வாயை மூடிக்கிட்டிரு… பெண்ணை அதட்டிய அமைச்சர் பொன்முடி

397 0

pதொடர்ந்து அமைச்சர் பொன்முடி  மக்களிடையே சர்ச்சைக்குரிய வகையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார் .   பேருந்தில் பெண்களுக்கு இலவச திட்டம் தமிழக அரசு கொண்டு வந்திருப்பதை,  பஸ்ஸில் பெண்கள் எல்லாம் எப்படி போகிறீர்கள்? ஓசி பஸ்ஸில் போகிறீர்கள் என சொல்லி பெரும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார்.

அந்த விவகாரத்தில் எதிர்கட்சித் தலைவர்களும் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.  இதை அடுத்து விழுப்புரத்தில் நடந்த விழாவில் அமைச்சர் பொன்முடியிடம் பெண்கள் குறைகளை கூறிய போது , இந்த கிராமத்தில் எனக்கு அப்படியே ஓட்டு போட்டு கிழிச்சுட்டீங்க.. பெருசா கேட்க வந்துட்டீங்க.. உட்காருங்க.. என்று அதட்ட,   பெரும் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் குறை சொல்லிய ஒரு பெண்ணை வாயை மூடிக்கிட்டு இரு என்றுஅமைச்சர் பொன்முடி அதட்டியதால் சலசலப்பு எழுந்திருக்கிறது.

pon

விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று பேசிய போது, நாங்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகின்றன.  பல பணிகள் நடக்கின்றன.  கிராமங்களிலும் நகரங்களிலும் பல பணிகள் நடந்து வருகின்றன.  நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கும் நேருவின் மூலமாக நகர்ப்புற வளர்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் ஏராளமான பணிகளை செய்து கொண்டிருக்கிறார்.

சென்னையாக இருந்தாலும் சரி , திருக்கோவிலூர் ஆக இருந்தாலும் சரி,  விழுப்புரம் ஆக இருந்தாலும் சரி… என்று அமைச்சர் பொன்முடி பேசிக் கொண்டிருந்தபோது,  ஒரு பெண் எழுந்து குறைகளைச் சொன்னார்.  அவரை பார்த்து கேலி செய்த அமைச்சர் பொன்முடி,   ‘’வாயை மூடிக்கிட்டுரு..’’ என்று அதட்டினார்.  பின்னர் அந்த பெண்ணிடம்,  ’’உன் வீட்டுக்காரர் வந்திருக்கிறாரா?’’ என்று கேட்டார்.  அதற்கு அந்தப் பெண் சொன்ன பதிலை கேட்ட பின்னர்,  ’’போயிட்டாரா.. பாவம்..’’ என சிரித்துக் கொண்டே சொன்னார்.

அப்போது தொண்டர்கள் சத்தம் போடத் துவங்கினர்.  உடனே அமைச்சர் பொன்முடி , அமைதியாக இருக்கும் படி கூறி,  அந்த அம்மா குறை சொல்லுது நல்லது தானே என சொல்லி சமாளித்து தன் பேச்சை தொடர்ந்தார்.

Related Post

ஆதார் போன்று ’மக்கள் ஐடி’ உருவாக்க தமிழக அரசு திட்டம்..!

Posted by - டிசம்பர் 28, 2022 0
Makkal ID: ஆதார் போல தமிழக மக்களுக்கு தனி ஐடி உருவாக்க தமிழ்நாடு மின் முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆதார் எண் போன்று மக்கள் ஐடியை…

ஆடி கடைசி வெள்ளி… மறந்துடாதீங்க! கண்டிப்பாக இதை செய்யுங்கள்…

Posted by - ஆகஸ்ட் 14, 2024 0
ஆடி மாதத்தில் சிறப்புக்குரிய நாட்கள் எத்தனை வந்தாலும் ஆடி வெள்ளிக்கு மட்டும் ஏன் தனி சிறப்புகள் உள்ளன. பல கொண்டாட்டங்களுக்கு பிறகு தற்போது ஆடி மாதத்தின் இறுதி…
Kanyakumari YouTuber jewellery thef

REELS மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்

Posted by - செப்டம்பர் 29, 2026 0
Kanyakumari YouTuber jewellery thef : தங்களிடம் பணம், நகைகள் அதிகமாக இருப்பதாக பந்தாவாக வீடியோ வெளியிட்ட யூடியூபர் வீட்டில் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கொள்ளையர்களை…

+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து…

Posted by - மார்ச் 3, 2025 0
தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை 8 லட்சத்திற்கும் அதிகமான…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன