6903ee46 8e25 4e40 a6f9 a4ceb3320b27

காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் – சுகாதாரத்துறை அலர்ட்

103 0

Dengue Face Mask : காய்ச்சல் பாதித்தவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், காய்ச்சலில் பாதிக்கும் குழந்தைகள் உட்பட்டோர் மாஸ்க் அணிவது அவசியம் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்சலால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் பருவ நிலை மாற்றம் காரணமாக சென்னை முழுவதும் உண்ணிகாய்சல்கள் பரவி வருகிறது. உண்ணிகள் மனிதர்களை கடிக்கும் போது மனிதர்களுக்கு உண்ணி காய்ச்சல் நோய் உண்டாகிறது. இந்த காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 301 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 17649 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கர்ப்பிணிகள், முதியவர்கள்- முக கவசம் கட்டாயம்

இதனையடுத்து டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக பொது சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி துறை மூலம் இணைந்து  களப் பணியாளர்களால் வீடுவீடாகச் சென்று டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நோய் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக நாளுக்கு நாள் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வரக்கூடிய நிலையில் காய்ச்சல் பாதித்தவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், காய்ச்சலில் பாதிக்கும் குழந்தைகள் உட்பட்டோர் மாஸ்க் அணிவது அவசியம் என தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்து இருக்கிறது

காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்பாதீர்கள்

முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும் டெங்கு காய்ச்சல் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் மூலம் மற்றவர்களுக்கு இந்த தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதால் குறிப்பிட்ட இந்த நபர்கள் மாஸ்க் அணிவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் இதர பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளுக்கு பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்ச்சல் இரும்பல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும் தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்து இருக்கிறது.

 

 

Related Post

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு… தமிழ்நாடு அரசு உத்தரவு..!

Posted by - மே 17, 2023 0
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப் படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல்…

முன்னாள் அமைச்சர் காலமானார்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்

Posted by - ஏப்ரல் 16, 2024 0
1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில்  சமூக நலத்துறை அமைச்சராக இந்திர குமாரி இடம்பிடித்திருந்தார்.  தொட்டில் குழந்தை திட்டம் உருவாக முக்கிய காரணமாகவும் இவர் திகழ்ந்தார். திமுக…

நடிகர் ராஜேஷ் சாவுக்கு காரணம் இவர்தான்.. ராஜேஷின் தம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - மே 29, 2025 0
சித்த மருத்துவர் 2 மணி நேரம் பேசிக்கொண்ட நேரத்தை இழுத்தடித்ததே நடிகர் ராஜேஷின் மரணத்திற்கு காரணம் என்று அவரது தம்பி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபலமான…

வெயில் அதிகமா இருக்கா..? வருகிறது மழை..

Posted by - ஏப்ரல் 19, 2023 0
தமிழ்நாடு, புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி…

திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை கும்பலை பிடிப்பதில் போலீசாருக்கு திடீர் சிக்கல்

Posted by - பிப்ரவரி 20, 2023 0
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் எந்திரங்களை உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளையடித்தனர். கொள்ளை கும்பலை கைது செய்வதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அரியானா, குஜராத்,…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன