gsquare e1787654076161

ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை.. லாட்டரி மருமகன்.! யாருக்காக விமான நிலையம்.? திமுக- தவெக காரசார மோதல்

161 0

ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காக விமான நிலையம் அமைக்கப்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்த நிலையில், லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையம் அமைக்கப்படுகிறதா.? என தங்கம் தென்னரசு பதில் கேள்வி எழுப்பினார்.

பரந்தூர் விமான நிலையம் – கைவிடப்பட்டது

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த திமுக ஆட்சியில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியானது நடைபெற்றது. ஆனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல கட்டமாக போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தவெக அரசின் தேர்தல் வாக்குறுதியாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மாட்டோம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அந்த வகையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கை விடப்பட்டதாகவும், புதிய இடம் தேர்வு செய்து அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

சட்டசபையில் வாக்குவாதம்

இந்த நிலையில் இந்த பிரச்சனை இன்று சட்ட சபையில் எதிரொலித்தது. தமிழக சட்டமன்றத்தில் இன்றைய மானிய கோரிக்கை விவாததின் போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், நேற்றிலிருந்து திமுக இந்த விமான நிலையம் இல்லையென்றால் தமிழகத்திற்கு முதலீடே இல்லாமல் சென்று விடும் என பரபரப்பி வருகிறார்கள். தொழிற்துறை வருவதற்கு முக்கிய காரணம் ஊழல் இல்லாத முதலமைச்சரும், அமைச்சருமே காரணம். சிங்கள் விண்டோ சிஸ்டத்தில் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அரசுக்கு மட்டுமே தெரிந்த நிலையில், ஒரு கட்சி சார்ந்தவர்கள் பரந்தூரை சுற்றியுள்ள நிலைத்தை வாங்கி நில மோசடி நடைபெற்றுள்ளது. ரியல் எஸ்டேட்டிற்காகவும் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்த பகுதியில் 380 ஏரிகள், விவசாய நிலங்கள் உள்ளது. இதனை கருத்தில் கொண்டே விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறினார்.

பரந்தூர் விமான நிலையம் ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை

தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.டி.நிர்மல் குமார், பரந்தூரில் 90 % நிலம் கையகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் 90% நிலம்  கையகப்படுத்தவில்லை. 48 % மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பரந்தூரில் உள்ள கிராமங்களில் ஒரு சென்ட் நிலம் கூட கையகப்படுத்தவில்லை. தற்போதுள்ள விமாநிலையத்திலேயே கூடுதல் விமானங்களை கையாள முடியும்.

புதிய டெர்மினல் அமைக்கும் போது பெங்களூர் விமான நிலையத்தை விட அதிக பயணிகளை கையாள முடியும் என தெரிவித்தார். இந்த திட்டத்திற்காக அதிகமாக கதறுவோர் ஜிஸ்கொயர் மாப்பிள்ளைக்காவும், கருப்பு பணத்தை முதலீடு செய்தவர்களும் தான் என தெரிவித்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார் ஜி ஸ்கோயர் மாப்பிள்ளை என சொன்னால் என்ன தவறு உள்ளது.? என கேள்வி எழுப்பினார்.

லாட்டரி மாப்பிள்ளைக்காக புதிய விமான நிலையமா.?

இதற்கு பதில் அளித்த திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் இந்த அளவில் பதில் விவாதத்தை கொண்டு செல்ல விரும்பினால் நாங்களும் தயார். ஜி ஸ்கொயர் மாப்பிள்ளக்காக விமான நிலையம் என்று சொன்னால் எந்த லாட்டரி மாப்பிள்ளைக்காக புதிய விமான நிலையம் என நான் கேட்கவா.? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து விமான நிலையம் அமைக்க பரந்தூரில் நிலத்தை தேர்வு செய்தது ஏன் என விளக்கம் அளித்தார். அந்த வகையில் எண்ணூர் பகுதியில் அதிகளவில் தொழில் நிறுவனங்கள் உள்ளது. அடுத்ததாக மற்றொரு பக்கத்தில் கல்பாக்கம், வேடந்தாங்கல் சரணாலயம் என இடங்கள் உள்ளதால் பரனூர் மற்றும் பரந்தூர் என இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கடைசியாக பரந்தூர் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

Related Post

அண்ணாமலைக்கு அடித்த ஜாக்பாட்.. திறமையை பாராட்டிய தலைமை.. தேசிய அளவில் பொறுப்பு…

Posted by - ஏப்ரல் 11, 2025 0
பாஜக தமிழ்நாடு தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு, தேசிய அளவில் பொறுப்பு கிடைக்க உள்ளது. அவரது திறமையை பாராட்டியுள்ள தலைமை, இந்த தகவலை தெரிவித்துள்ளது. பாஜக தமிழ்நாடு…

கிரிப்டோகரன்சி விளம்பரம்.. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஹேக்

Posted by - ஜனவரி 1, 2023 0
நேற்று இரவு 1:30 மணி அளவில் இந்த அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பு நிறுவனமான TNDIPR டிவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.…

8 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை அபேஸ் செய்த கல்யாண ராணி- திடுக்கிடும் தகவல்கள்

Posted by - ஜூலை 11, 2023 0
ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்செட்டிபட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மூர்த்திக்கு இன்ஸ்டாகிராமில் ரசிதா என்ற பெண்ணின்…
TNASSEMBLY 1

‘அண்ணன் ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டுக்கே பவர் போய்டுச்சு’ – சட்டப்பேரவையில் சம்பவம் செய்த உதயநிதியின் மாஸ் ஸ்பீச்

Posted by - ஜூன் 22, 2026 0
அண்ணண் பவருக்கு வந்ததால், தமிழ்நாட்டிற்கே பவர் போய்விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சட்டப்பேரவையில் பேச்சு விஜய் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்வெட்டில் நம்பர் 1 தொகுதியாக…

ரம்ஜான் பண்டிகை எப்போது..? தலைமை ஹாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Posted by - ஏப்ரல் 10, 2024 0
ரம்ஜான் பண்டிகை தேதி குறித்த முக்கிய அறிவிப்பை அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளதார். ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன