Generated Image January 12 2026 5 19PM

விண்டேஜ் கார் ஓட்டுவதையும், சிலம்பம் சுற்றுவதையும் ரீல்ஸ் பதிவிட்டு விளையாடுவதா.!

185 0

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, 3 மாத காலத்திற்குள் முடிவு எட்டப்படும் என தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் கொலை

சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அதிகாலையில் ரவுடி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில் ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கிறது.

பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள் இந்த வெற்று விளம்பர மாடல் அரசில், உயிரை பறிக்கும் களமாகவும், கஞ்சா செடி வளர்க்கும் இடமாகவும் மாறியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியது. சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரோ, தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என வழக்கம் போல பொய்யான அறிக்கையை படித்துவிட்டு போலி நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்.

ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு விளையாடும் முதலமைச்சர்

பேருந்து நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், அரசு மருத்துவமனைகள் என கொலைகள் நடைபெறாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கொலைக்களமாகவும், ரவுடிகளின் தலைமையிடமாகவும் தமிழகம் மாறிவருவதை அறியாமல், சிலம்பம் சுற்றுவதையும், விண்டேஜ் கார் ஓட்டுவதையும் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு விளையாடும் ஒரு முதலமைச்சரை பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு.

தமிழக காவல்துறைக்கென நிரந்தர டிஜிபியை கூட நியமிக்க முடியாத முதல்வராலும், தலைமையில்லாமல் சரியானபடி செயல்படாத காவல்துறையாலும் தமிழக மக்கள் இன்னும் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்னும் 3 மாதம் தான்- இபிஎஸ்

நான் ஏற்கனவே சொன்னது போல முதலமைச்சரின் கீழ் இயங்கும் விளம்பர அரசையும், காவல்துறையையும் இனியும் நம்பி எந்தவித பயனும் இல்லை என்பதால், பொதுமக்களே அவரவர் உயிர் பாதுகாப்பை அவரவர்களே உறுதி செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், இன்னும் மூன்று மாதங்களில் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முடிவு எட்டப்படும் எனவும் உறுதிபட தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Post

GGG

Exit Poll : எக்ஸிட் போல் VS தேர்தல் முடிவுகள்..

Posted by - ஏப்ரல் 29, 2026 0
Exit Poll Results: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நாளை ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 2021 ஆம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகளின்…

விசிகவை ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக.. ”முட்டு கொடுப்பதை நிறுத்திட்டு கட்சியை காப்பத்துங்க பாஸ்”

Posted by - செப்டம்பர் 22, 2025 0
 திமுக மீதான விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தந்த விசிக எம்.எல்.ஏ., ஆளுர் ஷா நவாஸை தவெகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முழு நேரமும் திமுகவிற்கு முட்டுக் கொடுப்பதை…
Generated Image February 03 2026 11 32AM

யாருடன் கூட்டணி.? பிரேமலதா போடும் அரசியல் கணக்கு

Posted by - பிப்ரவரி 3, 2026 0
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், யாருடன் கூட்டணி என எந்த முடிவும் அறிவிக்காமல் தேமுதிக இழுத்தடித்து வருகிறது, எனவே இ ன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய…
%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95

TVK vs DMK: விஷயம் டாப் சீக்ரெட்- தவெக MLA-க்களுக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக..!

Posted by - ஜூன் 25, 2026 0
TVK DMK: தவெக எம்.எல்.ஏக்களை பேரம் பேச முயன்றதற்கு பதிலடியாக தான், எ.வ. வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. TVK…

“பேச முடியாத அளவில் துயரத்தில் உள்ளோம்”- உருக்கமாக பேசிய ஆதவ் அர்ஜுனா

Posted by - அக்டோபர் 11, 2025 0
த.வெ.க.வை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். த.வெ.க.வை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன