மு.க.ஸ்டாலினே வந்து உட்கார்ந்தாலும் கோவையில் பாஜகதான் வெற்றி பெறும் – அண்ணாமலை சவால்

375 0

தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் கோவை தொகுதியில் இருந்து தொடங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் .

கோயம்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே தங்கியிருந்து பரப்புரை செய்தாலும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தான் வெற்றிபெறும் என அந்தத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று கோவைக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பிரதமர் மோடி உத்தரவிட்டதால் தான் கோவை தொகுதியில் போட்டியிடுவதாகக் கூறினார்.

டெல்லி அரசியலில் தனக்கு விருப்பமில்லை எனவும், தமிழக அரசியலில் தொடர்ந்து இருப்பேன் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் கோவை தொகுதியில் இருந்து தொடங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் .

தோல்வி பயத்தால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் 2026 இல் ஆட்சியமைப்பதற்காகவே பிரதமர் வருகை தருவதாகக் கூறினார்.

Related Post

2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.?

Posted by - டிசம்பர் 30, 2025 0
 பொங்கல் ரொக்கப்பணத்தோடு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22ஆயிரத்து 291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேட்டி மற்றும்…

த.வெ.க.வை கண்டு பயத்தின் உச்சத்தில் தி.மு.க. – விஜய் கடும் விமர்சனம்

Posted by - செப்டம்பர் 9, 2025 0
வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட…
Gemini Generated Image 80ljk280ljk280lj

இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்!

Posted by - ஏப்ரல் 11, 2026 0
திமுக – அதிமுக கட்சிகளிடையே தொடரும் தாக்குதல் பாணி பிரச்சாரமானது தமிழக தேர்தல் களத்தை 4 முனைப் போட்டி என்ற நிலையில் இருந்து இருமுனைப் போட்டிக்கு நகர்த்தி…
CM Vijay Speech

CM Vijay Speech: “ஃப்ராடு, கரூர் கேங், ABUSE” திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் – வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்

Posted by - செப்டம்பர் 7, 2026 0
CM Vijay Speech: திமுகவை கரூர் கேங், ஃப்ராட், ஊழல்வாதிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகர்கள் என, அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கடுமையாக சாடியுள்ளார். CM…
Tamil Breaking News Politicians in Focus

DMK:அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! – எதற்காக தெரியுமா?

Posted by - அக்டோபர் 26, 2026 0
  சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான முதலமைச்சர் விஜய் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை? – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன