஷ்ய படைகளுக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

உக்ரைனின் இந்த தாக்குதல்கள் ரஷ்ய அதிபர் புதினுக்கு நிச்சயம் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும். தற்போது, பதிலடி கொடுக்கப் போவதாக வேறு கூறியுள்ளார். ரஷ்யாவின் அடியை உக்ரைன் தாங்குமா என்பதே தற்போதைய கேள்வி.

Related Post

மோடி என்னை விட வல்லவர்… புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்… ஆனா ஒரு ஆப்பும் வச்சுட்டார்.!!

Posted by - பிப்ரவரி 14, 2025 0
இந்திய பிரதமர் மோடி தன்னை விட வல்லவர் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். ஆனாலும் ஒரு செக்கும் வைத்துள்ளார். அது என்னவென்று பார்க்கலாம். அமெரிக்காவிற்கு…

அமெரிக்காவில் எலும்பை உறைய வைக்கும் குளிர்.. சமாளிக்க முடியாமல் 22 பேர் பலி!

Posted by - டிசம்பர் 27, 2022 0
கடும் பனியுடன் மணிக்கு 65 மைல் வேகத்தில் காற்றும் வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம் அமெரிக்காவில் வீசும் பனிப்புயலால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில்…

குடிபோதையில் ஈபிள் கோபுரத்தின் உச்சியில் படுத்து உறங்கிய அமெரிக்கர்கள்

Posted by - செப்டம்பர் 1, 2023 0
பிரான்ஸ், பாரிஸிற்கு சுற்றுலா வந்த இரண்டு அமெரிக்கர்கள் ஈபிள் கோபுரத்தின் உச்சியின் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈபிள் கோபுரம் பொதுவாக காலை 9மணிக்கு சுற்றுலா…

பாகிஸ்தானியர்களுக்கு தடை.. மூடப்படும் அட்டாரி எல்லை.. மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி!

Posted by - ஏப்ரல் 24, 2025 0
பயங்கரவாத தாக்குதலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கூட்டத்தின் இறுதியில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான்…

பாகிஸ்தானுக்கு வந்த அவமானம் – ஷபாஸ் செரீஃப் முன்பே, சீனா செய்த சம்பவம், இந்தியா ராக்ஸ்..

Posted by - செப்டம்பர் 1, 2025 0
பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையிலேயே ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. SCO Summit 2025: பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இரங்கல்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன