tngovernm

ஒரே பணியிடத்தில் 5 ஆண்டுகளா.? ஊழியர்களுக்கு செக்- லிஸ்ட் ரெடி செய்யும் அரசு

136 0

Health Department Employees List : ஒரே பணியிடத்தில் 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் நிர்வாக அலுவலர், இளநிலை நிர்வாக அலுவலர், அலுவலகக் கண்காணிப்பாளர், உதவியாளர் ஆகியோரின் விவரங்களை வரும் 23-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சுகாதாரத்துறையின் இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது

ஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியா.?

அரசுக்கும் பொதுமக்களுக்கும் பாலமாக இருந்து செயல்படுவது அரசு ஊழியர்கள் தான், எனவே அரசு என்ன தான் திட்டங்கள் செயல்படுத்தினாலும், அந்த திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்றால் அரசு ஊழியர்களின் பங்கு முக்கியமானது. எனவே அரசு ஊழியர்களுக்காக பல்வேறு சலுகைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சுப் பணிகளில் பணியாற்றும் நிர்வாக அலுவலர், இளநிலை நிர்வாக அலுவலர், அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் ஒரே பணியிடத்தில் 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறார்களா என்பது குறித்த விவரங்களை கணக்கெடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

23 ஆம் தேதிக்குள் லிஸ்ட்

அந்த வகையில், சுகாதாரத்துறையின் இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது  இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில்,சம்பந்தப்பட்ட அலுவலர்களின் விவரங்களை ஒரே பணியிடத்தில் 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபவர்களின் பட்டியலை தயார் செய்து வருகிற 23.09.2026-க்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அலுவலர்களின் பணிப்பதிவு விவரங்களையும் அறிக்கையுடன் இணைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் பணியிட மாற்றம்

மேலும் பதவி உயர்வு காரணமாக வேறு பணியிடத்துக்கு மாற்றப்பட்டு, பின்னர் மீண்டும் கடைசியாக பணியாற்றிய பணியிடத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டவர்களின் விவரங்களையும் வழங்குமாறு அந்த கடித்ததில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து இயக்குநரகங்களும் தங்களது நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கண்ட விவரங்களை தொகுத்த அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் “மிகவும் அவசரம்” (MOST URGENT) எனக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடித்ததால்  ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சொந்த ஊரில் ஒரே இடத்தில் பணியாற்றும் தங்களை வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுவிடுவோமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

Related Post

“நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்” பயங்கரமாக கலாய்த்த இபிஎஸ்

Posted by - மே 17, 2025 0
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்தவில்லை என ஸ்டாலின் அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.…

ஸ்பெயின் நிறுவனங்களுடன் ரூ.3,440 கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

Posted by - பிப்ரவரி 7, 2024 0
நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரையை கேட்டேன்… ரசித்தேன்… சிரித்தேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று…

சென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்

Posted by - டிசம்பர் 13, 2023 0
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. அந்த மாதத்தில் மழை குறைந்திருந்த நிலையில், அதற்கு அடுத்த மாதத்தில் (நவம்பர்) பரவலாக மழை…

திமுக செய்யும் ஓவர் அராஜகம் ..கோட் படத்துக்கு வரும் பிரச்சனைகளை முன்கூட்டியே கணித்த தளபதி

Posted by - செப்டம்பர் 2, 2024 0
செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு கோட் படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு எதிராக திமுகவினர் பலவிதமான தடைகளை போட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த…

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: திண்டுக்கல், தென்காசியில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை!

Posted by - ஆகஸ்ட் 20, 2025 0
சென்னை: திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்பட 10 இடங்களில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன