KN Nehru Raid

KN Nehru Raid: அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை – தீவிர சோதனை

128 0

KN Nehru DVAC Raid: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

KN Nehru DVAC Raid: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின், திருச்சி தில்லை நகர் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு..!

தமிழக முன்னாள் அமைச்சர் கே.என் நேருவின் தில்லைநகர் 5வது குறுக்குத் தெருவில் இருக்கும் அவரது வீட்டில்,  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகத் துறையில் அவர் அமைச்சராக இருந்த பொழுது வேலை வாங்கி தருவதாக கூறி ஆயிரம் கோடி ரூபாய் பணம் பெற்றதாக  கூறிய புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை தொடர்பான தகவல் அறிந்த திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் திமுக பிரமுகர்கள் பலரும் கே.என். நேருவின் வீட்டிற்கு முன் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் குவிப்பு – 19 இடங்களில் சோதனை

திமுக பிரமுகர்கள் குவிய தொடங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல்துறை துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து கே என் நேரு அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து அங்கிருந்த கட்சியினரை பார்த்து அலுவலகத்துக்கு செல்லுமாறு கூறினார். திருச்சியில் கே என் நேரு உட்பட தமிழகம் முழுவதும் 19இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில் பாலாஜியை தொடர்ந்து கே.என். நேரு வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் களமிறங்கி இருப்பது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலும் சோதனை..!

சென்னையில் அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், ஆர். ஏ. புரம் உள்ளிட்ட இடங்களில், கே.என். நேரு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். சட்டவிரோதமாக பார்ட்டி ஃபண்ட் என்ற முறையில் பணம் வசூலித்து சொத்துகளை வாங்கி குவித்ததாக எழுந்த புகாரின் பேரிலும், நேருவின் சகோதரர் கே. என். ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறதாம்.

Related Post

தவெக – பாமக கூட்டணி? துணை முதல்வர் அன்புமணி ! விஜய் பக்கா ஸ்கெட்ச்

Posted by - ஏப்ரல் 21, 2025 0
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்த பாமக, இந்த முறை தவெக உடன் கூட்டணி அமைக்க திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும்…

புஸ்ஸி ஆனந்த் இல்ல, விஜய்க்கு அரசியல் நகர்வை வகுத்து கொடுக்கும் பெரிய புள்ளி.. யாரு சாமி இவரு?

Posted by - ஜனவரி 28, 2025 0
விஜயின் அரசியல் பயணத்தை பரந்தூருக்கு முன், பின் என பிரித்துக் கொள்ளலாம். முதல் அரசியல் மாநாடு சாதாரணமான நடிகருக்கு கூடிய கூட்டம் என சொல்லி முடித்து விட்டார்கள்.…

தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால் அடுத்த மாதமே பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிவிடும்: ராமதாஸ்

Posted by - ஏப்ரல் 8, 2024 0
சென்னை: இந்த தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால், அடுத்த மாதமே பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…
Generated Image November 22 2025 5 37PM

டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

Posted by - நவம்பர் 27, 2025 0
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், வட தமிழகத்தை நோக்கி நகர்வதாகவும், இதனால் சென்னையில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வரும்…

மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்

Posted by - ஜூன் 3, 2025 0
கன்னட மொழி குறித்த் கருத்திற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கமலுக்கு கெடு விதித்துள்ள நிலையில் கன்னட திரைப்பட சங்கத்திற்கு கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார் தக்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன