மலைக்கோட்டை மதில் சுவரில் நீர்கசிவு- தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு

271 0

நாமக்கல்:

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை உள்ளது. ஒரே கல்லால் ஆன இந்த மலையின் உச்சியில் 246 அடி உயரத்தில் கோட்டை மதில்சுவர் உள்ளது. இக்கோட்டையானது 16-ம் நூற்றாண்டில் சேந்தமங்கலம் பாளையக்காரரான ராமசந்திரன் நாயக்கரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடுவதற்காக திப்புசுல்தான் இம்மலைக் கோட்டையை பயன்படுத்தினார் என்ற வரலாற்று தகவல்களும் உண்டு. இத்தகைய சிறப்பு மிக்க மலைக்கோட்டையின் மேல் வரதராஜ பொருமாள் கோவிலும், மசூதியும் உள்ளன. இவை தவிர மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள குடைவறைக் கோவில்களான நரசிம்மர், அரங்கநாதர் கோவில்களும், மலையை ஒட்டி கமலாலயக் குளம் ஆகியவையும் உள்ளன.

நாமக்கல் நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கோட்டையை சுற்றி பார்த்து செல்வர். இந்நிலையில் மலைக்கோட்டையின் மதில்சுவரானது ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. மேலும் மழை பெய்யும்போது மதில் சுவரின் அடிப்பாகத்தில் இருந்து தண்ணீர் அருவி போல் வெளியேறுகிறது. இதனால் சுவரின் உறுதி தன்மை பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதனால் கோட்டை மதில் சுவர் இடிந்து விழும் முன் சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதால் மத்திய தொல்லியல் துறையினர் நாமக்கல் மலைக் கோட்டையை நேரடியாக ஆய்வு செய்தனர். இதுகுறித்து சேலம் மண்டல மத்திய தொல்லியல் துறை அதிகாரி ஸ்ரீதர் கூறியதாவது:

நாமக்கல் மலைக் கோட்டை மதில்சுவர் ஆங்காங்கே இடிந்தும், விரிசல் அடைந்தும் உள்ளது. இதனை சீரமைக்க விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. மேலும் காலை, இரவு நேரங்களில் மலைக்கோட்டையை ஆக்கிரமத்துக் கொள்ளும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்த நுழைவு வாயில் பகுதியில் இரும்பு வேலி அமைக்கவும், நரசிம்மர் கோவில் கொடிமர மண்டபத்தில் உள்ள விரிசலை புனரமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி தொல்லியல் துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அனுமதி கிடைத்ததும் மலைக்கோட்டை சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

Posted by - ஜூன் 20, 2023 0
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்…

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

Posted by - அக்டோபர் 15, 2024 0
கனமழையால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என அக்கட்சின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

தூத்துக்குடி மாவட்ட மக்களின் கவனத்திற்கு…

Posted by - டிசம்பர் 21, 2023 0
தூத்துக்குடி: வரலாறு காணாத வகையில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின்…
TNASSEMBLY 1

DMK TVK: எங்கே போனது BJP எதிர்ப்பு? ”ஒன்றியம், கண்டனம்” இல்லையா உதயநிதி? உயிர்கள் போகிறது CM விஜய் சார்?

Posted by - ஜூலை 22, 2026 0
DMK TVK CJP: பாஜக எதிர்ப்பு எங்கே போனது என ஆளுங்கட்சியான தவெகவிற்கும், எதிர்க்கட்சியான திமுகவிற்கும் நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்புகின்றனர். DMK TVK CJP: தேர்தலுக்கு முன்பாக…
tntet

TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு

Posted by - ஜூலை 8, 2026 0
அரசின் முடிவை வரும் ஜூலை 24ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்; அதுவரை டெட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது- சென்னை உயர் நீதிமன்றம். டெட் எனப்படும் ஆசிரியர்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன