%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D 2

விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!

168 0

தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகளாக தவெக அறிவித்த சில அறிவிப்புகள் செயல் வடிவம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கவுள்ள நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து தமிழக வெற்றிக் கழக பொறுப்பேற்றுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் கடந்த 2 மாதங்களில் பல்வேறு விதமான மாற்றங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. அதேசமயம் முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. பல அறிவிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படி அதிரடி நடவடிக்கை ஒருபுறமிருக்க தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

அன்றைய நாளில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகளாக தவெக அறிவித்த சில அறிவிப்புகள் செயல் வடிவம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

பட்ஜெட் கூட்டத்தொடர் நேரலை செய்யப்படும் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது மற்ற கட்சிகளின் நடவடிக்கைகளையும் மக்கள் கவனிக்கத்தக்க வகையில் மாற்றியுள்ளது. இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதாவது, தவெக அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாவிட்டால் அதுதொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டும். நேரலை செய்யப்படும் என்பதால் திமுக எம்.எல்.ஏ.,க்கள் சரியாக நடந்துக் கொள்ள வேண்டும். திமுக அரசில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேச வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடர்பாக தவெக அரசின் நிர்வாக தோல்வியை குறிப்பிட்டு விவாதிக்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் பட்ஜெட் வெளியான பின் அதிலுள்ள குறைகளை பற்றி பேச வேண்டும். அதுமட்டுமல்லாமல் அதனை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தாக சொல்லப்பட்டுள்ளது.

விஜய் விமர்சனங்களுக்கு பதிலடி கிடைக்குமா?

கடந்த ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை ஆற்றினார். அப்போது கட்சி நிதி பற்றி பேசியவுடன் திமுக வெளிநடப்பு செய்தது. இதனை கரூர் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசிய விஜய் சட்டசபையின் கதவுகளை அடைக்க வேண்டும் என திமுக வெளியேறியதை கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கெல்லாம் சேர்த்து இந்த முறை உதயநிதி  ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏ.,க்கள் பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் விஜயின் தவெக அரசு குறைகளை மக்களிடத்தில் சேர்க்க சட்டசபை கூட்டத்தொடர் நல்ல வாய்ப்பாக அமையும் என ஸ்டாலின் நினைப்பதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Post

Gemini Generated Image mqant6mqant6mqan

முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Posted by - மார்ச் 31, 2026 0
சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் ஸ்டாலின் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி முதலமைச்சர் ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு 3 கோடியே…
Generated Image February 07 2026 10 14AM

பிரேமலதாவின் எதிர்பார்ப்பு தான் என்ன?

Posted by - பிப்ரவரி 7, 2026 0
6 சீட் தருவதாகச் சொல்லும் அறிவாலயமா… அல்லது 7 சீட் தருவதாகச் சொல்லும் கமலாலயமா என்று முடிவெடுக்க முடியாத நிலையில், ‘நாங்களும் ஆட்டத்தில் இருக்கிறோம்’ என்பதைக் காட்ட…
Generated Image November 20 2025 6 37PM

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக

Posted by - நவம்பர் 20, 2025 0
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தநிலையில் கடந்த 2 மாதமாக அமைதி காத்து வந்த விஜய், வருகிற டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில்…
annamalai

Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக

Posted by - ஜூன் 6, 2026 0
தமிழ்நாட்டில் அண்ணாமலையும் புதிய கட்சி தொடங்க உள்ள நிலையில், பாஜக-வின் வளர்ச்சி கேள்விக்குறியாகி உள்ளது. இந்தியா முழுவதும் பாஜக-வின் ஆதிக்கம் இருந்தாலும் தமிழ்நாடு அவர்களுக்கு சிம்மசொப்பனமாகவே திகழ்ந்து…
Generated Image November 17 2025 11 32AM

பிரசாந்த் கிஷோரிடம் இருந்து பாடம் கற்பாரா விஜய்?

Posted by - நவம்பர் 17, 2025 0
குஜராத் முதல்வராக இருந்த மோடியை நாட்டின் பிரதமராக உயர்த்த வியூகம் வகுத்தவர், பிஹாரில் நிதிஷ்குமார், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன