மேகதாது விவகாரத்தில் சமரசம் கிடையாது.. அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் – அமைச்சர் துரைமுருகன்

423 0

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித பேச்சுவார்த்தையிலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் நீர்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார், மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடப் போவதாகவும், மேகதாது திட்டத்தின் மூலம் இரு மாநிலங்களும் பயனடையும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்திற்கு தமிழகத்திலுள்ள பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித பேச்சுவார்த்தையிலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடகா துணை முதலமைச்சர் சிவக்குமார் தற்போது தான் பதவிக்கு வந்துள்ளார். காவேரி பிரச்சனை முழுவதும் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் பெருமளவில் பாதிக்கப்படும்.

எந்த ரூபத்திலும்  எந்த பேச்சுவார்த்தையிலும் எந்த சமரசத்திலும் மேகதாது அணை கட்டுவதை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது. மேகதாது அணை கட்டுவது என்ற பேச்சு காவேரி நடுவர் மன்றத்தில் வரவில்லை. காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் இந்த பேச்சு வரவில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Related Post

உருவானது சக்கரம்.. 4 நாளில் புயல்?! வெளுக்கும் மழை-வெதர்மேன்!

Posted by - டிசம்பர் 4, 2022 0
தமிழக கடற்கரைரையை நோக்கி இந்திய சீன பகுதியில் இருந்து வரும் சக்கரம்  நான்கு நாட்கள் கழித்து நல்ல மழை கொடுக்க வாய்ப்புள்ளதாக வெதர்மேன் அப்டேட் போட்டுள்ளார். இந்தோ-சீனா பகுதியில் இருந்து உருவாகி…
add an exclusive news banner at the top of the ima 1

Vijay CM Oath: தேய்பிறை அஷ்டமியில் விஜய் பதவியேற்பு.. நல்லதா? கெட்டதா?

Posted by - மே 10, 2026 0
Vijay CM Oath Ceremony: தவெக தலைவர் விஜய் பதவியேற்கும் இந்த நாள் தேய்பிறை அஷ்டமி தினமாகும். இந்த நாள் ஆன்மிகத்தின்படி என்ன நடக்கும் என்பதைப் பற்றிப்…

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு: தாம்பரம் 2-வது இடம் பிடித்தது

Posted by - ஆகஸ்ட் 14, 2023 0
திருச்சி: தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா…

அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல் – போலீஸ் வலைவீச்சு!

Posted by - செப்டம்பர் 16, 2025 0
மாமூல் தர மறுத்த மளிகைக்கடை உரிமையாளர் கர்ப்பிணி மனைவியை அரிவாளால் வெட்டிய கும்பல்! சென்னை அம்பத்தூர் அருகே மாமூல் தர மறுத்த மளிகைக்கடை உரிமையாளர், அவரது கர்ப்பிணி…
gsquare e1787654076161

ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை.. லாட்டரி மருமகன்.! யாருக்காக விமான நிலையம்.? திமுக- தவெக காரசார மோதல்

Posted by - ஆகஸ்ட் 25, 2026 0
ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காக விமான நிலையம் அமைக்கப்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்த நிலையில், லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையம் அமைக்கப்படுகிறதா.? என தங்கம் தென்னரசு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன