Durimurugan

Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்

79 0

Duraimurugan DVAC: திமுக ஆட்சிக்காலத்தில் 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் அளவிற்கு மணல் கொள்ளை நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) விசாரணையை தொடங்கியுள்ளது.

Duraimurugan DVAC: திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் மணல் கொள்ளை குற்றச்சாட்டு, முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மணல் கொள்ளை வழக்கு – கையிலெடுத்த DVAC:

திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி, சுமார் 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோதமாக மணல் திருடப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே விரிவான விசாரணை நடத்தி அதுதொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை வழங்கியபோதும், கடந்த ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். ஆனால், ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து பல்வேறு ஊழல் வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். அந்த வகையில் மணல் கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம். இதனால் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலக்கத்தில் இருக்க, விசாரணையின் நீட்சி திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனை இறுக்கும் என கூறப்படுகிறது.

ரூ.4,730 கோடிக்கு மணல் கொள்ளை?

தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் அனுமதி அளிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிக மணல் எடுக்கப்படுவதாக எழுந்த புகாரில்,  சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 28 அரசு ஆற்று மணல் குவாரிகளிலும் எவ்வளவு மணல் எடுக்கப்பட்டது என்பதை அமலாக்கத்துறை துல்லியமாக ஆய்வு செய்தது. அதன்படி, விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக அள்ளப்பட்ட மணலின் மொத்த மதிப்பு மட்டும் சுமார் ரூ.4,730 கோடி என்று அமலாக்கத்துறையின் மதிப்பீடு பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இந்த முழுப் பணமும் குற்றச் செயல்கள் மூலமாக சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட வருமானம் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியான ஆதாரங்கள்:

ஆவணங்கள் அடிப்படையிலானது மட்டுமாக இல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும் மிகவும் வலுவான ஆதாரங்கள் இந்த வழக்கில் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஐஐடி கான்பூர் நிறுவனத்தின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிபுணர்களின் உதவியுடன் ட்ரோன்கள், அதிநவீன ஜியோ ஸ்கேனிங் மற்றும் செயற்கைக்கோள் வரைபடங்கள் மூலம் ஒவ்வொரு குவாரியிலும் பூமிக்கு அடியில் எத்தனை அடி ஆழத்திற்கு மணல் தோண்டப்பட்டுள்ளது, ஆற்றுப்படுகையின் எல்லைகளைத் தாண்டி எங்கெல்லாம் மணல் எடுக்கப்பட்டுள்ளது என ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோக  மணல் அள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு பொக்லைன் இயந்திரங்களை விற்ற நிறுவனத்திடமிருந்து, அந்த இயந்திரங்களின் ஜிபிஎஸ் கோ-ஆர்டினேட்ஸ், ஜியோ ஃபென்சிங் விவரங்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அதன் வாயிலாக அந்த இயந்திரங்கள் எந்தெந்த நாட்களில் இயங்கின? தினமும் எத்தனை மணி நேரம் ஆற்றுக்குள் வேலை செய்தன? எந்தெந்த குறிப்பிட்ட இடங்களில் நின்று மணலைத் தோண்டின? உள்ளிட்ட விவரங்கள் துல்லியமாக சேகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி அரசு ஒதுக்கிய எல்லைகளைத் தாண்டி, பல நூறு மீட்டர்கள் அப்பால் சென்று மணல் அள்ளப்பட்டது அம்பலமாகியுள்ளது.

துரைமுருகனுக்கு நெருக்கடி?

சேகரிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்கி,  சம்பந்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு கடந்த 2024ம் ஆண்டு ஜுன் மாதமே அமலாக்கத்துறை கடிதம் எழுதியது. அதே ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதத்தையும் அனுப்பியது. ஆனால், அப்போதைய திமுக அரசு இதை கண்டுகொள்ளாமல் இருந்தது. ஆனால் தவெக அரசில் முதற்கட்டமாக இதில் குற்றம் நிகழ்ந்ததற்கான முகாந்திரம் உள்ளதா என்பதை உறுதி செய்யும் வகையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தமிழக அரசின் பொதுப்பணி துறையில் இருந்து, நீர்வளம் தனியாக பிரிக்கப்பட்டு, துரைமுருகன் நிர்வகிக்கப்பட்டது. ஆற்று மணல் அள்ளி விற்க குவாரிகள் உருவாக்கி நடத்த அனுமதி அளிக்கும் பொறுப்பு நீர்வளத்துறை வசம் தான் இருந்தது. இந்நிலையில் வெடித்துள்ள வழக்கு, துரைமுருகனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.

Related Post

அனைத்து வசதிகளும் தயார்… மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மேயர் கூறியது எதற்காக?

Posted by - மே 5, 2025 0
வரும் 7ம் தேதி காலை 5.50 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மதியம் 12 மணியளவில் தேர் நிலையை வந்தடையும். தஞ்சை மேலவீதியில் இருந்து புறப்படும் தேர் வடக்கு…

யார் அந்த சார்? பேட்ஜ்.. சட்டப்பேரவையின் முதல் நாளே அதிரடியாக ஆரம்பித்த அதிமுக!

Posted by - ஜனவரி 6, 2025 0
பிற்பகல் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை இன்னும் சற்று நேரத்தில்…

பெண்களை சூப்பர்வுமனாக மாற்ற இந்த 5 சூப்பர் உணவுகளை அவங்க உணவில் அவசியம் சேர்த்துக்கணுமாம்…!

Posted by - டிசம்பர் 22, 2023 0
பெண்கள் பெரும்பாலும் அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகளின் சுமையால் தங்கள் சொந்த ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. அதனால் படிப்படியாக, அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள், இதன் காரணமாக,…

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. 50 லட்சத்தை தட்டி செல்லப்போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் தெரியுமா….

Posted by - ஜனவரி 13, 2024 0
பிக் பாஸ் பைனல் நாளை பிக் பாஸ் பைனல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் யார் வெற்றிபெற்று கோப்பையை தன்வசப்படுத்த போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. விஷ்ணு, மாயா,…

ரஜினி இதெல்லாம் விட்டறலாமே.. ரசிகர்கள் கெட்டுட போறாங்க.. ஜானகி அம்மாவிடம் எம்ஜிஆர் வருத்தம்

Posted by - நவம்பர் 26, 2024 0
தமிழ் சினிமாவில் எம்.கே. தியாகராஜ பாகவதருக்குப் பின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்தவர் எம்.ஜி.ஆர். இவர் ரஜினியைப் பற்றி ஜானமி அம்மாவிடம் கூறிய சம்பவத்தை ரஜினி பகிர்ந்துள்ளார். முன்னாள்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன