tvkvijay

உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக

140 0

உதயநிதி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும்படி, மாநில மகளிர் ஆணையத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

உதயநிதி சர்ச்சை பேச்சு

தமிழகத்தில் திமுக ஆட்சியை இழந்த நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக திமுக இளைஞர் அணி செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான உதயநிதி, தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது நடிகை திரிஷா தொடர்பாக சர்ச்சைக்குரிய வார்த்தையை பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தவெகவினர் உதயநிதி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அடுத்த நாள் காலையில் சென்னையில் அவரது வீட்டில் வைத்து உதயநிதி கைது செய்யப்பட்டார்.

உதயநிதியை கைது செய்த தஞ்சை போலீஸ்

சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு உதயநிதியை போலீஸார் கைது செய்து அழைத்து சென்ற நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி அன்றைய தினமே விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் உதயநிதிக்கு அடுத்த அதிர்ச்சி கொடுக்கும் வகையில்,  உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க, மாநில மகளிர் ஆணையத் திற்கு, தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது. அந்த வகையில், . உதயநிதியின் பேச்சு குறித்து, த.வெ.க., சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளரும், வழக்கறிஞருமான ஆதித்ய சோழன், கடந்த 4ம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தில் இணையதளம் வாயிலாக புகார் அளித்திருந்தார்.

உதயநிதி மீது நடவடிக்கை- மகளிர் ஆணையம் உத்தரவு

இந்த புகாரில் பெண்கள் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஆபாசமாக பேசியதாக வீடியோ ஆதாரங்களோடு பதிவு செய்திருந்தார். மேலும் பெண்கள் தொடர்பாக ஆபாசமாக பேசிய உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த புகாரை விசாரித்த, தேசிய மகளிர் ஆணையம், உதயநிதி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி, தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும்படி, மாநில மகளிர் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. எனவே மாநில மகளிர் ஆணையம் விரைவில் உதயநிதிக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

dmk mk stalin

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

Posted by - ஏப்ரல் 20, 2026 0
தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கரூரில் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய…

பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!

Posted by - ஜூலை 23, 2025 0
அதிமுக கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வருவதற்காக பாஜக-வை கூட்டணியில் இருந்து வெளியேற்ற எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற…

இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும்

Posted by - ஜனவரி 3, 2026 0
TN Govt TAPS Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.…
CM Vijay 4

CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!

Posted by - ஜூலை 30, 2026 0
தொடர்ச்சியாக விஜய் ஆய்வு செய்வது இணையத்தில் எதிர்கருத்துகளையும் பெற்று வருகிறது. ரீல்ஸ் போடவும், போட்டோஷூட் எடுக்கவும் அவர் இந்த ஆய்வை பயன்படுத்திக் கொள்கிறார் என சகட்டுமேனிக்கு விமர்சனத்தை…

விரக்தியில் விஜய்! கூவி கூவி அழைத்தும் கூட்டணிக்கு வராத கட்சிகள்.. மக்களே இனி துணை!

Posted by - ஜூலை 31, 2025 0
நடிகர் விஜய் தன்னுடைய தவெக தலைமையிலான கூட்டணிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தும் யாரும் வராததால் தனித்தே களமிறங்குவார் என்று கருதப்படுகிறது. தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன