Generated Image November 17 2025 11 24AM

பிறந்தது கார்த்திகை… அதிகாலை முதல் மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள்!

251 0

சிவபெருமான்,முருகப்பெருமான் மற்றும் ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று பிறந்தது. காலை முதல் ஐயப்ப மற்றும் முருக பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்.

ஆன்மீகத்தைப் பொறுத்தமட்டில் தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதங்களில் ஒன்று கார்த்திகை மாதம். சிவபெருமான், முருகப்பெருமான் மற்றும் ஐயப்பனுக்கு மிகவும் உகந்த மாதமாக இந்த மாதம் விளங்குகிறது.

பிறந்தது கார்த்திகை:

நடப்பாண்டில் கார்த்திகை மாதம் நவம்பர் 17ம் தேதி பிறக்கும் என்று  தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, இன்று கார்த்திகை மாதம் 1ம் தேதி பிறந்துள்ளது. கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்பனுக்கு மாலை அணிவதற்கான மாதம் ஆகும். இன்று 1ம் தேதி பிறந்துள்ளதால் ஐயப்ப பக்தர்கள் காலை முதலே மாலை அணிந்து வருகின்றனர்.

மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்:

சபரிமலை ஐயப்பனுக்கு வேண்டிக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதல் மாலை அணிந்து வருகின்றனர். ராகு காலம் மற்றும் எமகண்டம் தவிர மற்ற எந்த நேரத்திலும் இன்று மாலை அணிந்து கொள்ளலாம். இருப்பினும், அதிகாலையிலே குளித்துவிட்டு மாலை அணிவது சிறப்பு என்பதால் பெரும்பாலான பக்தர்கள் காலை நேரத்திலே மாலை அணிந்து வருகின்றனர். குருசாமி கைகளினாலோ, கோயில்களிலோ அல்லது வீட்டில் தாய்களின் கைகளிலோ பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்.

ஐயப்பனுக்கு மட்டுமின்றி இந்த மாதம் முருகப்பெருமானுக்கு உகந்த மாதமும் என்பதால் பக்தர்கள் பலர் முருகனுக்காகவும் மாலை அணிந்து வருகின்றனர். திருச்செந்தூர், பழனி போன்ற முருகன் ஆலயங்களுக்காக வேண்டிக்கொண்டு மாலை அணிந்து வருகின்றனர்.

சிவாலயங்களில் கொண்டாட்டம்:

கார்த்திகை மாதம் என்றாலே மிகவும் முக்கியமான நாள் கார்த்திகை தீபம் ஆகும். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் நாளில் ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் குவிவார்கள். கார்த்திகை தீபம் டிசம்பர் 3ம் தேதி வருகிறது. இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால் சிவாலயங்களிலும் கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

சபரிமலை, சிவாலயங்கள் மற்றும் முருகப்பெருமான் கோயில்களுக்கு இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவு காணப்படும் என்பதால் அதிகளவு பக்தர்கள் வரும் கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மந்தமாகும் இறைச்சி, மீன் விற்பனை:

கார்த்திகை 1ம் தேதி இன்று பிறந்துள்ளதை முன்னிட்டு அதிகாலை முதலே சிவாலயங்கள், முருகன் ஆலயங்கள் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடந்து வருகிறது. மேலும், இந்த மாதம் ஏராளமான பக்தர்கள் மாலை அணிவார்கள் என்பதால் இறைச்சி, மீன் விற்பனையும் மந்தமாகவே இருக்கும். மேலும், இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு காய்கறிகளின் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

Related Post

%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D

“பரந்தூர் விமான நிலைய திட்டத்தைக் கைவிடுவது தமிழக வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளிவிடும்” – மு.க.ஸ்டாலின்

Posted by - ஆகஸ்ட் 24, 2026 0
சென்னை: “பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதல்வர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு, மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக்…

காவல்துறைக்கு ஏன் சங்கங்கள் இல்லை? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Posted by - ஏப்ரல் 22, 2025 0
காவலர் முதல் சார்பு ஆய்வாளர் வரை வார விடுமுறை வழங்குவது தொடர்பாக அரசாணையை நடைமுறைப்படுத்த கோரிய வழக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையின்…

இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: சென்னையில் திடீரென மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

Posted by - டிசம்பர் 30, 2025 0
சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் கோரி சென்​னை​யில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு நில​வியது. தமிழகத்​தில்…

அண்ணாமலைக்கு அடித்த ஜாக்பாட்.. திறமையை பாராட்டிய தலைமை.. தேசிய அளவில் பொறுப்பு…

Posted by - ஏப்ரல் 11, 2025 0
பாஜக தமிழ்நாடு தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு, தேசிய அளவில் பொறுப்பு கிடைக்க உள்ளது. அவரது திறமையை பாராட்டியுள்ள தலைமை, இந்த தகவலை தெரிவித்துள்ளது. பாஜக தமிழ்நாடு…

“தளபதி டிவி”.. விஜயகாந்த் சேனலை வாங்கும் விஜய்! சுளீர் பிளான்! என்ன நடக்குது?

Posted by - பிப்ரவரி 9, 2024 0
சென்னை: தமிழக வெற்றி கழகம் சார்பாக புதிய சேனல் தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக இரண்டு திட்டங்களை அவர் கையில் எடுத்துள்ளாராம். நடிகர் விஜய் லோக்சபா…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன