jana nayagan

JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் – சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? – முழு லிஸ்ட்

108 0

JanaNayagan Censor: முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தில், 12 திருத்தங்களை மேற்கொள்ள தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

JanaNayagan Censor: விஜய் நடிப்பில் உருவாகிய ஒரு திரைப்படம் தணிக்கையில் A சான்றிதழ் வாங்குவது இதுவே முதல்முறையாகும்.

ஜனநாயகன் – A சான்றிதழ்

விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், சென்சார் பிரச்னை காரணமாக முடங்கிக் கிடந்த திரைப்படத்திற்கு, 7 மாத கால கடும் போராட்டத்திற்கு பிறகு தற்போது A சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். விஜய் நடிப்பில் உருவாகிய ஒரு திரைப்படம் தணிக்கையில் A சான்றிதழ் வாங்குவது இதுவே முதல்முறையாகும். இதனால் குறிப்பிட்ட வயது வரம்புக்கு உட்பட குழந்தைகள் இந்த படத்தை திரையரங்கில் பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதுபோக திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு,12 மாற்றங்களை மேற்கொள்ள தணிக்கை வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

ஜனநாயகன் – 12 திருத்தங்கள் என்ன?

தணிக்கை வாரியத்தின் சான்றிதழின்படி, ஒரு புத்தகத்தின் அட்டையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தோன்றும் காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. “அம்பேத்கர் தொடங்கி TVK சட்டம்” என்று குறிப்பிடும் உரையாடல் மாற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆடியோ மற்றும் வீடியோ இரண்டிலும் “டிவிகே” என்ற வார்த்தையின் பயன்பாடு மாற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு காட்சியில் இந்திய தேசியக் கொடி கீழே விழும் வகையில் உள்ள காட்சியை நீக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.  ‘பாகவதான்’, ‘ரங்கநாதர்’ ஆகிய வார்த்தைகளுடன், ‘தே** பை**’ மற்றும் ‘ஒ**’ ஆகிய வார்த்தைகளும் ம்யூட் செய்யப்பட்டுள்ளன.ஆபரேஷன் மெலூஹாவை விளக்கும் உரையாடலில் ‘ஓம்’ என்ற சொல் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறதோ, அங்கெல்லாம் அதை நீக்க வேண்டும் என்பது மற்றொரு மாற்றமாகும். அதே காட்சியில், சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதைக் குறிப்பிடும் ஒரு உரையாடலும் ம்யூட் செய்யப்பட்டுள்ளது அல்லது மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சின்னம் மரியாதையற்ற முறையில் கீழே உருட்டிவிடப்படுவது போன்ற காட்சியை நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், “பொன்னோடா… குடுத்து வச்சிருக்கு, உ*** இருக்குனு” என்று தொடங்கும் முழு வசனமும் ம்யூட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘இந்தியாவை என் காலில் விழ வைக்கிறேன்’ என்ற வார்த்தைகளைக் கொண்ட மற்றொரு வசனமும் ம்யூட் செய்யப்பட உள்ளது. குழந்தையை எரிக்கும் காட்சி நீக்கப்படுவதோடு, ஒரு காட்சியில் சிலுவையில என்ற வார்த்தையும் ம்யூட் செய்யப்பட வேண்டும். கடைசியாக திரைப்படத்தில் ஷீலா ராணி என்ற பெயர் இடம்பெறும் இடங்களில் எல்லாம் அதை மாற்றுமாறு தயாரிப்பாளர்களுக்கு தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ஜனநாயகன் – மொத்த மாற்றம் என்ன?

மொத்தத்தில், 20 வினாடிகள் நீக்கத்திற்கும், 10 வினாடிகளை மாற்றி அமைக்கவும் தணிக்கை வாரியம் உத்தரவிட்டபோதிலும், திரைப்படத்தின் நீளம் 183 நிமிடங்கள் 11 வினாடிகள் என்பதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஜன நாயகன் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். அதன் திரையரங்கு வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர். எச். வினோத் இயக்கி, கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் மமிதா பைஜு ஆகியோரும் நடித்துள்ளனர். இதனிடையே, படம் வரும் ஜுலை 24ம் தேதி வெளியாகும் என, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன.

Related Post

சரவணனை சந்தித்த வேட்டையன்.. ஏன் தெரியுமா?

Posted by - செப்டம்பர் 26, 2023 0
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்…

வாரிசு படத்தின் கதை இதுதானா.. அப்போ படம் வெற்றியா? தோல்வியா?

Posted by - டிசம்பர் 18, 2022 0
வாரிசு விஜய்யின் நடிப்பில் வம்சியின் இயக்கத்தில் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க, ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.  …

ஒரே கதையை 2 படமாக எடுத்து ரசிகர்களை குழப்பிய இயக்குனர்கள்.. என்ன கொடுமை பாஸ் இதெல்லாம்

Posted by - ஜனவரி 1, 2025 0
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்த கதையை பின்பற்றி பல படங்கள் வருவதுண்டு. சில இயக்குனர்கள் வெற்றி பெற்ற படத்தின் நடிகர்களை வைத்து அதே…

குடும்பத்திற்காக கபடி ஆடும் நாயகன்… பட்டத்து அரசன் பட்டையை கிளப்பினாரா?

Posted by - நவம்பர் 26, 2022 0
பல படங்களில் இதுபோன்ற கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் தன் யதார்த்த நடிப்பின் மூலம் ரசிக்க வைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் கபடி என்றால் என்னவென்றே தெரியாத நாயகன்…

10 நாட்களில் மதராஸி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - செப்டம்பர் 15, 2025 0
மதராஸி கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளிவந்த திரைப்படம் மதராஸி. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன