Esakki Subaya

Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!

72 0

என்னைப் பொறுத்தவரை என் ராஜினாமாவை உடனடியாக ஏற்க வேண்டும், அம்பை தொகுதிக்கு இடைத்தேர்தல் வர வேண்டும் என தவெக நிர்வாகி இசக்கி சுப்பையா கூறியுள்ளார்.

ராஜினாமா செய்த நிலையில் தான் மீண்டும் எம்.எல்.ஏவாக தொடர அனுமதிக்கக்கோரிய வழக்கில் என்ன நடந்தது என்பதை தவெக நிர்வாகி இசக்கி சுப்பையா விவரித்துள்ளார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அவரது கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

ராஜினாமாவை திரும்ப வாங்க தயார்

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், “ராஜினாமாவை என் விருப்பத்தோடு சுயநினைவோடு யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் என்ன விதிப்படி கொடுக்கணுமோ அதை கைப்பட எழுதி கொடுத்தேன். அதனை தீர விசாரித்து சபாநாயகர் என்னுடைய எம்.எல்.ஏ. பதவி ராஜிமானாவை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி என்னுடைய அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிக்கவும் செய்தார். இதில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை.

அதேசமயம் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என வழக்கு தொடர்ந்தார். அது எதற்காக தொடர்ந்தார் என தெரியாது. ராஜினாமாவை ஏற்கும் முழு அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது. அந்த வழக்கு உடனடியாக முடிந்திருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது. அப்படி ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது என்னுடைய எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா செய்தது ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. அதுவரை என்னை சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.வாக செயல்பட விடுங்கள் என கூறினேன்.

தகுதி நீக்கத்தை விட ராஜினாமா மேல்

எதற்காக எனக் கேட்டால் அம்பாசமுத்திரம் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளைப் பார்க்க ஒரு பிரதிநிதித்துவம் வேண்டும். அந்த அடிப்படையில் என்னை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என கேட்டேன். என்னைப் பொறுத்தவரை என் ராஜினாமாவை உடனடியாக ஏற்க வேண்டும், அம்பை தொகுதிக்கு இடைத்தேர்தல் வர வேண்டும். இன்னும் ஒருபடி மேலே சென்று இதில் சட்ட சிக்கல் ஏற்பட்டால் என்னுடைய ராஜினாவை திரும்ப பெறவும் நான் தயாராக உள்ளேன்.

என்னுடைய முந்தைய தலைமையான அதிமுக எந்தவித காரணமும் கேட்காமல் எம்.எல்.ஏ. பதவியை தகுதிநீக்கம் செய்ய சொல்லி கூறியது. நாங்கள் என்ன தவறு செய்தோம் என எதுவும் கேட்கவில்லை. 13 நாட்கள் கழித்து நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக நீங்கள் என்னை தகுதி நீக்கம் செய்வதை விட நானே முன்வந்து ராஜினாமா செய்தேன் என தெரிவித்தார்.

தவெகவுடன் மனக்கசப்பா

அதுமட்டுமல்லாமல் தவெகவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டதாக பரவும் தகவலுக்கும் இசக்கி சுப்பையா விளக்கமளித்துள்ளார். அதாவது, “நான் தவெகவை விரும்பி ஏற்றுக் கொண்டேன். வாய்ப்பு வழங்கப்படும், வழங்கப்படவில்லை என்பது பற்றி கவலையில்லை. நான் வேட்பாளராக இருந்தால் பார்ப்பதை விட வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் அதிகமாக வேலை பார்ப்பேன். நான் அன்றைக்கே சொன்னது போல முதலமைச்சர் விஜயின் ஒற்றை முகம் இந்த தொகுதிக்கு வந்தாலே மாபெரும் வெற்றி தான். தவெகவைச் சேர்ந்தவர்களும் சரி, இங்கு மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களும் சிறப்பாக செயல்படுகிறார்கள். இடைத்தேர்தல் வந்தால் நிச்சயம் தவெக தான் ஜெயிக்கும்” என கூறியுள்ளார்.

Related Post

congress dmk seat sharing 2026 assembly

திமுக கூட்டணியை காலி செய்தார் ”விஜய்”

Posted by - மே 8, 2026 0
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சியில் அமரப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் முடிவு விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கையில் உள்ளது எதிர்பாராத ட்விஸ்ட்…
Generated Image November 13 2025 5 02PM

பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.?

Posted by - நவம்பர் 13, 2025 0
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பாக தமிழக அரசு 5ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இது சாத்தியமா.?…

இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும்

Posted by - ஜனவரி 3, 2026 0
TN Govt TAPS Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.…
ASS

ஓட்டு மிஷினில் 16வது இடம் விஜய்க்கா.? நோட்டாவிற்கா.? நடந்தது இது தான்- தேர்தல் ஆணையம் லேட்டஸ்ட் அப்டேட்

Posted by - ஏப்ரல் 19, 2026 0
பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு 16வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது ஏன் எனவும், 16வது எண் நோட்டாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.…

பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.!

Posted by - டிசம்பர் 26, 2025 0
கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்ட காரணத்தால் பாமகவில் இருந்து மூத்த தலைவர் ஜி.கே.மணி நீக்கப்படுவதாக அன்புணி அறிவித்துள்ளார். பாமகவில் உட்கட்சி மோதல் பாமகவில் உட்கட்சி மோதல் உச்சத்தை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன