amitsha

EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?

87 0

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டெல்லி பாஜக தலைமையிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகளால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட கட்சியாக மாறியிருப்பது அதிமுக. கடந்த தேர்தலில் இருந்த எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்த அதிமுக கட்சி ரீதியாக மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை பல நிர்வாகிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். திமுக-விலும், தவெக-விலும் இணைந்து வருகின்றனர்.

பிளவுபட்ட அதிமுக:

அதிமுக-வின் 6 எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்துவிட்டனர். அதிமுக-வின் இன்றைய இந்த நிலைக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கட்சியின் முக்கிய தலைவர்களான முன்னாள் அமைச்சர்களான சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர், வைகைச்செல்வன், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் தவெக பக்கம் சென்று விட்டனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல்:

எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், கேபி அன்பழகன் என பலரும் எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கில் இருந்து வருகின்றனர். இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமியின் இந்த மோசமான போக்கின் காரணமாகவே அதிமுக இன்று பிளவுபட்டு இருப்பதாக மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அவருக்கு எதிராக கண்டன குரல்கள் வலுவாக எழத்தொடங்கியுள்ளது.

இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டெல்லிக்கு அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு ஜெயலலிதா போல பாவித்துக்கொண்டு தன்னிச்சையாக செயல்படுவதாகவும், அதனால் அவருக்கு பதிலாக புதிய பொதுச்செயலாளரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

பாஜக முடிவு என்ன?

தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மிகவும் பரபரப்பாக இருப்பதால் பாஜக தலைமையும், அமித்ஷாவும் இந்த குற்றச்சாட்டுக்களை பெரியளவு கண்டுகொள்ளவில்லை. அதேசமயம், அதிமுக-வில் நிலைத்தன்மை இல்லாமல் மக்களவைத் தேர்தலை பாஜக – அதிமுக கூட்டணி சந்தித்தால் அது மிகப்பெரிய தோல்வியையே தரும் என்றும் அந்த முன்னாள் அமைச்சர்கள் அமித்ஷாவிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.

தற்போது நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு புதிய சட்டமசோதாக்கள் நிறைவேற்றுவதற்கான மும்முரத்தில் பாஜக தலைமை இருப்பதால் இந்த விவகாரத்தை சில நாட்களுக்கு பின்பு கையாளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் குவிந்து வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்காமல் அமைதி காப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய வேதனையை உண்டாக்கியுள்ளது. அனைவருடன் இணக்கமாக செல்லுமாறு அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை கூறினாலும் எடப்பாடி பழனிசாமி அதை புறக்கணித்து வருகிறார்.

Related Post

கோவையில் பிரபலமான பெண் பேருந்து ஓட்டுநருக்கு சிக்கல்… போலீசார் வழக்குப்பதிவு

Posted by - பிப்ரவரி 7, 2024 0
கோவையின் பெண் பேருந்து ஓட்டுனர் என பிரபலமான சர்மிளா மீது காட்டூர் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பழி வாங்கிய ரஜினி.. நடு ரோட்டில் செய்த மாஸ் சம்பவம்

Posted by - நவம்பர் 30, 2024 0
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒரு கால கட்டத்தில் ரஜினி எந்த அளவுக்கு எதிர்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது…
tvk 4

“குற்றவாளியை காப்பாற்றும் அமைச்சர்; பழநிக்கே மொட்டை போட்ட விஜய் ஆட்சி”

Posted by - ஜூலை 17, 2026 0
திமுக நிர்வாகி பரந்தாமன் சாடல் சென்னை: “பழநியில் மொட்டை போட்டு பார்த்திருப்போம்; ஆனால் பழநிக்கே மொட்டை போட்டுள்ளது விஜய் ஆட்சி . தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் விபூதி அடித்துள்ளது…

மிரட்டும் டெங்கு காய்ச்சலால் ஒரே நாளில் 59 பேர் அனுமதி- தடுப்பு நடவடிக்கை தீவிரம்

Posted by - நவம்பர் 27, 2023 0
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி…
rain water

சென்னை மாநகரில் மழை நீர் வடியாததற்கான காரணம்?

Posted by - டிசம்பர் 4, 2023 0
சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மழை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன