anbumani

‘ஒரு லட்சம் அரசு வேலை, சிலிண்டருக்கு ரூ.300 மானியம், 5 புதிய மாவட்டங்கள்’ – பாமக நிழல் பட்ஜெட் அம்சங்கள்

97 0

சென்னை: ‘ஒரு லட்சம் பேருக்கு அரசுவேலை, மது விலக்கு, பழைய ஓய்வூதிய திட்டம், சிலிண்டருக்கு ரூ.300 மானியம், 5 புதிய மாவட்டங்கள், முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி’ உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பாமகவின் நிழல் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.

பாமகவின் 24-வது நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி சென்னை தி.நகரில் வெளியிட்டார். அருகில் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, எம்எல்ஏ வைத்தியலிங்கம், செய்தி தொடர்பாளர் பாலு மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பாமகவின் நிழல் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

• 2026-27 ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.6,71,891 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.2,04,530 கோடி அதிகம். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.2,17,945 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.

• நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.6,96,149 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.6,10,712 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

• சமூகநீதி சர்வே: ஆளுநர் உரையில் உறுதியளிக்கப்பட்டவாறு தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே பணிகள் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கப்படும்.

• ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை: சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 5 ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும். முதல்கட்டமாக 2026-27ஆம் நிதியாண்டின் எஞ்சியுள்ள ஆறு மாதங்களில் 1 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

Related Post

Tasmac shop holiday

Tasmac shop holiday : தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு லீவு.! குடிமகன்களுக்கு அலர்ட்.! வெளியான முக்கிய அறிவிப்பு

Posted by - ஆகஸ்ட் 25, 2026 0
Tasmac Shop Holiday : தமிழகத்தில் நாளை அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்தால் சட்ட ரீதியாக…

திமுக செய்யும் ஓவர் அராஜகம் ..கோட் படத்துக்கு வரும் பிரச்சனைகளை முன்கூட்டியே கணித்த தளபதி

Posted by - செப்டம்பர் 2, 2024 0
செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு கோட் படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு எதிராக திமுகவினர் பலவிதமான தடைகளை போட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த…

இந்த வருடமும் நாங்க தான்.. சம்பவம் செய்த மாணவிகள்-தேர்ச்சி விகிதம் இது தான்

Posted by - மே 8, 2025 0
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விட அதிக சதவீகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் 12 ஆம்…

மறந்துட்டீங்களா முதல்வரே..! “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?

Posted by - மார்ச் 8, 2025 0
தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான கொள்கை திட்டம் அறிவித்து ஓராண்டகியும், அதை செயல்படுத்துவது தொடர்பாக இதுவரை ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை. தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான கொள்கை திட்டம்…

மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது, கண்ணீரில் குடும்பம்

Posted by - பிப்ரவரி 20, 2023 0
மயில்சாமி மறைவு மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது, கண்ணீரில் குடும்பம் நடிகர் மயில்சாமி நேற்று உடல்நல குறைவு காரணமாக காலமானார். திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன