stalin

“தூய சக்தியா… அடுத்த கட்சி எம்எல்ஏக்களை ‘தூக்கும்’ சக்தியா?” – தவெக மீது ஸ்டாலின் பாய்ச்சல்

114 0

“இது தூய சக்தியா அல்லது அடுத்த கட்சி எம்எல்ஏ-க்களைத் தூக்கும் சக்தியா என தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களித்த மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிவிட்டது” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான பிரேமலதா விஜயகாந்த், ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.

ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாருடைய நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கிறது. அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்கள் தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்தான்.

ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது? தூய அரசியல் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், அழுக்கு அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.

பிளவுபட்ட அதிமுக எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி செய்து, அவர்களின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். “உங்களோட தொடக்கமே இப்படி இருந்தா முடிவு எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி எம்எல்ஏ-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களித்த மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிவிட்டது.

முதல்வரே, உங்கள் செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்கிறார்கள். அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன ‘ரிடர்ன் கிஃப்ட்’ கொடுக்கப் போகிறீர்கள் என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியாக இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும்’ என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Post

மெட்ரோவுக்கு மத்திய அரசு கொடுத்த ரூ.21,000 கோடியில் ரூ.15,120 கோடி என்ன ஆனது?- ஹெச்.ராஜா

Posted by - செப்டம்பர் 14, 2024 0
மெட்ரோவுக்கு மத்திய அரசு கொடுத்த ரூ.21,000 கோடியில் ரூ.15,120 கோடி என்ன ஆனது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார் .கடந்த ஆண்டு டிசம்பரில்…
vijay 3

திருச்சியில் பின்னடையும் விஜய்.! பெரம்பூரில் முன்னிலை.! லேட்டஸ்ட் அப்டேட் இதோ..

Posted by - மே 4, 2026 0
Tamil Nadu Election Results 2026: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் முன்னிலையிலும், திருச்சி கிழக்கு…

பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் – தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?

Posted by - ஜூலை 29, 2025 0
மத்திய பாஜக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்து இருப்பது, தமிழ்நாடு அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி ஓ.பன்னீர்…
vijay.ng

’உணர்வுப்பூர்வமான பிரச்னை’ மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த முதல்வர் விஜய்..!

Posted by - ஜூன் 19, 2026 0
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணைக் கட்ட தொடர்ந்து தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், அந்த மாநில அரசின் திட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் அரசினர்…

அதிமுகவுக்கு நயினார்… ஓபிஎஸ் – தினகரனுக்கு அண்ணாமலை!

Posted by - டிசம்பர் 11, 2025 0
அதிமுக தலைமைக்குப் பிடிக்காத தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அதிக நெருக்கமாக இருப்பதில் யாருக்கும் வியப்பில்லை. ஆனால், தங்களுக்குப் பிடிக்காத நபரான…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன