“பேச முடியாத அளவில் துயரத்தில் உள்ளோம்”- உருக்கமாக பேசிய ஆதவ் அர்ஜுனா

258 0

த.வெ.க.வை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

த.வெ.க.வை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

குடும்ப இழப்பு:

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா  இன்று (அக்டோபர் 10) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”பொதுவாக நமது வீட்டிலேயோ அல்லது குடும்பத்திலோ மிகப்பெரிய இழப்பு ஏற்படும் போது 16 நாள் மிகப்பெரிய துக்க நாளாக நாம் அந்த வலியோடு இருப்போம்.

எங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் சரி தமிழக வெற்றிக் கழகமும் சரி தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்களும் சரி எங்களுடைய குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பை போல் பார்க்கிறோம். 16 வது நாள் காரியம் முடியும் வரை யாரும் பேச முடியாத அளவிற்கு துக்கத்தில் இருக்கிறோம்.

நீதிமன்றத்தை நாடியுள்ளோம்:

இதில் எங்களது நியாயங்களை சொல்வதற்கும் எங்கள் மீது பரப்பப்படும் அவதூறுகளுக்கு பதில் சொல்வதற்கும் தவறான செய்திகள் பரப்பட்ட போதும் அமைதியாக பதில் கொடுக்காமல் இருப்பது எங்கள் வலிகளை எங்களுடைய மக்களுக்காக அவர்களுடன் இருக்கிறோம். என்ன உண்மையோ அதை கண்டிப்பாக சொல்வோம். எங்கள் கட்சியை முடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் இதனால் நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.

ஒரு சாமானிய மனிதனின் நம்பிக்கையாக உண்மை வெளிக்கொண்டுவர நீதி துறையை நாடியுள்ளோம். 16 நாள் காரியம் முடிந்த உடன் அந்த மக்களின் வலிமிகுந்த நாட்களுடன் நாங்கள் சென்றிகொண்டிருக்கிறோம்.

அவர்களை விரைவில் சந்திப்போம். 16 நாட்கள் முடிந்த உடன் மற்றதை பேசுவோம். நீங்கள் எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக ஒரு சாமானியராக காத்துக்கொண்டிருக்கிறோம். கட்சியின் மாவட்ட செயலாளர்களை கடுமையாக கைது செய்து கொண்டிருக்கிறார்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டு. அவர்களையும் வெளியில் கொண்டுவருவதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

Related Post

Generated Image February 07 2026 10 14AM

பிரேமலதாவின் எதிர்பார்ப்பு தான் என்ன?

Posted by - பிப்ரவரி 7, 2026 0
6 சீட் தருவதாகச் சொல்லும் அறிவாலயமா… அல்லது 7 சீட் தருவதாகச் சொல்லும் கமலாலயமா என்று முடிவெடுக்க முடியாத நிலையில், ‘நாங்களும் ஆட்டத்தில் இருக்கிறோம்’ என்பதைக் காட்ட…

2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.?

Posted by - டிசம்பர் 30, 2025 0
 பொங்கல் ரொக்கப்பணத்தோடு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22ஆயிரத்து 291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேட்டி மற்றும்…
Gemini Generated Image l0si72l0si72l0si

திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!

Posted by - மார்ச் 26, 2026 0
தவெக பெண் ரசிகைகளை விபச்சாரி என்று விமர்சித்த அரசியல் ஆலோசகர் பொன்ராஜை கடுமையாகச் சாடியுள்ளார் தவெக விஜய். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிப்பதா என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்துள்ளதாகவும் அவர்…
w 2

விஜய் பற்றி விசாரித்த முதல்வர்: நிர்வாகிகள் கைகலப்பு

Posted by - மார்ச் 19, 2026 0
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியான திமுகவில் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என 15,372 பேர் விருப்ப மனுக்களை…
s 5 e1774010119419

கடன் வாங்கி கொள்ளையடித்த திமுக அரசு தொடர வேண்டுமா? – இபிஎஸ் கேள்வி

Posted by - ஏப்ரல் 9, 2026 0
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் என் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் அதிமுக வேட்பாளர் கோகுல…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன