TNASSEMBLY 1

‘அண்ணன் ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டுக்கே பவர் போய்டுச்சு’ – சட்டப்பேரவையில் சம்பவம் செய்த உதயநிதியின் மாஸ் ஸ்பீச்

126 0

அண்ணண் பவருக்கு வந்ததால், தமிழ்நாட்டிற்கே பவர் போய்விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சட்டப்பேரவையில் பேச்சு

விஜய் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்வெட்டில் நம்பர் 1 தொகுதியாக பெரம்பூரை மாற்றியுள்ளதாக சட்டபேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நக்கலடிக்கும் விதமாக பேசியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு பவர் போய்விட்டது

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி உதயநிதி ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது மின்வெட்டு தொடர்பாக பேசும்போது, முதலமைச்சர் விஜயை விமர்சிக்கும் விதமாக பேசினார். அண்ணன் பவருக்கு வந்தால் மாற்றம் வரும் என்றார்கள்; ஆனால், தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது என்று பேசினார். மேலும், விஜய் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்வெட்டில் நம்பர் 1 தொகுதியாக பெரம்பூரை மாற்றியுள்ளதாக கூறினார். மேலும், தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதா? என்று உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மின்வெட்டுக்கு காரணம் என்ன? –  அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

மின்சாரத்துறையில் இரண்டரை லட்சம் கோடி இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் இந்த துறையில் எந்த கட்டமைப்புகளும் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக விரிவான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும். அந்த அறிக்கையில், மின்சாரத்துறையில் எத்தனை ஆட்கள் வேலைக்கு எடுக்கப்பட்டனர் என்பது பற்றி இருக்கும். இந்த துறையில் 70 ஆயிரம் பணியிடங்கள் இருக்கிறது. கடந்த பத்து நாட்களில் இதனை எல்லாம் சீரமைக்க 125 குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக்குழுக்கள் எங்கெல்லாம் மின்வெட்டு உள்ளதோ, அதனை சரி செய்து விடுகிறது. மின்வெட்டு தொடர்பாக பொத்தாம்பொதுவாக குற்றச்சாட்டு வைக்கக்கூடாது. எங்கெல்லாம் ஃபியூஸ் திருடப்பட்டதோ அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு நாளும் 55 இடங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதில் 35 இடங்களில் சரிசெய்யப்படுகிறது.

செந்தில் பாலாஜியின் விளக்கம்

கடந்த 5 ஆண்டுகளில் சீரான் மின் விநியோகத்திற்கு 393 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் பெரும்பான்மையாக முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன.கடந்த 5 ஆண்டுகளில் புதிதாகவும், பழுந்தடைந்த என 90 ஆயிரம் மின்மாற்றிகள் மாற்றி சீரமைக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரிக்கும்போது, அதற்கான ஏற்பாடுகளை நிர்வாக ரீதியாக சரிசெய்வது அரசு உடைய கடமை ஆகும். ஒரு அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக அந்த துறையுடைய அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டங்களை நடத்தி என்னென்ன குறைபாடுகள் உள்ளன. அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பது அரசுடைய கடமை, துறையுடைய கடமை. எனக்கு தெரிந்தவரை இதுவரை மின்துறையில் அதிகாரிகளின் கூட்டம் நடைபெறவில்லை. இதேயேதான், அங்கு பணியாற்றுபவர்களும் கூறுகிறார்கள். இப்போது இருக்கக்கூடிய பணியாளர்களை வைத்துதான் கடந்த 5 ஆண்டுகளில் சீரான மின் விநியோகத்தை கொடுத்தோம். எனவே கடந்த காலங்களில் இருக்கக்கூடிய குறைகளை தொடர்ச்சியாக ஒரே கருத்துகளை முன்வைப்பதைவிட, இந்த அரசு துறையின் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி சீரான மின் விநியோகம் செய்ய இந்த அரசு முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், 90 ஆயிரம் டிரான்ஸ்பார்மர் வாங்கியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். அதில், 40 ஆயிரம் டிரான்ஸ்பார்மர் வாங்கியதற்காக சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

Related Post

cmvijayofficers

CM Vijay: ”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” – அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு

Posted by - ஜூன் 30, 2026 0
CM Vijay Drugs Case: போதை பொருட்களை ஒழிக்கும் விவகாரத்தில் தவெகவினர் சிக்கினால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்க, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய்…

லாக்கப் மரணம்; விஜய்- முதலமைச்சர் என்று குறிப்பிடாமல் உள்துறை அமைச்சர் என்றே மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டுள்ளார்.

Posted by - ஜூலை 1, 2025 0
சிவகங்கை காவல்துறை மரணத்தில் திமுக அரசை அராஜக அரசு என்றும், சிறப்பு விசாரணைக்குழு விசாரணை தேவை என்றும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறை…
covai

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீஸார் – நடந்தது என்ன?

Posted by - நவம்பர் 4, 2025 0
கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட 3 பேரும் கோவை…
EPS ADMK

EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்

Posted by - செப்டம்பர் 22, 2026 0
Agriculture EPS ADMK : சொல் புத்தியும் இல்லாமல், சுய புத்தியும் இல்லாமல் ஏனோ, தானோ என்று செயல்பட்டு தமிழக விவசாயிகளையும், ரேஷன் அரிசியை நம்பியிருக்கும் ஏழை…

“நைட்டி”.. மனித நுரையீரலை மசாலா தடவி சாப்பிட்டாராம்.. கல்லீரலை கூட விடல.. வெறிபிடித்த “ஹோமோ” டாக்டர்

Posted by - நவம்பர் 25, 2023 0
தஞ்சாவூர்: கும்பகோணம் போலி சித்த மருத்துவர் கேசவமூர்த்தி செய்த காரியத்தை பார்த்து, அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் தஞ்சை போலீசார். அவரது வீட்டில் தோண்ட தோண்ட எலும்புகள் கிடைத்து…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன