Generated Image February 06 2026 10 50AM

Hyundai i20: ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் விலையை குறைத்த ஹுண்டாய்..!

190 0

 Hyundai i20 2026 Price Change: இந்திய சந்தையில் மாருதியின் பலேனோ,டாடாவின் ஆல்டோஸ் உடன் மோதும் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான ஐ20 காரின் விலையை ஹுண்டாய் குறைத்துள்ளது.

25 ஆண்டுகளில் இல்லாத சரிவு:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையானது மிகவும் வேகமாக விரிவடைந்து வருகிறது. இதனால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தில் பல கார் உற்பத்தி நிறுவனங்களும், வலுவான தடத்தை பதிக்க முனைப்பு காட்டி வருகின்றன. அதற்கான சாட்சியாகவே உள்ளூர் கார் உற்பத்தியாளரான மஹிந்த்ரா, வரலாற்றில் முதன்முறையாக ஓராண்டிற்கான ஒட்டுமொத்த விற்பனையில் முதல்முறையாக இரண்டாவது இடத்திற்கு முன்னேறி கவனத்தை ஈர்த்துள்ளது. அதேநேரம், கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து இரண்டாவது இடம் வகித்து வந்த ஹுண்டாய், ஒரே அடியாக நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்த சரிவிலிருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஹுண்டாய் தற்போது ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ப்ராண்டின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் ஆன ஐ20 கார் மாடலின் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

 

ஹுண்டாய் ஐ20 கார் மாடலின் விலை குறைப்பு:

ஹுண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஐ20 கார் மாடலின் குறிப்பிடத்தக்க வேரியண்ட்களின் விலை குறைக்கப்பட்டு, எண்ட்ரி லெவல் வேரியண்ட்களில் இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்கிற்கான அணுகல் எளிதாக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றமானது எரா, மேக்னா எக்சிக்யூடிவ் மற்றும் மேக்னா வேரியண்ட்கள் மீது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், காரின் தொடக்க விலையானது தற்போது ரூ.5.99 லட்சமாக உள்ளது. தொடக்க நிலை வேரியண்டான எரா மீது 87 ஆயிரம் ரூபாய் வரையிலும், மேக்னா மற்றும் மேக்னா எக்சிக்யூடிவ் மாடல்கள் மீது 13 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Related Post

BSNL வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய IFTV திட்டம் – 600+ Live TV சேனல்கள், 75 Mbps இணைய வேகம்!

Posted by - டிசம்பர் 15, 2025 0
BSNL (Bharat Sanchar Nigam Limited) தனது FTTH (Fiber To The Home) வாடிக்கையாளர்களுக்காக IFTV (Intranet Fiber TV) என்ற புதிய வசதியை அறிமுகம்…

ஆந்திராவில் திசைமாறிய திருடர்கள்- கடை, தோட்டத்தில் 450 கிலோ தக்காளி கொள்ளை

Posted by - ஆகஸ்ட் 4, 2023 0
திருப்பதி: தக்காளியின் விலை தங்கத்தின் விலையை போல் நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை உச்சத்தை அடைந்ததால் இல்லத்தரசிகள் தக்காளியை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.…
Director Bharathiraja passes away

Director Bharathiraja : இயக்குனர் பாரதிராஜா மறைவு.!

Posted by - ஜூன் 10, 2026 0
Director Bharathiraja passes away : இயக்குனர் பாரதிராஜா மறைவு திரைத்துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில் அவரது மறைவிற்கு முதலமைச்சர் விஜய், திமுக தலைவர்…

இன்று லாபமழை பொழியப்போகும் டாப் 5 பங்குகள் இவைதான்.. நிபுணர்கள் பரிந்துரைப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!

Posted by - ஆகஸ்ட் 23, 2024 0
பங்குச் சந்தையின் கடைசி நாளான இன்று சில பங்குகள் சந்தை இயக்கச் சக்திகளால் லாபத்தை கொடுக்கும். இல்லையெனில் முந்தைய நாள் அதிக லாபத்தை பதிவு செய்து, இன்று…

Jio-க்கு இனி சிக்கல்.. இந்தியாவில் தனது கடையை விரிக்கும் டாப் பணக்காரர் எலான் மஸ்க்

Posted by - நவம்பர் 9, 2024 0
இந்தியாவின் அம்பானியின் ஜியோ நெட்வொர்க் தான் லீடிங்கில் உள்ள நிலையில் அம்மானிக்குப் போட்டியாக எலான் மஸ்க் இந்திய மார்க்கெட்டுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகிறது. இந்தியா மிகப்பெரிய மக்கள்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன