EPS ADMK

EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்

63 0

Agriculture EPS ADMK : சொல் புத்தியும் இல்லாமல், சுய புத்தியும் இல்லாமல் ஏனோ, தானோ என்று செயல்பட்டு தமிழக விவசாயிகளையும், ரேஷன் அரிசியை நம்பியிருக்கும் ஏழை மக்களை த.வெ.க. அரசு வாட்டி வதைப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மழை பாதிப்பு- நெல் மூட்டைகள் சேதம்

மழையின் காரணமாக 5 லட்சம் நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டில் விளையாட்டுப் பிள்ளைகளால் நடத்தப்படும் த.வெ.க. கூட்டணி ஆட்சியில், விவசாயிகளுக்கு ஏற்படும் தொடர் பாதிப்புகள் சொல்லி மாளாத வகையில் உள்ளது. டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை, இந்த பொய்க்கால் குதிரை அரசு முறையாக கொள்முதல் செய்வதில்லை என்று புகார்கள் எழுந்தன. அதே நேரம் அரையும், குறையுமாக கொள்முதல் செய்த நெல்மணிகளை சேமிப்புக் கிடங்குகளில் முறையாக பாதுகாக்காததால் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைந்ததாகச் செய்திகள் வருகின்றன.

 5 லட்சம் நெல் மூட்டைகள் சேதம்

இவைகளையெல்லாம் மிகுந்த அக்கறையோடு சுட்டிக் காட்டினால், குறைகளைக் களைய முறையான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பிரச்சனைகளை திசை திருப்பும் விதத்தில் இந்த த.வெ.க. அரசு அலட்சியப் போக்கோடு நடந்துகொள்கிறது. கடலூர் மாவட்டம் முழுவதும் 120 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இடப் பற்றாக்குறை காரணமாக வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் நெல் மூட்டைகள் முறையாக தார்பாய் கொண்டு மூடாததால், கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையில் நனைந்து கடுமையாக சேதமடைந்துள்ளது வருந்தத்தக்கதாகும்.

இதுபோன்று மழையில் நனைந்து சேதமடைந்த நெல்மணிகளை அரிசியாக்கி புழுத்துப்போன நிலையில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் நிலை ஏற்படும். த.வெ.க. ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், குறித்த நேரத்தில் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் நெல்மணிகள் சேதமடைகிறது. கொள்முதல் செய்த நெல்மணிகளும் முறையான பராமரிப்பு இல்லாததால் மழையில் நனைந்து விணாகிப் போகிறது.

விவசாயிகளை வாட்டி வதைக்கும்தவெகஅரசு

சொல் புத்தியும் இல்லாமல், சுய புத்தியும் இல்லாமல் ஏனோ, தானோ என்று செயல்பட்டு தமிழக விவசாயிகளையும், ரேஷன் அரிசியை நம்பியிருக்கும் ஏழை மக்களையும் வாட்டி வதைக்கும் த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல்லை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு த.வெ.க. அரசை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

Related Post

ஏதாச்சு இருந்தா சொல்லுங்க, விஷாலுக்கு பதிலடி கொடுத்த மேயர்

Posted by - டிசம்பர் 5, 2023 0
விஷால் மார்க் ஆண்டனி வெற்றிக்கு பிறகு பெரும் பலத்துடனும் உற்சாகத்துடனும் இருந்து வருகிறார் நடிகர் விஷால். இவர் அடுத்து மாஸ் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற…

தமிழகத்தில் கொளுத்தப்போகும் வெயில்.. வானிலை ஆய்வு மையம்

Posted by - ஏப்ரல் 14, 2023 0
தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவும் என்று  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் மற்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம்…

மாஃபியா அராஜகம்..! தப்பை தட்டிக் கேட்டால் கொலையா? என்ன நடக்குது தமிழ்நாட்டில்? அரசு வேடிக்கை?

Posted by - பிப்ரவரி 15, 2025 0
மயிலாடுதுறையில் சாராய வியாபாரிகளால் மாணவன் உட்பட இருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தை தட்டிக் கேட்டால் கொலை செய்யும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முக்கிய ஆலோசனை: அமைச்சர்கள் + ஊழியர் சங்கங்கள்

Posted by - டிசம்பர் 22, 2025 0
தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கனவான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் குழு இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது.…

மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம்

Posted by - ஜூன் 19, 2025 0
அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன