Tasmac shop holiday

Tasmac shop holiday : தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு லீவு.! குடிமகன்களுக்கு அலர்ட்.! வெளியான முக்கிய அறிவிப்பு

124 0

Tasmac Shop Holiday : தமிழகத்தில் நாளை அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை

டாஸ்மாக்- மதுபான விற்பனை

தமிழகத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகள் மூலம் தினமும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டப்படுகிறது. அதிலும் பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்படங்களில் மொத்த வசூலை ஒரே நாளில் வாரி சுருட்டி விடும். அந்த அளவிற்கு மதுபானம் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனிடையே மதுப்பழக்கத்தை குறைக்க பல விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

இதனிடையே டாஸ்மாக் கடைகளுக்கு வார விடுமுறையோ, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என விடுமுறை பண்டிகை நாட்களிலும் விடுமுறை விடப்படுவது இல்லை. அதே நேரம், ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு நாள்,  திருவள்ளுவர் நாள்,மீலாது நபி நாள்சுதந்திர நாள் (ஆகஸ்ட் 15), மே தினம் (மே 1) காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), ஆகிய நாட்களில் விடுமுறை அறிவிக்கப்படும், மேலும் கோயில், மசூதி, தேவாலய திருவிழாக்கள் நேரத்திலும் டாஸ்மாக் கடைகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படும். இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி மிலாது நபி பண்டிகையையொட்டி நாளைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிலாது நபி- டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 26.08.2026 (புதன்கிழமை) அன்று மிலாதுன்நபி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள்,

மதுபான கடைகள், பார்களுக்கு விடுமுறை

FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3-(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையங்கள்/மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 26.08.2026 (புதன்கிழமை) அன்று மிலாதுன்நபி தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார். இதே போல தமிழகம் முழுவதும் அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

Related Post

வேட்டையன் திரைவிமர்சனம்…

Posted by - அக்டோபர் 10, 2024 0
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வேட்டையன். ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின்…

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.. துணைவேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு

Posted by - நவம்பர் 18, 2023 0
சென்னை: அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். நடப்பாண்டு மாணவர்கள் பழைய தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என்றும்,…

ராமேசுவரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பக்தர்கள்

Posted by - பிப்ரவரி 20, 2023 0
இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களில் ராமேசுவரமும் ஒன்று. காசி செல்லும் பக்தர்கள் கங்கை நீரை எடுத்து வந்து ராமேசுவரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது…

ஆடியோ லான்ச் முக்கியமே இல்லைன்னு விஜய் போட்ட முட்டுக்கட்டை..

Posted by - ஆகஸ்ட் 9, 2024 0
எப்பொழுதுமே விஜய் புது படங்களின் ஆடியோ லான்ச் திருவிழா போல் கலைக்கட்டும். ஆனால் கோட் படத்திற்கு ஆடியோ லான்ச் வேண்டாம் என்று விஜய்யே இந்த முறை முட்டுக்கட்டை…

பெண் தோழியுடன் தொடர்ந்த பழக்கம்… வழக்கறிஞரை கும்பலுடன் வந்து தாக்கிய கணவர் – நடந்தது என்ன?!

Posted by - ஆகஸ்ட் 7, 2023 0
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் செந்தில் குமார். இவர் சட்டப் படிப்பு படித்தபோது உடன் பயின்ற மதுரையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இவருக்கும் நீண்ட நாள்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன