dfgdsf

MK Stalin on Budget: ‘’Blast Blast’-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste’ ஆக இருக்கு.!“ – விளாசிய மு.க. ஸ்டாலின்

105 0

இன்று தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்கள் இந்த பட்ஜெட் பிளாஸ்ட்-ஆக இருக்கும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் வேஸ்ட்-ஆக இருப்பதாகவும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை இன்று நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த பட்ஜெட், பிளாஸ்ட் பிளாஸ்ட்டாக இருக்கும் என மக்கள் எதிர்பார்த்ததாகவும், ஆனால் வேஸ்ட் வேஸ்ட் என சொல்லும்படியாகத் தான் உள்ளது என்றும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவின் முழு விவரங்களை பார்ப்போம்.

“’Blast Blast’-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste’ எனச் சொல்லும்படிதான் இருக்கு!“

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மு.க. ஸ்டாலின், “இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் 2026 பற்றி Reels CM-க்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,

‘Blast Blast’-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste’ எனச் சொல்லும்படிதான் இருக்கு!“ என கிண்டலடித்துள்ளார்.

மேலும், “அதுமட்டுமல்ல, இது திராவிட மாடல் அரசின் திட்டங்களின் Remake Version budget! என்றும் கூறியுள்ளார்.

அதோடு, “மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்! எனவும் விமர்சித்துள்ளார்.

“அதுமட்டுமல்ல,

– ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,

– வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,

– ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,

– முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!“ எனவும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, “மொத்தத்தில், சொந்தமாகவும் யோசிக்காத –

சொன்னதையும் செய்யாத –

சுரத்தில்லாத – புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.“ என்று முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Related Post

dmk e1780464006645

துரதிருஷ்டவசமா..? – துரை வைகோ கருத்தால் துடி துடிக்கும் திமுக

Posted by - ஜூன் 3, 2026 0
“சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் துரதிருஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டனர். அதனால் தவெக அரசுக்கு ஆதரவு கொடுக்க முடியவில்லை” – மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவின்…
Generated Image February 07 2026 10 14AM

பிரேமலதாவின் எதிர்பார்ப்பு தான் என்ன?

Posted by - பிப்ரவரி 7, 2026 0
6 சீட் தருவதாகச் சொல்லும் அறிவாலயமா… அல்லது 7 சீட் தருவதாகச் சொல்லும் கமலாலயமா என்று முடிவெடுக்க முடியாத நிலையில், ‘நாங்களும் ஆட்டத்தில் இருக்கிறோம்’ என்பதைக் காட்ட…

“புலம்பெயர் பிகார் மக்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக இங்கே வாக்களிக்க முடியும்” – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Posted by - ஆகஸ்ட் 4, 2025 0
புலம்பெயர்ந்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக அங்கீகரிப்பது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த பிகார் மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டு வாக்காளர்களாக,…
vijay 2

விஜய் உதயசூரியனுக்கு ஓட்டு போடச் சொன்னாரா? வைரலாகும் வீடியோ- நடந்தது என்ன?

Posted by - மார்ச் 31, 2026 0
திமுக சின்னம் உதய சூரியனுக்கு ஓட்டுப்போடச் சொன்ன தவெக விஜய்? வைரலாகும் வீடியோ- நடந்தது என்ன? தவெக தலைவர் விஜய், தனது தேர்தல் பிரச்சாரத்தில் உதய சூரியனுக்கு…
dmk 2

“ஆட்சியில் பங்கு குறித்து இனி யாரும் பேசமாட்டார்கள்” – ஆர்.எஸ்.பாரதி உறுதி!

Posted by - பிப்ரவரி 14, 2026 0
சென்னை: “கூட்டணி ஆட்சி குறித்து நாளை முதல் யாரும் பேசமாட்டார்கள். விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன