%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF

பதவிக்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பொய்யாக கொட்டும் வன்னி அரசு.! லிஸ்ட் போட்டு வெளுத்து வாங்கிய கோவி.செழியன்

72 0

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகத் தொடங்கப்பட்ட இயக்கமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு பொறுப்பில்லாமல் நடந்து கொண்டு விட்டு, இப்போது பாரதிதாசனை ’’தம்பி’’ என்று உருகுகிறார் என முன்னாள் அமைச்சர் கோவி .செழியன் பதிலடி கொடுத்துள்ளார்.

மாணவன் பாரதிதாசன் கல்வி உதவி தொகை

மாணவன் பாரதிதாசனுக்கு கல்வி உதவி தொகை தொடர்பாக கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டு வரும் நிலையில், முன்னாள் முதலைமைச்சர் ஸ்டாலின், கூறுகையில் ’’பாரதிதாசனுக்கு நிதியை வழங்க முடியாது என்றால், திமுக-வும் தமிழ்நாட்டு மக்களும் இணைந்து மாணவரின் முழு கல்விக் கட்டணத்தையும் ஏற்று அவரைப் படிக்க வைப்போம்’’ என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இதற்கு பதில் அளித்த அமைச்சர் வன்னி அரசு, ’’அவ்வளவு அக்கறை இருக்கிறது என்றால், கடந்த முறை ஏன் எல்லா மாணவர்களுக்கும் கொடுக்கவில்லை?’ என பதில் கேள்வி கேட்டிருந்தார்.

பழிசொல்லை தவிர்க்க வியாக்கியானம் பேசும் அமைச்சர்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் மாணவன் பாரதிதாசனை வஞ்சித்துவிட்டு, ஆதாரங்கள் எல்லாம் அள்ளிப் போட்ட பிறகு, பழிசொல்லை தவிர்க்க வியாக்கியானம் பேசிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் வன்னியரசு அவர்கள். ’’பாரதிதாசனுக்கு நிதியை வழங்க முடியாது என்றால், திமுக-வும் தமிழ்நாட்டு மக்களும் இணைந்து மாணவரின் முழு கல்விக் கட்டணத்தையும் ஏற்று அவரைப் படிக்க வைப்போம்’’ என  எங்கள் தலைவர் சொன்ன பிறகுதானே ’’நிதி வழங்கப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிடுகிறீர்கள்!

திமுக ஆட்சியில் உதவித்தொகை

ஏழை எளிய பட்டியல் சமூக மாணவர்கள் அயல்நாடுகள் சென்று உயர்கல்வி பயில பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கத்தோடு எங்களின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த திட்டம்தான் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம்! இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 2021-22 -ல் ரூ.5.31 கோடி என்பது 2025-26-ஆம் ஆண்டில் ரூ. 84.87 கோடியாக உயர்த்தப்பட்டது. பயனாளிகளின் எண்ணிக்கையும் 2021-22 இல் 9 என்பது 2025-26 இல் 213 ஆக உயர்ந்துள்ளது.

’அவ்வளவு அக்கறை இருக்கிறது என்றால், கடந்த முறை ஏன் எல்லா மாணவர்களுக்கும் கொடுக்கவில்லை?’ என எங்களைப் பார்த்து கேள்வி எழுப்பும் வன்னியரசு இந்தப் புள்ளிவிவரத்தை தெரிந்து கொண்டு பேச வேண்டும். நிதி தரவில்லை என்றால் எப்படி நிதி ஒதுக்கீடு உயர்ந்தது? பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வாறு கூடியது?   பதவிக்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பொய்களாக கொட்டுவதை அமைச்சர் வன்னியரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வஞ்சகத்துடன் பழிவாங்கல் நடவடிக்கை

திமுக ஆட்சியில் எந்தத தொய்வும் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த இந்த திட்டம், தவெக ஆட்சியில் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  மாணவர் பொதுவெளியில் கேட்டுவிட்டார் என்ற வஞ்சகத்துடன் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டது கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமூக வலைதளங்களில் தமது ஆதரவாளர்களைக் கொண்டு  அந்த மாணவனை அசிங்கப்படுத்துவதை பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தவறுகளை மறைக்க பொய்

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகத் தொடங்கப்பட்ட இயக்கமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு பொறுப்பில்லாமல் நடந்து கொண்டு விட்டு, இப்போது பாரதிதாசனை ’’தம்பி’’ என்று உருகுகிறார். இது கூட அந்த மாணவன் சிந்திய கண்ணீரும், எங்கள் தலைவர் ’’செலவை ஏற்று படிக்க வைப்போம்’’ என சொன்ன பிறகுதானே நடக்கிறது? தன்னுடைய தவறுகளை மறைக்க பொய்களை சொல்லி மடைமாற்ற பார்க்கிறது இந்த அரசு! அதற்கு உடந்தையாக இருக்கிறார் அமைச்சர் வன்னியரசு என கோவி செழியன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

தன்னெழுச்சியாக சேரும் தவெக – அதிமுக தொண்டர்கள்! – கனவு சிதைவதால் கலங்கும் தினகரன்

Posted by - அக்டோபர் 10, 2025 0
கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென விஜய் மீது பாய ஆரம்பித்திருக்கிறார். கூடவே,…
vairamuthu

Vairamuthu: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்களை சாடிய வைரமுத்து.. நன்றியுணர்வு மீது சந்தேகம்!

Posted by - ஜூன் 9, 2026 0
திமுக தோல்விக்கு காரணமானவர்கள் என நீங்கள் சுட்டிக்காட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க இது சரியான நேரம் கிடையாது. ஏனென்றால் எல்லோர் மீது தவறு இருந்தால் யார் மீது…

பாத்துட்டே இருங்க எல்லோருக்கும் வேட்டு வைக்கப் போகிறேன் – நடிகர் மன்சூர் அலிகான் அதிரடி..!

Posted by - மார்ச் 26, 2024 0
எதிர்வரும் மக்களவை தேர்தலில் வேலூர் மக்களவை தொகுதியில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்காக தனது வேட்புமனுவை…

97.37 லட்சம் பேர் பெயர் நீக்கப்பட்டது

Posted by - டிசம்பர் 20, 2025 0
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் Special Intensive Revision (SIR) பணிக்குப் பிறகு, மாநில முழுவதும் 97,37,832 பேர் வழக்கமான வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் புதிய…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன