udhay

Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?

98 0

ரத்து செய்யப்பட்ட நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 2 மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவி நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தில் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் கசிவால் மறுதேர்வு 

நாடு முழுவதும் கடந்த மே 3ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 2 லட்சம் மருத்துவ இடங்கள் உள்ள நிலையில் 23 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். இதில் தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1.4 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதியிருந்தனர். ஆனால் வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதுதொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு சிபிஐ நடத்திய விசாரணையில் இதுவரை மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் ரத்து செய்யப்பட்ட நீட் மறுதேர்வு நாளை (ஜூன் 21) நடைபெறவுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து மாணவிகள் தற்கொலை

இந்த நிலையில் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட மன உளைச்சலால் சில தினங்களுக்கு முன் கோவையில் அனு கீர்த்தனா என்ற மாணவி தற்கொலை செய்துக் கொண்டார். இது மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த சோகம் மறைவதற்குள் அடுத்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபிகா இரண்டாவது முறையாக இந்தாண்டு நீட் தேர்வு எழுதியிருந்தார். ஆனால் அது ரத்து செய்யப்படவே நாளை நடைபெறவிருந்த மறுதேர்வு எழுதவும் தயாராகி வந்தார்.

ஆனால் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்த கோபிகா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது மக்களிடையே மிகப்பெரிய கவலையாக மாறியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை கோபிகா, தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எப்படியும் டாக்டராகிவிடுவார் என்று ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகளை, நீட் அரக்கனிடம் பலி கொடுத்து தவிக்கும் கோபிகாவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட நீட், வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் தேர்வு அறையில் உடல் சோதனை என மாபெரும் உயிர்கொல்லும் மோசடி ஆகியிருக்கிறது.  மோசடியான நீட் தேர்வை மத்திய அரசு ஒழித்தே ஆக வேண்டும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும் – சட்ட போராட்டத்தையும் த.வெ.க அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும். இந்த நேரத்தில், நீட் தேர்வுக்குத் தயாராகும் தம்பி – தங்கைகள், தேர்வு மன அழுத்தத்திற்கு ஆளாகாமலும், தவறான முடிவுகளை எடுக்காமலும் தன்னம்பிக்கையுடன் இச்சூழலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Post

‘கீழயே நில்லுங்க – முகத்தை பார்க்க மாட்டேன்’ புஸ்ஸி ஆனந்த் மீது கடும் கோபத்தில் விஜய்..!

Posted by - ஜூலை 31, 2025 0
’விஜயை வைத்து புதுச்சேரியில் முதல்வர் ஆவதுதான் புஸ்ஸி ஆனந்தின் நீண்ட நாள் திட்டம் என்பதை விஜய் மெல்ல, மெல்ல உணரத் தொடங்கிவிட்டார்’தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி…

“சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை, எங்கே போனார் அப்பா.?“

Posted by - ஜூலை 19, 2025 0
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு திருவாரூரில் பேசியபோது, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘மக்களை…
ER

திமுகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்.! டெல்டா மாவட்டத்தை தட்டி தூக்கிய ஸ்டாலின்

Posted by - ஜனவரி 21, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைந்து வரும் நிலையில் தற்போது முன்னாள்…
vijay cm

TVK Vijay: எதுக்குயா தவெக? திமுக, அதிமுகவே ஆண்டுட்டு போலாமே..! தூயசக்தி பிராண்டை இழக்கும் CM விஜய்?

Posted by - மே 26, 2026 0
TVK Vijay: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசியல் நிலைப்பாடுகளை கண்டு, இதற்கு திமுக மற்றும் அதிமுகவே தமிழ்நாட்டை ஆளலாமே என நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.TVK…
Generated Image November 03 2025 10 32AM

எனக்கு வெட்கமாக இருக்கிறது; பதவியை துறக்க விரும்புகிறேன்: நேரு முன்னிலையில் திமுக மாவட்டச் செயலாளர் குமுறல்

Posted by - நவம்பர் 3, 2025 0
திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளராக க.வைரமணி பதவி வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு, அமைச்சரின் சொந்த தொகுதியான…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன